Searching...

Popular Posts

Tuesday, November 27, 2012

காமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - 1

11:15 AM

காமெடி கும்மியும் பட்டிகாட்டான் ஜெய்யும் - திகில் நிறைந்த அமானுஷ்ய தொடர். அமானுஷ்யம் - 1  

தமிழ் எழுதும் வலையுலகம், இதுவரை கண்டிராத சங்கங்களும் இல்லை சண்டைகளும் இல்லை இருந்தும் புதியதாக நீங்கள் யாரடா, என்ன நல்ல வார்த்தைக்கு டா சங்கம் ஆரம்பித்து இருக்கீர்கள் என்று அருவாளைத் தூக்கத் தயாராகும் அப்பாவியா நீங்கள், கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்காக மட்டுமே சங்கத்தின் இந்த சங்கிலை ( தன்னிலை என்று கூறுவது இல்லையா) விளக்கப் பதிவு. சங்கம் பற்றின சங்கிலை ( ரெபர் - ஐந்தாவது வரி ஆறாவது வார்த்தை) விளக்க பதிவு என்பதால் சங்கத் தலைவரிடம் சங்கம் பற்றி கேள்வி கேட்டகப் பட்டது.


எந்த பிரபல பாடகி பாடகர் பெயரையும் சங்கம் களங்கப் படுத்தவில்லை என்பதை முன்னிலை விளக்கமாக இல்லை இல்லை சங்கிலை விளக்கமாக சங்கம் தெரிவித்துக் கொல்கிறது, எதாவது ஒரு நொடியில் சங்கத்தின் மீது கேஸ் போடப்படுமாயின் சங்கம் உடனே கலைக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு தெறித்து சிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.


சங்கத்தின் முன்னோடி எங்கள் கண்ணாடி திரு பட்டிகாட்டான் ஜெய் அவர்கள் தான் சங்கத் தலைவர் ஹாரியை பேட்டி காண்கிறார்.  

ஜெய் : வணக்கம் திரு ஹாரி அவர்களே

ஹாரி : ஜெய் என்னை கோவப் படுத்தாதீங்க, என்னோட பேர திருப்பி சொல்லுங்க 

ஜே :  வணக்கம் திரு ஹாரி அவர்களே

ஹாரி : ஐயோ ஜெ திருப்பினா அந்தத் திருப்பி இல்ல, பேர திருப்பி ரிஹா ன்னு சொல்லுங்க, சங்கத்திற்காக சங்கம் எனக்கு கொடுத்த புனைப் பெயர் இது.

ஜெ : உங்க சங்கத்துக்கு காமெடி கும்மின்னு பேர் வச்சிருக்கீங்க, ஆனா நீங்க காமெடியே பண்றது இல்லன்னு பரவலா ஒரு பேச்சு இருக்கே இத பத்தி நீங்க என்ன நினைகறீங்க.

ஹாரி : நீங்க கூட தான் உங்க சங்கத்துக்கு டெரர் கும்மின்னு பேரு வச்சிருக்கீங்க அதுக்காக நீங்க என்ன டெரரிசமா பண்றீங்க காமெடி தான பண்றீங்க நாங்க எதாவது கேட்டோமா, இல்ல கேஸ் தான் போட்டமா. சும்மா காமெடி பண்னாதீங்க ஜே  

ஹாரியின் பதிலைக் கேட்டு ஜே மெர்சல் ஆகிறார் 

ஜெ : உங்க சங்கத்து ஆளுங்கள பத்தி சொல்லுங்க 

ஹாரி சிறிது நேரம் பெரிதாக யோசிக்கிறார், அண்ட வெளியில் இருக்கும் தூயகாற்றை உள்வாங்கி அதை அசுத்தமாகி மீண்டும் அண்டவெளிக்கே  திருப்பி அனுப்புகிறார். 

ஹாரி : எங்களிடம் ஒரு பதிவர் இருக்கிறார், சங்கத்திலேயே மிக முக்கியமான பதிவர் அவர். அவருக்கு தன்னைப் பற்றி பெருமையாக பேசுவது கொஞ்சம் கூட பிடிக்காது. தற்பெருமை பிடிக்காத ஒரே பதிவர் அவர் தான், அவர் மிகப் பெரிய பிரபலம், இருந்தும் தன்னை யாரவது பிரபல் என்று கூறிவிட்டால், நெற்றிக்குக் கீழே, வாய்க்கு மேலே இருக்கும் ஐம்புலன்களில் ஒன்றான மூக்கிற்கு மேல் கோபம் வந்து விடும், அவ்வளவு கோவக்காரர் ஆனால் பாசக்காரர் அவர். அவரைப் பற்றி பேச வேண்டுமேண்ரால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருக்கலாம், அவர் பல தளங்களில் எழுதி வருகிறார். அத்தனையும் அவரது சொந்தத் தளங்கள். அதில் ஒரு தளம் கேளுங்க.

ஜெ : கேட்டுட்டுத் தான் இருக்கேன் சொல்லுங்க ஹாரி, அவர் பேரு என்ன, அவர் தளம் பேரு என்ன.

ஹாரி: யோவ் ஜே அதன் சொன்னேன் ல கேளுங்கன்னு 

ஜே : கேட்டுட்டு தான் இருக்கேன் சொல்லுங்க ஹாரி,

ஹாரி: ஐயோ ஜே அவர் தளம் பேர் தான் கேளுங்க, அந்த புகழ்ச்சி பிடிக்காத, பிரபலமில்லாத பதிவர் வேற யாரும் இல்ல நாந்தேன். 

ஜெ : இதுவரைக்கும் நான் காரி துப்பல, துப்ப வச்சிராத, மருவாதையா சங்கத்து நல்ல மனுசங்கல பத்தி பேசு.

ஹாரி : நல்ல மனுசன்னு சொன்னதும் தான் ஒரு பதிவர் நியாபகத்துக்கு வாராரு, இவரு கொஞ்சம் மூளகார வேலக்கார பதிவர், இவரு கிட்ட மோதி யாராலையும் ஜெயிக்க முடியாது. போன வாரம் பாகிஸ்தான்ல கூகிள் அப்டின்ற வலைப் பதிவ ஹாக் பண்ணிடாங்க 

ஜெ : அடங்கோன்னிய்யா கூகிள் வலைபூவாடா.. யாரடா ஏமாத்தப் பாக்குற...

ஹாரி : நம்புங்க ஜே, நானும் பதிவர் கூகுளும் திக் பிரண்ட்ஸ், அவரு கூட உக்காந்து தான் நான் பதிவே எழுதுவேன், அவரு பதிவ ஹாக் பணிடாங்க, அந்த கொள்ளைகார ஹாக் பசங்க காமெடி கும்மி வலைபூ உள்ள மெதுவா நுழையும் போது எங்காளு பாசித் அந்த ஹாக் பசங்கள்ள பிடிச்சிட்டாரு. அந்த பசங்கள்ள ஒருத்தன் பேரு மிஸ்டர் எக்ஸ், அவனைத் தாக்கி உடனே  ஒரு பதிவு போட்டாரு பாருங்க அதப் படிச்சிட்டு அவன் இன்னும் கோமால இருக்கான், சங்கத்துக்கு ஒன்னுனா எங்காளு அடுத்தவன் உசுர கூட தருவாரு. 

ஒரு ஓரமாக நிற்கும் பிளாக்கர் நண்பன் கண்களில் சிறிது ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ஹாரி தன் கண்களால் பாசித்தை கட்டிபிடித்து நண்பேன்டா என்கிறான். இந்த நேரத்தில் தலைவரின் முகத்தில் சிறிது மழை சாரல் தெரிக்கிறது, கர்தூ என்ற சத்தம் கேட்டது, ஜே கொடூரமாக தனது வாயைத் துடைத்துக் கொண்டிருந்தார். 

ஜே : அடச் சின்னப் புள்ளைங்களா நீங்க இன்னும் வளரனும் டா  

ஹாரி : நன்றி ஜே சின்னப் புள்ளன்னு சொன்னது தான் ஒரு பதிவர்  மெமரியில வாராரு, அவரு பேருல மட்டும் தான் சின்ன பதிவர், ஆனா ரொம்ப பெரிய பிரபல பதிவர்.

ஜே : ஏண்டா பிரபலம்ன்ற வார்த்த உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா, எவன பத்தி சொன்னாலும் பிரபலம் பிரபலம்ன்னு சொல்ற... அப்போ நாங்கல்ல்லாம் பிரபலம் இல்லையா... மருவாதையா பேசுறா கொன்னியா...

ஹாரி : கொன்னியா ன்ற வார்த்த உங்களுக்கு மட்டும் தான் சொந்தமா நாங்க எதாவது கேட்டோமா, நாங்க பத்து பேரு, நாங்க பாத்து பெரும் பிரபலம், அட்லீஸ்ட் நான் ஒருத்தனாவது பிரபலம் அப்படி நு சொல்ற ஒரு சின்ன பதிவர் எங்க கிட்ட இருகாரு, அவர் பத்தி சொல்றேன் கேளுங்க.

ஜெ : ஓகே நீ கேளுங்க ல எழுத்து நா அங்க வந்து படிக்றேன்.

ஹாரி : ஜே நா கேளுங்க ன்னு சொன்னது அந்த கேளுங்க இல்ல, வேற கேளுங்க...

ஜே : ஏண்டா கொலப்புரா... இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம்  லைக் போட்ருப்பேன், ஏண்டா என்னைய கொலையா கொல்ற...

ஹாரி : சரி சரி பேசாம கேளுங்க ஜே(!)... இந்த சின்ன பதிவரே வேற யாரும் இல்ல எங்க சின்னா தான், அவரு மட்டும் இல்லைனா சங்கம் இல்ல, நான் இல்ல நான் இல்லை நீங்க இல்ல இந்த பேட்டி இல்ல...

ஜே : இன்னும் கொஞ்சம் நேரம் இப்டியே மொக்க போட்ட நீ இல்லாம போயிருவ பாத்துக்க.... 

கோவத்தில் ஜே துப்பார்க்குத் துப்பாய த்தூ என்று சொல்ல, தலைவர் மீண்டும் முகத்தைக் கழுவ ஓடுகிறார்.

(அமானுஷ்யம் தொடரும்...! மெர்சல் ஆவாதீங்கோ...!)   

44 comments:

 1. செய்தி: பதிவுலகின் பவர் ஸ்டார் பேட்டி என்ற என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டார்!

  யாருடா அங்க.....பொருளை எடுத்து வண்டில ஏத்துங்கடா... தக்காளி ஒரு பய தப்பக்கூடாது

  ReplyDelete
  Replies
  1. "பவருக்கு" உயிர் கொடுப்பான் "அன்டர்சன்" என்கிறது சரியா தாம்ல இருக்கு..

   Delete
 2. /நானும் பதிவர் கூகுளும் திக் பிரண்ட்ஸ்//

  அடங்கப்பா

  ReplyDelete
  Replies
  1. திக்குன்னா எப்படி ஒரு குயர் நோட்டு அளவுக்கு இருக்குமா?

   Delete
 3. //சங்கம் ஆரம்பித்து இருக்கீர்கள் என்று அருவாளைத் தூக்கத் தயாராகும் அப்பாவியா நீங்கள், கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்காக மட்டுமே சங்கத்தின் இந்த சங்கிலை ( தன்னிலை என்று கூறுவது இல்லையா) விளக்கப் பதிவு. சங்கம் பற்றின சங்கிலை ( ரெபர் - ஐந்தாவது வரி ஆறாவது வார்த்தை) விளக்க பதிவு//

  யோவ் வரலாறு அண்ணன் என்ன தான்யா சொல்றாப்ல? அந்த பக்கம் ஏதாவது புரியுதாம்ல?

  ReplyDelete
  Replies
  1. எழுத படிக்க தெரிஞ்சிருந்தா....நான் ஏம்லே ஒட்டகம் மேய்க்க போறேன் பக்கி...

   Delete
 4. //இந்த நேரத்தில் தலைவரின் முகத்தில் சிறிது மழை சாரல் தெரிக்கிறது, கர்தூ என்ற சத்தம் கேட்டது, ஜே கொடூரமாக தனது வாயைத் துடைத்துக் கொண்டிருந்தார். //

  ஆஹா அழகிய கவிதை வரிகள்.. அழகு.. (அடி சாரி மிதி பட்டாலும் மிதித்தவன் கால் வலிக்க கூடாது என்று நினைப்பவர் சங்கம்)

  ReplyDelete
 5. ஆனாலும் அடியே சீனு நீ செத்தே டி..

  ReplyDelete
  Replies
  1. ஏலேய் சீனு...மானம் ரோசம் இருந்த போட்ட கமேண்டுக்கேல்லாம் பதில் சொல்லு... இல்லை பால்டாயில் குடிச்சிறு

   Delete
 6. "கேளுங்க" ஆமா அப்படி ஒரு தளம் இருக்கா? யாருப்பா அதை ரன் பண்றது?

  ReplyDelete
  Replies
  1. ரிஹா-ன்னு ஒரு சூப்பர் பிகரு ...ஹி ஹி ஹி.!

   Delete
 7. உயர்திரு பட்டிக்காட்டான் அண்ணே .வணக்கம் ..

  ReplyDelete
 8. சிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.
  //

  இப்படி எல்லாத்தையும் பகீரங்கமாக சொன்னா எப்புடி ..
  கொஞ்சம் நாசூக்கா சொல்லோணும் ...

  சங்கம் அப்புடி , இப்புடி, நாளைக்கு கட்சியா மாறும், அப்புறம் ஆட்சிய புடிக்கும் , மக்களை மகிழ்விப்போம் இப்படி கலர் கலரா சொல்லோனும்

  ReplyDelete
 9. இதுவரைக்கும் நான் காரி துப்பல, துப்ப வச்சிராத, மருவாதையா சங்கத்து நல்ல மனுசங்கல பத்தி பேசு.//

  சங்கத்துல நல்ல மனுசங்களா?

  ReplyDelete
  Replies
  1. நான் ஒருத்தன் இங்க இருக்கேன்ங்ரத மறந்திட்டீங்களா?

   Delete
 10. அகில உலக பதிவர் சங்க தலைவர் அரசன் வாழ்க!!

  ReplyDelete
  Replies
  1. செவ்வாய் கிரகம் மற்ற ஒன்பது கோள்கள் இதையெல்லாம் யாரு சேர்க்கிறதாம்

   Delete
 11. சங்கத்துக்கு ஒன்னுனா எங்காளு அடுத்தவன் உசுர கூட தருவாரு. //

  அப்பாடி சங்கத்துல பாசித்க்கு அடுத்து சீனு பேர் தான் இருக்கு.

  ReplyDelete
 12. கட்டுரை நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கண்ண மூடிகிட்டு கமாண்ட் போடாதீங்கன்ன கேக்குறீங்களா...இப்ப பாருங்க வேற எங்கியோ போட வேண்டியது இங்க வந்திருச்சு..

   Delete
 13. /எதாவது ஒரு நொடியில் சங்கத்தின் மீது கேஸ் போடப்படுமாயின் சங்கம் உடனே கலைக்கப்பட்டு தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு தெறித்து சிதறி ஓட வேண்டும் என்பது மட்டுமே சங்கத்தின் மிக முக்கியமான கொள்கை.//

  இந்த ஒரு காரணத்திற்காகவே சங்கத்தில் தொடர்ந்து இருக்கலாம்.

  :) :) :)

  ReplyDelete
 14. அடடா இப்படி ஒன்று இருப்பது தெரியவேயில்லை நடத்துங்க.

  ReplyDelete
 15. எத்தனை பேர் அப்பா இப்படி கிளம்பியிருக்கீங்க நடத்துங்க ந்டத்துங்க

  ReplyDelete
 16. // இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன் //

  பயபுள்ளைக நம்மலை குளோசா வாட்ச் பண்ண்றாய்ங்க போல.... கொஞ்சம் சாக்கிரதயாத்தான் இருக்கோனும் :-)))

  ReplyDelete
 17. // ! சிவகுமார் !November 27, 2012 10:26 PM
  அகில உலக பதிவர் சங்க தலைவர் அரசன் வாழ்க!! //

  அருவாவ எறக்குனா இப்படி எறக்கனும் நச்சுனு :-))))

  ReplyDelete
 18. // அரசன் சேNovember 27, 2012 9:17 PM
  உயர்திரு பட்டிக்காட்டான் அண்ணே .வணக்கம் .. //

  தம்பிகளா ஏதும் கோவம்னா அண்ணேன் ஆப்பீஸ் ரூம்புக்கு வரேன், சன்னல் கதவப் பூட்டிட்டு யாருக்கும் தெரியாம நாலு அடி அடிச்சிடுங்க....

  வெட்ட வெளில முட்டுச் சந்துல கோர்த்துவிட்றாதீக மக்காஸ்.....

  அண்ணனுக்கு பிஞ்சி உடம்பு :-)))

  ReplyDelete
 19. ஆமா இந்த பதிவு எழுதுன பன்னாடை பரதேசிப் பயபுள்ளை யாரு???!!

  முன்னுரைனு ஏதோ எழுதிருக்காம், ஒரு மண்ணும் புரியலை....

  எங்களுக்கும் புரியுறா மேரி எழுதுப்பா :-))))

  ReplyDelete
  Replies
  1. எல்லாருக்கும் பிரியிற மாதிரி எழுதுனா என்னிக்கி பிரபல பதிவர் ஆகுறது. அதுவுமில்லாம எலக்கிய பதிவுன்னா அப்பிடித்தான் இருக்கும், வந்தமா படிச்சமா...கர்ர்ர்ர்ர்ர் த்த்து-ன்னு காரி துப்புனமா... கிளம்புனமான்னு இல்லாம..... அதென்ன தல., நான்சென்ஸ் மாதிரி கருத்து பேசிகிட்டு :-))

   Delete
  2. //பரதேசிப் பயபுள்ளை யாரு?//

   "பாலா"வை தெரியும்.. ஆயினும் புத்திர விபரம் யாம் அறியோம்.. விக்கியில் முக்கி தேடிய போதும் சொக்கும் பதில் அடியேன் அடைந்திலேனே.. யான் என் செய்வேன்??

   Delete
 20. // வரலாற்று சுவடுகள்November 27, 2012 12:05 PM
  செய்தி: பதிவுலகின் பவர் ஸ்டார் பேட்டி என்ற என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டார்!

  யாருடா அங்க.....பொருளை எடுத்து வண்டில ஏத்துங்கடா... தக்காளி ஒரு பய தப்பக்கூடாது //

  வனா.சுனா. அதானே ஓரமா எருமை மேய்ச்சிட்டிருந்த என்னை ஏன் இப்படி பவர்ஸ்டார் ரேஞ்சிக்கு பில்ட்-அப் பண்ணி எல்லாரையும் ஏமாத்திருக்கான் :-))))

  ReplyDelete
  Replies
  1. நாளுக்கு நாள் ஓவரா பிரபலம் ஆகிகிட்டு வர்றீங்க தல... பேசாம நீங்க அரசியல்ல குதிச்சிருங்க.... ஏன்னா உங்க மூஞ்சி அதுக்குன்னே பொறந்த மூஞ்சி

   Delete
  2. பிஞ்சு மூஞ்சிய பஞ்சராக்கி பாக்கனும்னு அம்புட்டு ஆசையா? ப்ளஸ் பக்கமா ஒரு நடை வந்தா டெய்லி இத பாக்கலாமே?

   Delete
 21. அவங்கவங்க கமெண்டுக்கு கீழேயே Reply-னு ஒரு பட்டன்ம் இருந்திருக்கு. எல்லாரும் அத அமுத்தி நோகாம பதி கமென்ம்ட் போட்ருக்காங்க.

  நாம்பாட்டுக்கு மாங்கு மாங்குனு கமெண்டை காப்பி&பேஸ்ட் பண்ணி தனிக் கமெண்டா போட்ருந்திருக்கேன்.

  இம்புட்டு வெள்ளந்தியா இருந்திருக்கேனே...

  வனா.சுனாகிட்ட டூசன் போகனும்போலயே.....

  வடிவேல் வெண்ணிறாஅடைமூர்த்திக்கி சைக்கிள் சொல்லித்தரும்போது திட்றாமாதிரி ஏதும் திட்டி திட்டி சொல்லித்தருவானோ.... ம்ஹூம் பக்கிப்பய நல்லவன் நல்லாச் சொல்லித்தருவான் :-)))

  ReplyDelete
  Replies
  1. //காப்பி&பேஸ்ட்//

   ஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மீறும் பட்சத்தில் சீனுவின் பதிவுகளையும், வ.சு.வின் பதிவுகளையும் மூன்று நாளைக்கு விடாமல் படிக்க பணிக்க படுவீர்கள்..

   பி.கு - டைப் பண்ணும் போதே அமானுஷ்யமாய் உணர்கிறேன்.. :D

   Delete
  2. ஏம்பா கும்மீஸ் பயபுள்ளைகளா,

   அப்ப நீங்க யாரும் காலையிலே பேஸ்ட் வச்சி பல்லு தேய்க்கிறதில்லையா, இல்ல காப்பி தான் குடிக்கிறதில்லையா???

   பல்லுதெய்க்கலைனா... அய்ய்ய் உவ்வ்வ்வே :-))))))))))))))

   Delete
  3. இதற்க்குரிய பதிலை எங்கள் "பல் தேய்க்கா பாரிவேந்தன்" எங்கள் அண்ணன் சீனு மொழிந்திடுவார்..

   Delete
 22. //
  Sasi KalaNovember 29, 2012 12:23 AM

  அடடா இப்படி ஒன்று இருப்பது தெரியவேயில்லை நடத்துங்க.
  //


  நாங்கெல்லாம் உலக பிரபலம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...பொசுக்குன்னு இப்பிடி சொல்லிப்புட்டீங்களே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))

  ReplyDelete
 23. ///
  பட்டிகாட்டான் JeyNovember 29, 2012 6:05 AM

  அவங்கவங்க கமெண்டுக்கு கீழேயே Reply-னு ஒரு பட்டன்ம் இருந்திருக்கு. எல்லாரும் அத அமுத்தி நோகாம பதி கமென்ம்ட் போட்ருக்காங்க.

  நாம்பாட்டுக்கு மாங்கு மாங்குனு கமெண்டை காப்பி&பேஸ்ட் பண்ணி தனிக் கமெண்டா போட்ருந்திருக்கேன்.
  //

  ஏலேய் காமெடி குரூப் பக்கிகளா....இந்த 'தனிக் கமெண்ட்டு"-ங்கிறதை நோட் பண்ணுங்களே... உங்களுக்கு இம்புட்டு பெரிய ராச தந்திரத்தை சர்வீஸ் சார்ஸ் கூட வாங்காம நாசூக்கா சொல்லித்தர என் தலைவருக்கு நீங்க பீச்சுல செல வைக்கனும்லே :-))

  ReplyDelete
 24. //
  பட்டிகாட்டான் JeyNovember 29, 2012 6:37 AM

  ஏம்பா கும்மீஸ் பயபுள்ளைகளா,

  அப்ப நீங்க யாரும் காலையிலே பேஸ்ட் வச்சி பல்லு தேய்க்கிறதில்லையா, இல்ல காப்பி தான் குடிக்கிறதில்லையா???

  பல்லுதெய்க்கலைனா... அய்ய்ய் உவ்வ்வ்வே :-))))))))))))))
  //

  வாரத்துல மறந்தாப்ல ரெண்டு நாள் பல் தேச்சிட்டா நீங்க என்ன அவ்வளோ பெரிய அப்பர்டக்கரா...

  ReplyDelete
 25. ///

  ஹாரி.RNovember 29, 2012 6:33 AM

  //காப்பி&பேஸ்ட்//

  ஆபாச வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மீறும் பட்சத்தில் சீனுவின் பதிவுகளையும், வ.சு.வின் பதிவுகளையும் மூன்று நாளைக்கு விடாமல் படிக்க பணிக்க படுவீர்கள்..

  பி.கு - டைப் பண்ணும் போதே அமானுஷ்யமாய் உணர்கிறேன்.. :D
  ///

  ஏலேய் ஹாரி...உன் ப்ளாக்கை படிக்கிரத காட்டிலும் பப்ளிக் கக்கூசை கழுவலாம்...அதையெல்லாம் நாங்க சொல்லிகிட்டா இருக்கோம் பக்கி :-)))

  ReplyDelete
 26. என்னய்யா இது பட்டிக்ஸ்கு மண்டகப்படி நடத்தி இருக்கீங்க, ஒரு வார்த்த சொல்லி அனுப்பி இருக்கப்படாதா......?

  ReplyDelete
 27. /////எந்த பிரபல பாடகி பாடகர் பெயரையும் சங்கம் களங்கப் படுத்தவில்லை என்பதை முன்னிலை விளக்கமாக இல்லை இல்லை சங்கிலை விளக்கமாக சங்கம் தெரிவித்துக் கொல்கிறது, //////

  பிரபல லைக்கர், இணைய போராளி பட்டிக்ஸ் என்ற சிட்டிக்சை களங்கப்படுத்தீட்டீங்க. கேஸ் போடுறதுக்காக, ஒருமாசமா உருளைக்கிழங்கு, மொச்சைன்னு சாப்புட்டு தயாராயிட்டு இருக்கார் அண்ணன் பட்டிக்ஸ் அவர்கள்....... ஜாக்க்க்க்கிரத........!

  ReplyDelete
 28. ////ஜே : ஏண்டா கொலப்புரா... இன்னேர g+ ல இருந்து இருந்தா பண்ணிகுட்டியோட சண்ட போட்டு இருப்பேன், பேஸ்புக்ல இருந்தா பதினஞ்சாயிரம் லைக் போட்ருப்பேன், ஏண்டா என்னைய கொலையா கொல்ற...//////

  அடங்கொன்னியா....... என்கூட சண்ட போடுறதெல்லாம் அவருக்கு பார்ட் டைம்தான்யா, அப்போ புல் டைமா என்ன பண்ணிட்டு இருந்தார்னு கேக்குறீங்களா.........? அவரு பேருதான் பட்டிக்ஸ்....... ஆனா அவருக்கு இன்னொரு பேரு இருக்கு........

  ReplyDelete
 29. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்களின் படைப்பு அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete