Searching...

Popular Posts

Friday, November 16, 2012

பிளக்காபுரியும், காமெடி கும்மி பாய்ஸூம்

6:10 AM
பிளக்காபுரி நாடு தினமும் போல சந்திரனை அனுப்பி சூரியனை வரவேற்று கொண்டு இருந்த நேரம். (அதாவது எழுத்தாளர் என்னா சொல்றாப்லனா கஜால் குஜால் காலை வேளையாம்).

சுற்றி வர டிவிட்டாபுரி, பேஜாபுரி, டம்லாபுரி, வேர்ட்ப்ரெஸாபுரி ன்னு பல நாடுகள் இருந்தாலும் பிளக்காபுரினாலே ஒரு தனி  மருவாத தாங்க.
ஏன்னு அக்கம் பக்கம் விசாரிச்சா "சுற்றி இருக்கிற நாட்டுல எல்லாம் சூப்பரா ஆணி புடிங்கினாலே சாதரண மருவாதை தான் எதிர் பார்ப்பாங்களாம், ஆனா இங்க புடுங்குற முக்கால்வாசி ஆணியே தேவையில்லாத தானாம் ஆனா கொடுக்கிற பில்ட் அப் மட்டும் "சூப்பர் ஸ்டார் படத்தில சான்ஸ் கிடைச்ச சுனைனா" போல இருக்குமாமாம்"

இப்படி பல பில்ட் அப் மத்தியில்  வாழும் பிளக்காபுரி அரண்மனையில் ஒரு நாள்


இடம் - பிளக்காபுரி கும்சை அரசன் அரண்மனையில் 

காட்சி - கும்சை அரசன் ரெம்ப டென்சனாக இருக்கிறார்! அமைச்சர்கள் அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றனர்! கடைசியில் அரசனின் டென்சனை குறைக்க "கும்டேல் டுபாக்கூர் சிங்கர்" நிகழ்ச்சியை பலா மாஸ்டர் ஏற்பாடு செய்ய பிளாக்காபுரியில் அத்து மீறி நுழைந்து கும்மி (காமெடியே இல்ல பிறகு உங்களுக்கு காமெடி கும்மின்னு ஒரு பெயரா.. அதான் சாதா கும்மி) என்ற பெயரில் ரகளை பண்ணியவர்கள் போட்டியில் பங்கேற்கிறார்கள். இனி அரண்மனைக்குள்ளே..

கும்சை அரசன் - அமைச்சரே, ஏன் இஞ்சி தின்ற மங்கி மாதிரி மூஞ்சை உம்மென்று வைத்து கொண்டு இருக்கிறீர். கொஞ்சம் சிரியும் பார்க்கலாம்!. யாரையா இது காமெடி கும்மி என்று..

என்ன நம்மை மெய் மறந்து எல்லாம் சிரிக்க வைப்பார்களா?

அமைச்சர் - இல்லை அரசே இல்லை. பெயரை கண்டு தாங்கள் ஏமாந்து விட்டீர்கள். அவர்கள் யார் தெரியுமா?  மற்றவன் எல்லாம் ஜோக் சொல்லுவான் நாம சிரிப்போம் ஆனா இவய்ங்க ஜோக்குன்னு ஒண்ணு  சொல்லுவாய்ங்க நமக்கு எப்படி ட்ரை பண்ணாலும் சிரிப்பே வராது. அப்புறம் என்ன ஆகும்னா "நம்மள நம்பி ஜோக்கு கேட்க வந்தவன் இவன் தான் டா என்று சொல்லி சொல்லி அவய்ங்களுக்குள்ளே விழுந்து விழுந்து சிரிசுக்குவாங்க.". இது தான் அரசே அந்த காமெடி கும்மியின் வரலாறு.

[மேலுள்ள வரியை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி "இந்த பதிவை பார்க்கும் போது கூட இப்படி தான் என்று" என்று ஆரம்பிக்க நினைக்கும் மற்றும் தங்களை புத்திசாலி கமேண்டர்களாக காட்ட விரும்பும் நண்பர்களுக்கு அதிரடியாக அடுத்த நிமிடமே விஜயகாந்தின் விருத்தகிரி விருந்தாக வைக்கப்படும் - தாழ்மையுடன் மேன்மை தங்கிய எழுத்தாளர்]தொடர்கிறது........

அரசன் - என்னது?

வரட்டும் பார்த்துக்கலாம்.

நிகழ்ச்சி தொடங்கியது..

பஞ்சீவ் -  

ஹலோ வணக்கம் அண்ட் வெல்கம் டூ "கும்டேல் டுபாக்கூர் சிங்கர்"

கும்டேல்லின் மொக்கை குரலுக்கான தேடல்.

இம்முறை பிளக்காபுரி எங்கும்..


பீ.டி. - இந்த நிகழ்ச்சியில முதல் வந்து பாட போறது லானா தானா என்று செல்லமா அழைக்க படுற லரலாற்று தகடுகள்.

அரங்கம் அதிர அண்ணன் வந்து கரகோஷ மழையில் பாட தொடங்குகிறார..

லரலாற்று தகடுகள் -


ஹா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ 
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ 
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ 

படிச்சு பார்த்து பார்த்தேன் ஏறவில்லை 
கமென்ட் அடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு 
நோட்டு புக்கு ரொம்ப தொல்லை 
ஓட்டு போட்டேன் நல்ல புள்ளை 

நான் பிளாக்கரிலே கமெண்டு போட்டேன் 
டுவிட்டரிலும் துவிட்டு போட்டேன் 
பேஸ்புக்கிலும் லைக் போட்டேன் 
திரட்டியிலும் ஓட்டு போட்டேன் - 2

நான் பிளாக்கரிலே கமெண்டு போட்டேன் 
டுவிட்டரிலும் துவிட்டு போட்டேன் 
பேஸ்புக்கிலும் லைக் போட்டேன் 
திரட்டியிலும் ஓட்டு போட்டேன் - 2

லானா.தானா போனா எங்களுக்கு ஓட்டு இல்லை 
நீங்க போடலைனா  எழுதுறது பதிவும் இல்லை 

டைரக்டரின் கையில் பறித்து வைத்து இருந்த CLAPS மட்டையை எடுத்து உயர்த்தி காட்ட அரங்கம் கரவொலியில் இடைவிடாமல் அதிர பாடல் முடிகிறது. 

"பலா" மாஸ்டர் -  என்ன பண்ணிங்க நீங்க?

லரலாற்று தகடுகள் -  பாட்டு மேம் 

"பலா" மாஸ்டர் - தெரியாம தான் கேட்கிறன் என்ன பண்ணிங்க நீங்க?

லரலாற்று தகடுகள் - பாட்டு மேம் 
 
"பலா" மாஸ்டர் - இல்லை தெரியாம தான் கேட்கிறன் என்ன பண்ணிங்க நீங்க?

லரலாற்று தகடுகள் - - பாட்டு தான் மேம் 

"பலா" மாஸ்டர் - பாட்டு சரி. ஏன் இத்தனை "நான்" இதுல வருது?

லரலாற்று தகடுகள் -  இல்லை பாட்டுல அப்படி தானே மேம் வரும்?

"பலா" மாஸ்டர் - எப்பவும் ஒன்று சொல்லுவாங்க தெரியுமா? "நான்" என்று சொல்லு உதடுகள் ஒட்டாது. அதையே "நாம்" என்று சொல்லி பார் உதடுகள் ஒட்டும் என்று..  சரி தானே?

லரலாற்று தகடுகள் -  ஆமா மேம்  

அப்போ

அரசன் - யோவ் அமைச்சரே.. என்னய்யா நடக்குது அங்கே? அவர்கள்  லூசா இல்ல ஒரு வேளை நாம் லூசா?

அமைச்சர் -  !!!!!!!!!!!!!!!!!!!

தொடர்ந்து

குத்ரா மேடம் - //வனா.சுனா போனா எங்களுக்கு ஓட்டு இல்லை நீங்க போடலைனா எழுதுறது பதிவும் இல்லை //

 ஏன் இந்த வரிகள். MR. லரலாறு இப்படி நீங்க இப்படி பாடி இருக்க கூடாது. உங்களால. டுமிள்மனம் என்ற கிராமத்துல எம்புட்டு பிரச்சினை தெரியுமா? ஆரம்பத்தில எல்லாம் 8 வோட்டு போட்டா தான் "லாசகர் கருந்துறை" என்கிற இடத்துக்கு போகலாம் என்று இருந்திச்சு. ஆனா உங்களுக்காகவே அதையே 7ஆ குறைச்சாங்க. ஏன்னா எப்பவும் 8 ஆவது ஓட்டு உங்களோடது தானாம்.

எதுக்கு நீங்க கஷ்ட படுறீங்களே என்று அவங்க வோட்டு எண்ணிக்கைய 8டுல இருந்து 7ஆ குறைசாங்க.  ஆனாலும் நீங்க வோட்டு போடறத குறைக்கல்ல. இப்போ கூட உங்களை அமைதியாக்கி 6 வோட்டா மாத்திடலாம்னு கூட ஒரு ஐடியா போய்கிட்டு இருக்காம். அப்படி இருக்கிற நீங்க இப்படி,


SORRY

வெரி டிசபோயன்மென்ட்

கனோ - ஜெயலலிதா கூட அவருக்கு ஓட்டு குறையும் போது உங்க கிட்ட தானே ஓட்டு கேட்டாங்க. நீங்க மட்டும் இல்லாட்டி விசயகாந்த் தான்யா ஜெயிச்சு இருப்பாரு.

அவையில் ஒருவர் முகத்திலும் நுளம்பு ஆடவில்லை. தொடர்ந்த கனோ 

அரசன் - என்னய்யா இவங்க சம்மந்தமே இல்லாம பேசிக்கிறாங்க?

அமைச்சர் -  விடுப்பா விடுப்பா.. யானைனா நடக்குறதும் பானைனா உடைறதும் சகஜம் தானே பா.. 
  
அரசன் - கர்ர்ர் 

கனோ - இருந்தாலும் குத்ரா இவர் பாடியதுல முக்கிய விஷயம் கவனிச்சிங்களா? "ஸ்ருதி" சூப்பருல்ல 

இந்த கலவரத்திலும் லரலாற்று தகடுகள் -  (வாயில் வாட்டர் பால்ஸ் ஓடியவாறே) ஹி ஹி  ஆமா ஆமா சுருதி சூப்பர் தான்.. பட் அவங்க தங்கச்சி அக்சரா தான் சுமாருங்க  

"பலா" மாஸ்டர்" -  யூ ஆர் ரிஜெக்டட்ட்ட்ட்டட்ட்ட்டட்ட்ட்

-----------------------------------------------------------------------------------

பீடி - முதல் படிச்ச நம்ம லரலாற்று தகடுகள் முதல் ரவுண்டிலயே தள்ளாடி வெளியேரிட்டாறு..

இனி அடுத்ததா நாம அழைக்க போறது யாருன்னு பார்க்கிறது முதல் குட்டி கமெர்சியல் பிரேக்..

இது  "கும்டேல் டுபாக்கூர் சிங்கர்"

இது மொக்கை குரலுக்கான தேடல்.

இம்முறை பிளக்காபுரியில்..எழுதியது SORRY செதுக்கியது - ரிஹா

கண்டினுவிட்டி மிஸ் ஆகுது நினைக்காதிங்க - பல வரிகள் நண்பர்களின் கருத்துக்கமைய நீக்கப்பட்டுள்ளது.. [இல்லாட்டி மட்டும்] 

யோவ் யாருயா இது ஒரு வரி எழுதிட்டு அப்புறம் பிராக்கெட் பண்ணி தன்னை தானே கலாய்கிற கான்செப்ட ஆரம்பிச்சது.. முடியல.. 

நன்றி - ரிஹா 


24 comments:

 1. ரிஹா-ன்னு யாரையும் சேர்க்கலையே யாரா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு நட்சத்திர பிகர்தான் பாஸ் ... சந்தேகமே வேண்டாம்

   Delete
  2. அண்ணா நீங்க அரியலூர்ரா நான் டால்மியா அண்ணாத்த......

   Delete
 2. வேற வழியே இல்லை... காப்பி பேஸ்ட் கம்மென்ட் தான்...

  இவய்ங்க ஜோக்குன்னு ஒண்ணு சொல்லுவாய்ங்க நமக்கு எப்படி ட்ரை பண்ணாலும் சிரிப்பே வராது. அப்புறம் என்ன ஆகும்னா "நம்மள நம்பி ஜோக்கு கேட்க வந்தவன் இவன் தான் டா என்று சொல்லி சொல்லி அவய்ங்களுக்குள்ளே விழுந்து விழுந்து சிரிசுக்குவாங்க.

  ReplyDelete
  Replies
  1. வேற வழியே இல்ல உங்களுக்கு டெம்பிளேட் கமென்ட் தான்

   நன்றி நண்பா உங்க வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 3. ரிஹா பிகரை முதலில் வரச்சொல்லும் ஹாரி மச்சி ...

  ReplyDelete
  Replies
  1. அப்ப டோட்டலா பதிவு மொக்கை.. ரிஹா தான் பிடிச்சு இருக்கு..

   Delete
  2. மச்சி பப்ளிக் பப்ளிக்

   Delete
 4. தனக்குத்தானே பெயரை மாற்றி பெரும் பதிவை தயார் செய்த தங்க குணம், சிங்க வீரம் கொண்ட எங்க மச்சிக்கு ஆயிரம் பொற்காசு வழங்க தம்பி அண்ணாவை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இப்படி நாலு வார்த்தை பாராட்டினா எம்புட்டு சந்தோசமா இருக்கு.. அண்ணேன் உங்களுக்கு கண்டிப்பா நம்மா கஜால் கிட்ட சாரி கஜானாவில இருந்து நல்லா செய்வம்... (சந்தானம் வாய்ஸ்)

   Delete
 5. கடைசி படம் கும்மாங்குத்து

  ReplyDelete
  Replies
  1. பவர் வந்தாலே அப்படி தானே

   Delete
 6. விடுப்பா விடுப்பா.. யானைனா நடக்குறதும் பானைனா உடைறதும் சகஜம் தானே பா..
  //

  இந்த அமைச்சரை பிடித்து வந்து ஆனந்த தொல்லையை ஆயிரம் முறை காட்டணும்

  ReplyDelete
 7. இந்த கலவரத்திலும் லரலாற்று தகடுகள் - (வாயில் வாட்டர் பால்ஸ் ஓடியவாறே) ஹி ஹி ஆமா ஆமா சுருதி சூப்பர் தான்.. பட் அவங்க தங்கச்சி அக்சரா தான் சுமாருங்க //

  அந்த லாராலாற்று சுவடுகளை நான் தேடிக்கொண்டே இருக்கிறேன் ... இப்படி ஒரு சங்க பாடலை பாடியும் பரிசு வழங்காத மாஸ்டரை ஏழு நாள் ஏழு மணி நேரம் தன முகத்தை தானே கண்ணாடியில் பார்க்குமாறு தண்டனை கொடுக்கணும்

  ReplyDelete
 8. ஐ ஆம் ரிஜெக்டட்ட்ட்ட்டட்ட்ட்டட்ட்ட்??????????????

  நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு..........

  ReplyDelete
  Replies
  1. மொதல்ல நாட்டாமைக்கி ஒரு நல்ல சொம்பு, ஜமுக்காளம் வாங்கி கொடுங்கய்யா.......

   Delete
 9. வாயில் வாட்டர்ஃபால்ஸ் ஓட்டிய அண்ணன் வானா சூனா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்.......

  ReplyDelete
 10. //அவர்கள் யார் தெரியுமா? மற்றவன் எல்லாம் ஜோக் சொல்லுவான் நாம சிரிப்போம் ஆனா இவய்ங்க ஜோக்குன்னு ஒண்ணு சொல்லுவாய்ங்க நமக்கு எப்படி ட்ரை பண்ணாலும் சிரிப்பே வராது. அப்புறம் என்ன ஆகும்னா "நம்மள நம்பி ஜோக்கு கேட்க வந்தவன் இவன் தான் டா என்று சொல்லி சொல்லி அவய்ங்களுக்குள்ளே விழுந்து விழுந்து சிரிசுக்குவாங்க.".//

  எனக்கு இந்த இடத்துல மட்டும் விழுந்து விழுந்து சிரிச்சதுல உடம்பு புண்ணாகிட்டுது.

  ReplyDelete
 11. >>>வாயில் வாட்டர் பால்ஸ் ஓடியவாறே<<

  ஏலேய் நெகழ்ச்சியை பாருங்களேன்னா....என் மூஞ்சியையா பார்த்துகிட்டு இருக்கீங்க.....ராஸ்கல்ஸ்ஸ்ஸ்ஸ்

  #சரியா நோட் பன்னுதுகளே பக்கிக...

  ReplyDelete
 12. ஆட்களை கும்முறதுக்கும் பேரு "காமெடி" கும்மியா!. இதுவும் நல்லாதான் இருக்கு, :) :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தல உங்களை சங்கம் சார்பாக வரவேற்கிறோம்

   Delete
 13. Na ini indha blog pakkam vandha irukkuradhum poidum.... Aala vidungappaa...

  On my site:http://newsigaram.blogspot.com/2012/11/marupadiyum-varuven-46-17-23_21.html

  ReplyDelete