Searching...

Popular Posts

Saturday, November 24, 2012

மிஸ்டர் எக்ஸ் அண்ட் மாஸ்டர் எக்ஸ்

10:48 PM

ஒரு நாள் மாஸ்டர் எக்ஸ் தன் அப்பா மிஸ்டர் எக்ஸிடம் இப்படி கேட்டான்.

"அப்பா! உங்க தலைமுடியில கொஞ்ச முடி வெள்ளையா இருக்கே, ஏன்?"

அதற்கு மிஸ்டர் எக்ஸ் சொன்னார்,"அதுக்கு காரணம் நீ தாண்டா! நீ ஒவ்வொரு தப்பு செய்யும் போதும் என்னோட ஒவ்வொரு முடியும் வெள்ளையா மாறிடும்"

அதுக்கு அவன் சொன்னான், "ஓ! அப்படியா? இப்ப தான் தாத்தா முடி எல்லாமே ஏன் வெள்ளையா இருக்குன்னு புரியுது!"

மிஸ்டர் எக்ஸ்: "ங்கே!"

*****************************************************************************************************

மாஸ்டர் எக்ஸ் இன்னொரு நாள் மிஸ்டர் எக்ஸிடம் இப்படி கேட்டான்.

"அப்பா! கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகும்?"

"தெரியலைடா செல்லம்! நான் இன்னும் பணம் கட்டிட்டு தான் இருக்கேன்!"

மாஸ்டர் எக்ஸ்: "ங்கே!"

*****************************************************************************************************

பள்ளிக்கூடத்துல இங்க்லீஷ் க்ளாஸ் நடந்துட்டு இருந்துச்சு.

டீச்சர்: "மாஸ்டர் எக்ஸ்! ஒன்னு, ரெண்டு இங்கிலீஷ்ல சொல்லு. உனக்கு எவ்ளோ தெரியுதுன்னு பாக்குறேன்"

மாஸ்டர் எக்ஸ்: “One, two, three, four, five, six, seven, eight, nine, ten, jack, queen, king.

டீச்சர்: "ங்கே!"

*****************************************************************************************************

மிஸ்டர் எக்ஸ்: "டாக்டர்! தினமும் காலைல எழுந்திரிச்சதும் பத்து நிமிஷம் தலை வலிக்குது"

டாக்டர்: "அப்படீன்னா, பத்து நிமிஷம் கழிச்சு எழுந்திரிங்க!"

மிஸ்டர் எக்ஸ்: "ங்கே!"


*****************************************************************************************************

இன்னிக்கு சிரிச்சது போதும், இன்னொரு நாள் சிரிக்கலாம் என்ன?

20 comments:

 1. பதிவு அருமை
  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கவிதைக்கும் நன்றி நண்பா!

   Delete
  2. தம வைத் தேடினேன் கிடக்கவில்லை... அட்லீஸ்ட் தமன்னா போட்டோவாவது வைக்கலாம்... சங்கத் தலைவர் இது குறித்து பரீசிலனை செய்து தமனாவை எங்கு இருந்தாலும் தள்ளிக் கொண்டு வரவும்....

   Delete
  3. கவிதைக்கு பொய்யழகு என்பதால் த.ம. 1 என்று ஹாரி சொன்னதை நான் அவதானித்து 'கவிதைக்கும் நன்றி' என்று பதில் அளித்தேன்.

   இதை கூட உங்களால் அவதானிக்க முடியவில்லை என்றால் என்ன பிரபல பதிவரோ தெரியவில்லை!

   Delete
 2. Replies
  1. //நல்ல ஜோக்,,,,// நல்ல ஜோக் :-)

   மிஸ்டர் Abdul Basith: "ங்கே!"

   Delete
  2. கலாய்ச்சிட்டாராமாம்!

   Delete
 3. Yaru idha ezhudhinadhu? Kaamedi kummiya kalavarak kummiyakkaadheengappa...

  Pls visit my site:

  http://newsigaram.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நான் தான் எழுதுனேன். நல்லா இல்லையா?

   :( :( :(

   Delete
  2. //நான் தான் எழுதுனேன். நல்லா இல்லையா?//

   GOOGLE TAMIL INPUT எழுதலையா நீங்க தான் எழுதினீங்களா

   Delete
  3. //நான் தான் எழுதுனேன். நல்லா இல்லையா?//

   பதிவு மிக அருமை... ஒவ்வொரு வரிகளுக்கும் இடையில் சீரான இடைவெளி காணபடுகிறது... நல்ல தெளிவான நீல அகலங்களுடன் மிகச் சரியான எழுத்து உருக்கள் (தமிழ் தமிழ்)... தேவையான வார்த்தைகள் தடிமன் ஆக்கப்பட்டுள்ளது.. மொத்தத்தில் இந்த வருட சிறந்த பதிவு

   Delete
  4. விருது, பரிசு என்னிக்குன்னு சொல்லிடுங்க, வந்துடுறேன்...

   Delete
 4. மிஸ்டர் எக்ஸ் என்பதற்கு பதிலாக மிஸ்டர் வரலாறு, மிஸ்டர் ரிஹா மிஸ்டர் சின்னா மிஸ்டர் ஹாலி மிஸ்டர் ராசா மற்றும் தம்பி என்று போட்டிருந்தால் சங்கம் உங்கள் கவிதையை ஆமொத்திது இருக்கும்... இப்போது பாருங்கள் அண்ணன் சிகரம் பாரதி கோபம் கொண்டு பொங்கி எழுந்து விட்டார்...

  //சிகரம் பாரதி -- அண்ணே அடிச்சிராதீங்க அண்ணே... கூட்டாமா இருக்கும் பொது தான் சவுண்டு விடுவோம்.... தனியா வந்தா சங்கம் உங்க காலுல கூட விழும்... :-)

  ReplyDelete
  Replies
  1. முதலில் ஹாரி என்று தான் பெயர் வைத்தேன்... பாவம் அந்த புள்ளைய அழுவ வைக்க வேணாமேன்னு மாத்திட்டேன்...

   இனிவரும் பதிவுகளில் பெயரை மாற்றிவிடுவோம்...

   Delete
 5. மிஸ்டர் எக்ஸ் என்ற இடங்களில் வரலாருவை வைத்துப் பார்தேன் ... ஐயோ செம காமெடி... யோவ் வரலாறு அல்டிமடே யா... இனி அந்த எக்ஸ் நீறு தான்

  ReplyDelete
  Replies
  1. உள்ளுக்குள்ளேயே நினைச்சு விழுந்து விழுந்து சிரிச்சிட்டு சத்தமில்லாம பக்கத்தை குளோஸ் பண்ணிட்டு போறத விட்டுப்புட்டு....இப்பிடியா பப்ளிக்ல சொல்லுவே பக்கி...இனி எல்லா பக்கிகளும் இப்பிடியே நினைச்சு நினைச்சு விழுந்து விழுந்து சிருப்பானுகளே....

   இதுக்கு பேருதான் பொழப்பு சிரிப்பா சிரிக்குதுன்னு சொல்றதோ.?

   Delete
  2. கவலைப்படாதீங்க! அடுத்த பதிவுல சீனுவை கும்மிடுவோம்..

   Delete
  3. Im waiting


   "யாரையா அந்த பக்கம் "ஹிட்" ஸ்ப்ரே எடுக்கிறது"

   Delete