Searching...

Popular Posts

Tuesday, December 25, 2012

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க ...

வ. சு. :- அண்ணே நான் ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன் உங்க விருப்பம் என்ன?

தீவிரவாதி: ஏலேய் மரியாதையா ஓடு, இல்லைனா சுட்டுபுடுவேன்.

வ. சு. : ம்ம்க்கும் இதுவரைக்கும் ஒரு காக்கா குருவிய கூட சுட்டது கெடையாது, இதுல துப்பாக்கிய தூக்கிடறது.

========================================================================

பாசித்: அண்ணே உங்களுக்கு இந்த பெயரை வைத்தது யாரு?

தீ.வாதி: இது நெம்ப முக்கியம்டா, அது ஒரு பெருங்கதைடா.. சொல்றேன் முழுசா கேளு ..

பாசித்: அண்ணே சொல்லுங்க அண்ணே தூக்கம் வராம ரொம்ப நாளா அவஸ்தை படுறேன் ...

தீ.வாதி: ???????????????

========================================================================

சீனு: வணக்கம் அண்ணே 

தீ.வாதி: உன்னைய தாண்டா தேடிட்டு இருக்கேன், சிக்கிட்டியா எவம்லே அங்கே எடு அந்த உருட்டுக்கட்டைய, இன்னைக்கு இவனை சுடாம விடக்கூடாது.

சீனு: அண்ணே துப்பாக்கி தான் சுடும், உருட்டுக்கட்டை சுடாது.

தீ.வாதி: உங்க கூட சேர்ந்ததுக்கு அப்புறம் எப்படிறா நான் உருப்பட முடியும் ....

========================================================================

அரசன்: அண்ணே வணக்கம், உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும், கேட்கலாமா?

தீ.வாதி: கேளுடா ராசா 

அரசன்: அது வந்து அது வந்து ...

தீ.வாதி: எது வந்து ?

அரசன்: அப்பிடி என்னத்தான் இந்த வானா சுனா மேல படிக்கிறாருனு எனக்கு தெரியலை ...உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்.

தீ.வாதி: எலேய் உனக்கு நேரம் சரியில்லைடா உன்னை பொறவு கவனிச்சிக்கிறேன்.

========================================================================

ஹாரி: அண்ணாத்தே எப்படி பிஸியா இருக்குறமாதிரி நடிக்குறது ?

தீ.வாதி: ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு தளம் ஒப்பன் பண்றவன் கிட்ட எல்லாம் நான் பதில் சொல்றது இல்லை.
உனக்கெல்லாம் அந்த வாத்தியார் பதில் சொல்லுவார் அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோ.

========================================================================

மேலையூர் ஆசிரியர்: சங்கத்தின் தீவிரவாதியை அனைவரும் தேடுவதாக ஒரு வதந்தி உலவுகிறதே அது உண்மையா?

தீ.வாதி: இதுவரைக்கும் ஒரு பொட்டுவெடி டப்பாவ கூட தொட்டது கெடையாது இதுல தீ.வாதி என்கிற பேரு ...நீங்க நல்லா வருவிங்க ..

========================================================================

வ. சு. : நான் கல்யாணம் பண்ணலாம் என்று இருக்கிறேன், உங்க அபிப்ராயம் என்ன ?

தீ.வாதி: நான் ஒருத்தன் நித்தம் அடி வாங்குறது தெரிஞ்சுமா அந்த குழியில விழணும்னு நெனைக்கிறே..

========================================================================

சீனு: அண்ணே என் காதலி எங்கிட்ட பேச மாட்டேங்குறா? என்ன பண்ணி சமாதானப்படுத்துவது?

தீ.வாதி: தம்பி நீ வளரனும்டா, கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? இதுதான் உனக்கான தத்துவம் ///

=======================================================================

16 comments:

 1. இங்கே எங்கேயோ அருவாள வச்சேன் கானும்.

  ReplyDelete
  Replies
  1. அதத்தானே மாத்தி போட்டு அண்ணி உங்களை கும்முறாங்க...அப்புறம் என்ன வேண்டி கிடக்கு வீர வசனம்?அடுத்த பதிவு உமக்குதானாம்.....அருவாளாம் ஆட்டுகுட்டியாம்...நானே கோபப்படல.....இவருக்கு அப்படியே பொங்குது வீரம்...

   Delete
 2. வ.சு க்கு ஷகிலா போல குடும்ப பொண்ணா, குஷ்பு போல ஓல்லியா ஒரு மணமகள் பார்க்கணும்.

  ReplyDelete
  Replies
  1. இவரத்தான்யா மொதல்ல பொண்ணு பார்க்க கூப்புட்டு போகணும்!

   Delete
  2. வாசுக்கு நல்ல கனவுக் கன்னி ச்ச ச்ச கொழுத்த பண்ணி கிடைக்க வேண்டும் என்று தவம் இருக்கிறேன்

   Delete
  3. @ராஜா மச்சினிச்சி வரப்போகுதுடோய்.....

   Delete
 3. புடிக்கலனா பிபாசா பாசு , நமிதா போல அடக்கமான பொண்னா பாத்துடுவோம்.

  ReplyDelete
 4. //ம்ம்க்கும் இதுவரைக்கும் ஒரு காக்கா குருவிய கூட சுட்டது கெடையாது, இதுல துப்பாக்கிய தூக்கிடறது.//

  ஒருவேளை ரொட்டி சுடுறதை சொல்லிருப்பார்... விடுங்கண்ணே! :) :) :)

  ReplyDelete
  Replies
  1. ரொட்டி சுடுருதுனா அவ்வளவு ஈசியா? ஆயிரம் ரொட்டிக்கு மாவு பிசைந்து பாருங்க தெரியும் ....நானும்எவ்வளவு நாள்தான் இந்த டயலாக்கை கேட்டுகிட்டு சும்மா இருக்க முடியும்?எடுத்தோமா சுட்டோமான்னு போக ரொட்டி ஒன்னும் துப்பாக்கி இல்ல...பூரி சுடுரதுக்கும் ரொட்டி சுடுரதுக்கும் மாவு பிசயரதுல வித்தியாசம் உண்டு தெரியுமாவே என் டுபுக்கு.....சும்மா கஷ்டம தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு....:)

   Delete
  2. தெரியாம சொல்லிட்டேன் விட்டுடுங்கண்ணே! :) :) :)

   Delete
 5. சங்கத்து தீவிரவாதியை பயங்கரவாதி ஆகி இருக்கம் உம உசுருக்கு உத்தரவாதம் இல்லை, எங்காவது தலை மறைவாகிக் கொள்ளும்...

  ReplyDelete
 6. பட்டிக்ஸ் உடன் தீவிரவாதிக்கு பலத்த போட்டி இருக்கும் என்று எதிர் பார்க்கப் படுகிறது # கொளுத்திப் போட்டிங்

  ReplyDelete
  Replies
  1. இல்ல சீனு அதுல்லாம் வெ மா சூ சொ உள்ளவங்க செய்ய வேண்டியது...எப்போ காமெடி கும்மில சேர்ந்தேனோ அப்பவே வீட்ல உப்பு வாங்குறத நிப்பாட்டிட்டேன்....

   Delete
 7. வருஷ கடைசில வெளையாட நான்தான் கிடைச்சேனா?

  ##நான் ஒருத்தன் நித்தம் அடி வாங்குறது தெரிஞ்சுமா அந்த குழியில விழணும்னு நெனைக்கிறே##.
  வீட்டுல நடகுரதல்லாம் வெளில சொல்லகூடாது அரசன்.....பின்னே இதுக்கும் சேர்த்துலா மண்டகப்படி நடக்கும்.....நல்லா வருவீங்கடா நீங்க... காமெடி கும்மி களை கட்டுதுன்னு சொன்னதுக்காப்பா இப்படி ஒரு கொலைவெறி பதிவு?

  இந்த பதிவை படிச்சிட்டு என் மனைவி என்னிடம் சொன்னது...."இவரு உன்னை கலாய்ச்சிட்டாராம்"

  ReplyDelete
 8. // ஹாரி: அண்ணாத்தே எப்படி பிஸியா இருக்குறமாதிரி நடிக்குறது ?


  கொஞ்சம் பிசியா இருக்கன்.. கொய்யால..

  ReplyDelete
 9. // தீ.வாதி: ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு தளம் ஒப்பன் பண்றவன் கிட்ட எல்லாம் நான் பதில் சொல்றது இல்லை.
  உனக்கெல்லாம் அந்த வாத்தியார் பதில் சொல்லுவார் அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோ.//

  ரொட்டி சுடுற பயபுள்ள கிட்ட கேட்டது தப்பு தான் எப்படி உளறுது பாரு..

  ReplyDelete