Searching...

Popular Posts

Monday, December 3, 2012

சீரியசா இது உண்மைதான் ....


முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு வந்திருந்த இரண்டு சங்ககால பதிவர்கள், கூட்டம் முடிந்ததும் இருவரும் தனியாக உரையாடிய தொகுப்பு, உங்கள் பார்வைக்கு. (இதை படித்து விட்டு சட்டையை கிழித்து கொண்டாலோ, மண்டையை உடைத்து கொண்டாலோ சங்க கால பதிவர்கள் பொறுப்பல்ல)

ச. ப 1: என்னய்யா என்னை கூப்பிடாம வந்துட்ட?

ச. ப 2:ஆமா நானே என்னைய கூப்பிடல, இதுல எங்கிட்டு உம்ம நான் கூப்பிடுறது!

ச. ப 1: கொஞ்சம் தெளிவா பிரியுற மாதிரிதான் சொல்லுறது, 

ச. ப 2: ம்க்கும் சொல்லிட்டாமட்டும் அப்படியே வெளங்குற மாதிரிதான்....போன் பண்ணினா எடுக்குறது இல்ல, இதுல இந்த பேச்சுக்கு மட்டும் ஒன்னும் குறைச்சல் இல்ல ...

ச. ப 1: இல்லை தோழர் நான் கவனிக்கல, சரி நீங்க எதுல வந்திங்க, 

ச. ப 2: நான் எனது பைக்ல தான் வந்தேன், 

ச. ப 1: சரி எங்க அவங்க? கண்ணுல காட்டவே மாட்டிங்களா?

ச. ப 2: யோவ் யாரைய்யா கேக்குறிங்க? எனக்கு வெளங்கல! 

ச. ப 1:நீங்க வண்டிய எடுத்த இருபதாவது நிமிடம்  வேளச்சேரி கண்ணபிரான் காலனியில் வண்டி மூச்சு வாங்கியது, பிறகு அங்கு ஒருவரை ஏற்றி கொண்டு கிண்டி வரைக்கும் வந்துள்ளது, அதன் பிறகு நமது ஒற்றர் படையின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மறைந்துவிட்டிர்கள். சொல்லுங்க சொல்லுங்க(எகோ வாய்சில்) உங்க கூட வந்தது யாரு....யாரு 

ச. ப 2: கண்டமனூர் முண்டக்கன்னி அம்மன் மேல சத்தியமா இப்படி ஒரு நிகழ்வே நடக்கல.. சொன்னா நம்புங்க ...

(என்னது முட்டக்கண்ணியா? எலேய் ச. பதிவா உண்மைய சொல்லு, எனக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாவனும், ஆமா சொல்லிபுட்டேன் என்று ஆவேசமாக தன அரைக்கை சட்டையை மடித்துகொண்டிருந்தார் சிட்டியிலிருந்து வில்லேஜ் சென்று பதிவு போட்டு கலங்கடிக்கும் செம பொல்லாத ச்சே தில்லான பெரும் பதிவர் )

ச. ப 1: வசமாக சிக்கி விட்டிர்கள் மிஸ்டர்... இப்ப எங்கிட்டும் தப்பிக்க முடியாது, உண்மைய சொல்லுவதை விட வேறு வழியே இல்லை ..

ச. ப. 2: அண்ணே என்னை விட்டுருங்க, நான் கிண்டிக்கு அவசரமா போகணும், நான் போயிட்டு வந்து பொறவு எல்லா விசயத்தையும் சொல்றேன்!

ச. ப 1: அப்ப கிண்டில ஏதோ ஒரு மர்மம் ஒளிஞ்சிருக்கு, நானும் உங்கூட வரேன்! 

ச. ப. 2: பக்கி என் வண்டி இங்க இருக்கு, நீ எவன் வண்டியில் போய் உக்காந்திருக்க, வா என் வண்டியில் வந்து உக்காரு ...

ச. ப 1: ஹீ ஹீ ஒரு ஆர்வம் தான்! சரி சரி சீக்கிரம் வண்டிய கெளப்பு ...

ச. ப. 2: கொஞ்ச நேரத்துல கோத்து விட்ட இந்த பயபுள்ளைக்கு நாமக்கல்லார் படத்த இன்னைக்கு காட்டிற வேண்டியது தான் ...

(தம்பி நீ போயிட்டு விசயத்த தெரிஞ்சிகிட்டு ஒடனே இங்க ஓடியார ... அதோ அந்த முக்கு கடையில எரும மாட்டுக்கு தீவனம் வாங்கிட்டு இருப்பேன் என்ன வெளங்குச்சா???)

14 comments:

 1. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...

  ReplyDelete
  Replies
  1. சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமிஈஈஈஈஈஈஈ
   அப்டின்னு நீங்க கதி கதறுனாலும் ராசா சொல்ல மாட்டாரு...
   என்ன அவரு உங்க எல்லாரையும் விட கொஞ்சம் நல்லவரு

   Delete
  2. இப்பதான்யா சொல்லவே தோணுது

   Delete
 2. தீவனம் வாங்கியாச்சா???

  ReplyDelete
  Replies
  1. இன்னும் வாங்கவில்லை ..

   Delete
 3. 999 தடவை பொரட்டி பொரட்டி படிச்சு பார்த்தேன் ஒன்னுமே வெளங்கல...

  இந்த பதிவை மட்டும் சீனு எழுதியிருந்தா கர்ர்ர்ர் த்த்த்த்து-ன்னு காரி துப்பிருப்பேன்... நீங்க வேற நல்ல மூஞ்சியா போயிட்டீங்க..என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கேன் :-) :-)

  ReplyDelete
  Replies
  1. தூசு தட்டி பதிவு போடுறதுக்கு பேரு வரலாற்றுச் சுவடுகள் ஆங் ....
   இரும் இரும் அடுத்த அமானுஷ்ய தொடர் வராமலா இருக்கப் போகுது
   அங்க வச்சி டீல் பண்ணிக்கிறேன் .....

   Delete
 4. ஏதோ பதிவு பதிவுன்னாங்கலே அது எங்கப்பா? யாராச்சும் பெரிய மனுசங்க காண்பிச்சுறுங்கப்பா

  ReplyDelete
  Replies
  1. // யாராச்சும் பெரிய மனுசங்க காண்பிச்சுறுங்கப்பா//

   சின்ன பசங்க சவுண்ட் ரொம்ப ஓவரா இருக்கு ... கொஞ்சம் அப்பாலிகா பொய் நில்லு தம்பி
   ராசா பேசும் பொது ஒரு பய குறுக்க பேச கூடாது...

   Delete
  2. யோவ் ஏன்யா ஏன்?

   Delete
 5. என்ன நடந்தது எப்படி நடந்தது அனைத்தும் யாம் அறிவோம்...
  யோவ் ராசா ரகசியத்த யாருக்கும் தெரியாத மாதிரி எழுதக் கூடிய வித்தையில் நீறு தேர்ச்சி பெற்றதால்
  ரகசியம் காத்த "ரசிகா" ச ச ராசா என்று அனைவராலும் போற்றப் படுவாய்...

  ராசா நல்ல வேல ஒரு பயலுக்கும் புரியல ....
  புரிஞ்சது அந்த அப்பாவி பதிவர் செத்ருபான் ....

  நீர் வாழ்க வாழ்க
  உம் குலம் வாழ்க

  ReplyDelete
  Replies
  1. ரகசியம் இறுதி வரை கட்டி காக்கபடுகிறது

   Delete
 6. ஒரு மாதமாக இந்த காமெடி கும்மிகளில் இருந்த தப்பித்திருந்த தம்பி அண்ணா, சீனு தன் பதிவுகளை வீட்டிற்க்கே அனுப்பிவிடப்படும் என்ற மிரட்டலுக்கு பயந்து குடும்ப நலம் கருதி சரணடைந்துள்ளேன்..என்னை கைது செய்யுங்கள்...

  ReplyDelete