Searching...

Popular Posts

Friday, January 4, 2013

வெறியான சங்க முதுகெலும்பு....

அரக்க பரக்க ஓடிவந்து மூச்சு வாங்கி கொண்டிருந்த கண்ணாடி மச்சானை வெறித்து பார்த்துவிட்டு என்னள்ளே பிரச்சினை, இந்த மாதிரி ஓடியாற, என்னனு சொல்லு .. என்றார் தீவிரவாதி.(வேற யாரா இருக்கும் என்று நினைக்கிறிங்க)
(இந்த வருசமாவது என் காதலை புரிஞ்சிக்குங்க கண்ணாடி மச்சான்)

அண்ணே ஒண்ணுமில்ல ஒரு நூறு பேரு என்னை விடாம துரத்துராயிங்க. அதுல முப்பது பேரு வெள்ளைக்காரவுங்க வேற .. நீங்க தான் என்னை காப்பாத்தணும்.

எலேய் தம்பி என்னடா பிரச்சினை அண்ணன் நான் இருக்கேண்டா, சொல்லு முதல்ல!

எல்லாருமே கொலை வெறியோடு திரிகிற மாதிரி இருக்கு அண்ணே. எப்படி ஆரம்பிச்சி எங்க முடிக்கிறது ன்னு ஒரே கன்பியுஷன்.

எலேய் மேட்டர சொல்ல போறியா, இல்லை நானே உன்னை போட்டு தள்ளட்டுமா ? என்று துப்பாக்கியை தூக்க ரெடியானார்!

அது ஒண்ணுமில்லைன்னே, அடுத்த மாசம் பிப்ரவரி வருதா? எல்லாம் அதனால வந்த வினை தான் அண்ணே ..

தம்பி உன் பேச்சு நார்மலாவே எனக்கு புரியாது, இப்ப இப்படி வேற பேசினா ஒரு மண்ணும் புரியலைடா, வசு பதிவு மாதிரி லெங்க்தியா இழுக்காத, அரசன் கழுதை ச்சீ... கவிதை மாதிரி நாலே நாலு வார்த்தையில சொல்லுடா, எனக்கு வேலை நெறைய இருக்குடா?

இப்ப உங்களுக்கு மேட்டர ஓபனாவே சொல்றேன், அடுத்த மாசம் வரப்போற காதலர் தினத்துக்கு இப்பவே எல்லாரும் லெட்டர் கொடுக்க துரத்துறாங்க, அதான் சங்கதி. இப்ப என்னை காப்பாத்த முடியுமா முடியாதா? அதை சொல்லுங்க... (இங்க யாராவது கண்ணாடி மச்சானை பார்த்து சிரிச்சிங்க சுட்டே புடுவேன் , அது தீவிரவாதியாக இருந்தாலும் சரி)

அப்படியே ஷாக்காகி போன தீவிரவாதி சத்தியமா சொல்றேன் என்னால மட்டுமில்ல உன்னை வேற எவனாலையும் காப்பாத்த முடியாது. நீ நல்லா வருவடா நல்ல வருவ .. கண்ணாடி போட்ட பக்கிகள நம்ப கூடாதுன்னு வசு சொன்னது சரியாத்தான் இருக்கு ..

(யோவ் கண்ணாடி மச்சான், நல்லா இருந்த தீவிரவாதிய இப்படி ஆக்கிப்புட்டியே இது உனக்கே நியாயமா - இப்படி கேட்பது மேலையூர் ஆசிரியர், ஹாரி, பாசித், வானா சுனா இவர்களுடன் அரசன்)

22 comments:

 1. மாப்பிள்ளைக்கு நமிதா போல ஆன்டி தான் கிடைக்கும்.

  இப்படிக்கு
  ஷகிலா பேரவை தலைவர் வ.சு

  ReplyDelete
  Replies
  1. வெளங்கிரும் ஆசிரியரே

   Delete
 2. ராக்கி கட்ட துறத்தி இருப்பாங்க.. நல்லா பாருங்க..

  ReplyDelete
  Replies
  1. ராக்கி கழுத்துல கட்டணுமாம்

   Delete
 3. காதலிங்க சார்..லைப் நல்லா இருக்கும்...காதலை ஆதரித்து நான் துப்பாக்கி எடுத்து சுடாமல் வழக்கம் போல ரொட்டி சுட செல்கிறேன்....இந்த காதலில் ஏதேனும் தடை வந்தால் ஹெல்ப் லைனில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.HELP LINE:100

  ReplyDelete
  Replies
  1. அப்படியே யாரை காதலிக்கனும் என்றும் சொல்லிடுங்க அண்ணே .. புண்ணியமா போகும்

   Delete
 4. Replies
  1. கோத்து விட பாக்குது ...

   Delete
 5. //இந்த வருசமாவது என் காதலை புரிஞ்சிக்குங்க கண்ணாடி மச்சான்// ஏன்யா யோவ் ஒரு வெயிட்டான பிகர மதிக்கணும்னு சொன்னது வாஸ்த்தவம் தான் அதுக்காக இவ்ளோ வெயிட்டுனா கண்ணாடி மச்சான் தாங்க மாட்டான்யா

  ReplyDelete
  Replies
  1. உங்க வெயிட்டுக்கு முன்னாடி இதெல்லாம் தூசு .. மாஸ் ஹீரோவுக்கு ஏத்த மாஸ் ஹீரோயின்

   Delete
 6. //, வசு பதிவு மாதிரி லெங்க்தியா இழுக்காத, அரசன் கழுதை ச்சீ... கவிதை மாதிரி நாலே நாலு //

  இப்ப தான்யா மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. இப்படி நாலு பேர சந்தோச படுத்த எவ்வளவு வேணும்னாலும் அசிங்க படலாம் போலிருக்கே

   Delete
 7. //அது தீவிரவாதியாக இருந்தாலும் சரி)// தக்காளி சுட்டே புடுவன்

  ReplyDelete
  Replies
  1. அவரு ரொட்டி நீ .தக்காளியா .. சங்கம் வெளங்கிரும் ...

   Delete
 8. //ராக்கி கட்ட துறத்தி இருப்பாங்க.. நல்லா பாருங்க..// யோவ் வாத்தி என்ன கல்யாணம் ஆச்சுன்னு திமிரா

  ReplyDelete
  Replies
  1. இப்ப அவரை ஏன்யா ஒரண்ட இழுக்கிறீர் ..

   Delete
 9. //ஷகிலா பேரவை தலைவர் வ.சு// பேரவை தான போ(ர்)ரவை இல்லையே

  ReplyDelete
  Replies
  1. ஷகீலாவுக்கு எதுக்குயா .போர்வை .

   Delete
 10. //இந்த காதலில் ஏதேனும் தடை வந்தால் ஹெல்ப் லைனில் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.HELP LINE:100//

  தீவிரவாதி இந்த நம்பர் க்கு phone panni தான் அடிகடி ஹெல்ப் கேப்பாப்ள போல

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் ..இருக்கலாம் இப்ப 181

   Delete
 11. to : அரசன், sub : காமெடியாமாம், seenu : hehehe

  ReplyDelete
  Replies
  1. இருடி இன்னைக்கே அடுத்த பதிவு ரெடி பண்றேன்

   Delete