Searching...

Popular Posts

Sunday, January 13, 2013

விமான நிலைய அலப்பரைகள் வித் இணையப் போராளி

11:47 AM
சம்பவ இடம் 

சென்னை விமான நிலையம் 

சம்பவம் 

காமெடி கும்மியின் ஆணழகன் பேரழகன் என்றெல்லாம் கும்மி யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்ற ராஜ் தனது பனி நிமித்தம் அமெரிக்க செல்ல இருக்கிறார். விமான நிலையத்தில் சென்று அவரை வழியனுப்புவதற்கு சங்கத்தால் முடியவில்லை என்றாலும் எங்களின் கற்பனைக் குதிரைகள் திடங்கொண்டு போராட ஆரம்பித்தன ( சத்தியமா இது விளம்பரம் இல்லீங்கோ.... )


சம்பவ இடத்திற்கு கும்மி மெம்பர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். ஒருவித செண்டிமெண்ட் கலந்த மன  நிலையில் ராஜ்  ஒவ்வொருவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.  இவர்களை கட்டி மேய்க்க ஒரு ஆள் வேண்டுமே, எங்களின் முன்னோடி, தெள்ளத் தெளிவான கண்ணாடி எல்லாமே எங்களுக்கு பட்டிக்ஸ் தான். இணையப் போராளி என்று பன்னி குட்டியரால் பாராட்டப்பட்ட பட்டிக்ஸ் அமானுஷ்யம் பரவிய தனது முகத்தால் கும்மியின் மெம்பர்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த நேரம் ஹாரியிடம்.

"யோவ் நீ தான தலைவன்னு ஊர ஏமாத்திட்டு திரியுற எங்கள ஒரு பயலையும் காணோம், இங்கன தான இம்புட்டு நேரம் நின்னுட்டு இருந்தானுவ" 

பட்டிக்ஸ் பேசியதை தலைவர் கண்டுகொள்ளவில்லை, ஏதோ ஆழ்ந்த ரோசனையில் இருந்தார். 

இந்த நேரம் பார்த்து வரலாற்றுச் சுவடுகள் சம்பவ இடத்தினுள் வந்து சேரவும், பட்டிக்ஸ் வசுவைப் கவனிக்கமால் அவரைக் கடந்த ஏர் ஹோஸ்டசை சைட் அடிக்கவும் சரியாக இருந்தது.

இதைக் கண்டு கடுப்பான நமது வசு சத்தமாக "குரு நாயரே குரு நாயரே " என்று கத்தத் தொடங்கினார்.

"ஏலேய் என்ன குரு நாயருன்னு சொல்லதான்னு எத்தன தபா சொல்லிருக்கேன், ஏம்லே இம்சயக் கொடுக்க"

" கோவபடாதீங்க குரு நாயரே, நீங்க தான என் குரு நாயர், உங்க மேல உள்ள பாசத்துல தான அப்படி கூப்டுறேன் குரு நாயரே"

"எம் மேல உள்ள பாசத்துல கூப்ட மாதிரி தெரியலையே, சைக்கிள் கேப் ல நீ என்ன குரு நாயேனு கூப்ட்ட மாதிரி தோணுதே "

இந்நேரம் விமான நிலைய அறிவிப்பு மிக சத்தமாக காற்றில் கலக்கத் தொடங்கியது 

பயணிகளின் கனிவான கவனத்திற்கு லண்டன் வரை செல்லும் பிரிட்டிஷ் ஏர்பஸ்சின் பயணிகள்  செக் இன்னிற்கு தங்களைத் தயார் செய்து கொள்ளவும். அறிவிப்பைக் கேட்டதும் அமெரிக்க செல்வதற்கான தனது பயணச் சீட்டை சரி பார்க்கும் வேளையில் வசு ராஜிடம். 

" தல உங்கள எல்லாரும் நல்லா ஏமாத்திட்டானுங்க தல, பிளைட்ன்னு சொல்லிட்டு எர்பஸ்ல கூட்டிட்டு போவ போறானுங்க, வாங்க தல போய் என்னான்னு கேட்டுட்டு வருவோம்" 

திடிரென்று வித்தியாசமாக ஒரு ஏற்பட, சத்தம் வந்த திசையை  நோக்கி ஒட்டுமொத்த விமான நிலையமும் திரும்ப, வசு தனது கைகுட்டையால் முகத்தையும் பட்டிக்ஸ் தனது வாயையும் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.

"எலேய் நீ உண்மையிலேயே துபாய் ல ஒட்டகம் மேய்ச்சியா இல்ல தூத்துக்குடில மாடு மேய்ச்சியா, கொன்னியா பிளைட்டுக்கு இன்னொரு பேரு ஏர்பஸ்ன்னு தெரியல, நீயெல்லாம்....." வசு தன முக்த்தை அவசரமாக மூடுகிறார். 

நடந்து கொண்டிருக்கும் எதையுமே சட்டை செய்யமால் ஹாரிபாட்டர் ஆழ்ந்த சிந்தனையிலேயே லயித்து இருந்தார், அவர் என்ன "ஐடியா" செய்து கொண்டுள்ளார் என்று யாரவது "கேளுங்க" என்று படிக்க்ஸ் கண்டிப்புடன் உத்தரவு இட்டும் ஒருவரும் கேட்பதாய் இல்லை , ஹாரியும் மவுனம் களைவதாய் இல்லை.

கைப்புள்ள என்று தன்னைத் தானே பெருமைப் படுத்திக் கொள்ளும் சங்கத்து தீவிரவாதி கையில் ஒரு பொட்டலத்தை மறைத்து பதுக்கி வைத்துக் கொண்டிருக்க, நமது பாசித் அதை கண்டு பிடித்து லாவகமாக பிடுங்க முற்படும் வேளையில் 

" என்னடா அங்க சத்தம் "


"பேசிட்டு இருந்தேன் தல" என்று தீவிரவாதி மழுப்ப முற்பட, தீவிரவாதி எதையோ மறைக்க முயல்வதை தன் அதி புத்திசாலித்தனத்தால் பட்டிக்ஸ் கண்டு பிடித்துவிட்டார்.

" யோவ் என்னதுயா அது, வெடி கிடி கொண்டு வந்துட்டயா, டப்பாசு லா இங்க கொளுத்தக் கூடாது, நாம வீட்டுக்குப் போய் கொளுத்துவோம்" என்று சொல்லிய நிலையில், தம்பி அண்ணா தயக்கத்துடன் அந்த பார்சலைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.

"நம்ம தல ஊருக்கு போகுது, முப்பது மணி நேரம் பிரயாணம், தலக்கு பசிக்குமேன்னு...."   வசு தீவிரவாதியை இடைமறித்து " கைப்புள்ள தல லா பசிக்காது,வவுறு தான் பசிக்கும், ஹையோ ஹையோ"     என்று காமெடியாக வசு மீண்டும் தன முகத்தைத் துடைக்கும் நிலைக்கு ஆளாக்குகிறார் நமது பட்டிக்ஸ்.

"நீ பதில் சொல்லுயா" என்று தம்பி அண்ணாவை என்கரேஜ் செய்கிறார் பாசித். " யாருமே கேள்வி கேக்கலையாம் இதுல பதிலாம்" என்று வசு சொல்ல முற்படும் நேரத்தில் வசு பட்டிக்சை பார்க்க, பட்டிக்ஸ் வசுவைப் பார்க்க " டி காபி டி காபி டி காபி" என்று உளறத் தொடங்குகிறார் வசு.

தம்பி அண்ணா தன் பாசகார தழுதழுத்த குரலில் ஆரம்பிக்கிறார் " தலைக்கு (வசுவை ஓரக்கண்ணால் ஒரு பார்ப்வை பார்த்துவிட்டு)  பசிக்கும், அங்க வாங்கி திங்க ஓட்டல் எதுவும் இருக்காது அதான் நானே தோஸ சுட்டு கொண்டு வந்தேன்"

" யோவ் தீவிரவாதி அப்போ நீ மிளிதிரி ல தோச தான் சுட்டுட்டு இருந்த்ருக்க, இதுல சுட்டே புடுவேன், சுட்டே புடுவேன்னு டயலாக் வேற, தக்காளி உன்ன சுட்டே புடுவேன் பாத்துக்கோ"

"பட்டிக்ஸ் அண்ணே, அண்ணி சொல்லுச்சு நீங்க நல்லா சப்பாத்தி சுடுவீங்கன்னு, நம்ம தீவிரவாதி மாதிரி நீங்களும் சுட்டு எடுத்துட்டு வந்த்ருகலாம் ல" என்று வசு நமது பட்டிக்சைப் பார்த்து சொல்ல, வசு நழுவ, இம்முறை ராசா தனது முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார்.  

ராஜ் தீவிரவாதியிடம்" தல உள்ளே எல்லாம் குடுப்பாங்க, உங்களுக்கு ஏன் வீண் சிரமம்" என்று லாலாலா லாலா லாலாலா பின்னணி இசையில் சீரியஸ் ஆக, அதற்க்கும் மேல் சீரியசாக தான் சுட்ட தோசையை மிளகாய்ப் பொடியில் தேய்த்து ராஜுக்கு ஊட்டி விடும் நேரம் அனைவரையும் தள்ளிவிட்டு அந்த தோசையை தனது வாய்க்குள் லாவகமாக தள்ளுகிறார் மிஸ்டர் ராசா அலைஸ் அரசன். இந்நேரத்தில் அனைவர் கண்களும் கலங்குவதைப் பார்த்த ராசா, "அண்ணே உடுங்கன்னே ஒரு தோசைக்குப் போயா எல்லாரும் அழுவாங்க விடுங்கண்ணே விடுங்கண்ணே."

"அடங் கொய்யால மிளாகப் பொடி கண்ணுல தெறிக்கது கூட தெரியாம உனக்கு தோச கேக்குது தோச" என்றதும் தான் அரசன் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.   


இவ்வவளவு நடந்த பின்னும் தலைவன் ஹாரி ஆழ்ந்த மொவுன தியான நிலையில் இருப்பது கண்டு கொதித்து அவனைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிறார். இயல்பு நிலைக்கு திரும்பிய ஹாரியிடம் பட்டிக்ஸ் கேட்க, 

ஹாரி கொடுத்த அமானுஷ்ய பதில் " மிஸ்டர் பட்டிக்ஸ், தல ஊருக்கு போறத பத்தி ஒரு பதிவு ரெடி பண்ணிட்டேன், ஆனா அத போடுறதுக்கு புதுசா ஒரு வலைபூ வேணும், அதுக்கு தான் என்ன பேரு வைக்கலாம்னு  யோசிச்சிட்டு இருக்கேன்" 

என்ற பதிலை கேட்டு பட்டிக்ஸ் கடுப்பாக தன முகத்தைத் துடைக்க ஹரி பாத்ரூம் நோக்கியும் இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில் ராஜ் விமானத்தை நோக்கியும் ஓடுகிறார்.


இருந்தும் மொத்த கும்மி கூட்டமும் நம்ம தல ராஜைப் பார்த்து சந்தோசமாகக் கத்தியது " தல ஹாப்பி ஜார்னீ""..........

அமானுஷ்யம் தொடரும் 


இந்தப் பதிவை எழுதியது சீனு என்றாலும், இதற்கு கிடைக்கும் வினை எதிர்வினை அனைத்தும் வா னா சு னா வையே சாரும்....


தமிழர்களே உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...... 

உழவர்களைப் போற்றுவோம், இயற்கையைப் பேணுவோம்.....  

    


9 comments:

 1. ஆகா இந்த படத்தை நாங்க ஏற்கனவே எடுத்து போட்டு பல வருசமாச்சே. ரொம்ப நல்லா எழுதுறீங்க.

  ReplyDelete
 2. காமெடி கும்மி பசங்களா எல்லோருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

  ஆ...ங்.... சொல்ல மறந்துட்டேன். பதிவு கலக்கல், அருமை :-)))

  இந்த மாதிரி எல்லாம் போட்டோ போட்டு எல்லாரையும் பயமுறுத்தாதீங்க மக்கா. கோவம் வந்து உங்களைதான் அடிக்கப் போறாங்க. பை தெ வே கூலிங் கிளாஸ் போட்டு ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவர் யாரு?

  ஆளு செம பெர்சனாலிட்டி வாவ்வ்வ் ஹாலிவுட்ல கூட இந்த மாதிரி ஒருத்தர் இல்லை போலயே.:-)))))))))))))

  ReplyDelete
 3. Nandri nanbarkale .....naan enkae ponalum naam innaindhu irupom.....
  Nandri....:) :)

  ReplyDelete
 4. பூவோடு சேர்ந்த நாறும் நாரும்
  குயிலோடு செர்ந்த காக்காவும் காருமோ?
  சந்தானம், பவர்ஸ்டார் படத்துக்கான கமெண்ட்!

  மற்றபடி நல்ல Flow.வாசிக்கையில் பலமுறை முகத்தை மூடிகொண்டேன் ( சிரிப்பை அடக்கமுடியாமல் )
  சூப்பர்.

  ReplyDelete
 5. ஏலேய் சீனு... நம்ம அட்மின் ஹாரி போட்டோவை கடைசியா போட்டிருக்கியே அவன்கிட்ட அனுமதி வாங்குனியாலே

  ReplyDelete
  Replies
  1. ஹாரிக்குள்ள கமல போல ஒரு கலைஞன் இருக்கான் என்கிறது, வானா சூனாவுக்கு தெரிஞ்சு இருக்கு பொது மக்களுக்கு தெரியலியே

   Delete
 6. //பை தெ வே கூலிங் கிளாஸ் போட்டு ஹீரோ மாதிரி ஒருத்தர் இருக்காரே அவர் யாரு?//

  அவர்தான் வட்டச் செயலாளர் வண்டுமுருகனுக்கு டீச்சிங் பன்னுனவர்.., பெரிய ராச தந்திரி..

  ReplyDelete
 7. //ஆளு செம பெர்சனாலிட்டி வாவ்வ்வ் ஹாலிவுட்ல கூட இந்த மாதிரி ஒருத்தர் இல்லை போலயே.:-)))))))))))))//

  அவரு கொஞ்சம் பர்சனாலிட்டி தான் ஒத்துக்கிறேன், ஆனா கடைசி படத்திலிருக்கும் எங்க அட்மின் ஹாரி பக்கத்தில் கூட அவர் நிற்கமுடியாதுங்றதை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்!

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா.....இருந்தாலும் பவர் ஸ்டார் போட்டோ இந்த பதிவுக்கு அழகு சேர்க்கிறது !! பதிவு தொடர வாழ்த்துக்கள் நண்பரே !

  ReplyDelete