Searching...

Popular Posts

Thursday, March 28, 2013

ஆல் கும்மி அப்பாஸ் பீ கேர் "புள்"

7:48 AM

மீபத்தில் டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து நடைபெற்ற பதிவர் சந்திபிற்கு எங்கள் அண்ணன் கலக கண்ணன் பட்டிகாட்டான் அவர்கள் தனது இளைய புதல்வனை தன்னுடன் அழைத்து வந்திருந்தார், நேரம் செல்ல செல்ல அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கவே என்னவோ பாட்டு பாடத் தொடங்கினான்... அப்படி என்ன தான் பாடுகிறான் என்பதை கூர்ந்து கேட்கத் தொடங்கினேன்..... நல்ல அழகாக ஸ்ருதி சேர்த்து பிள்ளைத் தமிழில் கொஞ்சலாக மிரட்டலாக அவன் பாடிய பாடல்....

டாடி வாடா வீட்டுக்குப் போலாம்....
டாடி வாடா வீட்டுக்குப் போலாம்....
டாஆஆடிடிடி  வாஆஆடாஆஆ வீட்டுக்குப் போலாம் 
டாடி வீட்டுக்குப் போலாம் வாடா   
டாடி வாடா வீட்டுக்குப் போலாம்

என்ன அருமையான பாடல், இதைக் கேட்டதும் நமது கும்மி சிங்கங்களையும் ( இப்படி எல்லாம் எழுதச் சொல்லி மிரட்டுறாங்க மை லார்ட்) அவர்களது சிங்கங்களையும் எனது கற்பனையில் சீர்தூக்கிப் பார்த்தேன்.... ஷ்ஷபப்பா படிக்கனும்ன்னு வந்துட்டீங்க படிச்சி தான் ஆகணும்...

சீக்கிரம் கும்மியில் இணையப் போகும் இணையப் போராளி  மிஸ்டர் எக்ஸ் 

ஆல் அப்பாஸ் பீ கேர்"புள்"...

சங்கத்து தீவிரவாதியும் அவரது மகனும் 

தீவிரவாதி 

"சட்டி சுட்டதடா கை விட்டதடா மவனே பாரதி சட்டி சுட்டதடா கை விட்டதடா.... " தீவிரவாதி 

"அப்பா டேய் எத்தன தடவ சொன்னாலும் கேக்க மாட்டியா... ஊருக்குள்ள எங்கப்பா ராணுவத்துல வேலை பாக்குறாருன்னு பெருமையா சொல்லி இருக்கேன், நீ என்னடான்னா... போப்பா உனக்கு ஒரு ரொட்டிய கூட ஒழுங்கா சுடத் தெரியல.... நீயெல்லாம்..... ப்பா டேய் அடுத்த தடவ ரொட்டி சுடும் போதாது சட்டி சுடாம ரொட்டிய சுடு என்ன"      

அரசாங்க அலுவலர் சின்னாவும் அவரது பிள்ளையும்  

சித்திரையே நிலா, ஒரே நிலா, பரந்த வாஆஆனம்.... 

மானம் போகுது டா ப்பா... பாட்டு படிக்கிறன்ற பேருல ஏண்டா என் உசுர வாங்குற  அதான் காமெடி கும்மில எல்லாவனும் வெட்டியா தான இருக்கான் போ அங்க போய் கும்மி அடி... ப்போ ப்போ ப்போ வீட்ல யாராது பெரிய மனுசங்க இருந்தா வர சொல்லு ப்போ ப்போ ப்போ....   

அவைப்புலவர் அரசனும் அவரது செல்லக்கிளிகளும்
( பயபுள்ள கவிபாடியே பலபேர பாடி ஆக்குனதால, அடியாள் வேலையவும் பார்ட்டைமா பாக்றாப்ல)     

அரசனின் பால்ய படம் 

"செல்லக் கிளிகளாம் பள்ளியிலே, செவந்தி பூக்கலாம் தொட்டிலிலே என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை, என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை..." அரசன் 

"டேய் அப்பா உன் பிளான் என்னன்னு எனக்கு தெரியும், என்ன அசிங்க அசிங்கமா திட்ட வைக்காத... போயிரு"  

(இரட்டை அர்த்தத்தில் படிப்பவர்கள் கனவில் முனிம்மா வந்து தொலைக்கக்கடவது)

எங்கள் தங்கத்தலைவன் ஹாரி 

(அது என்னனே தெரியல, இவன் கேளுங்க மேல எனக்கு ஒரு கண்ணாவே இருக்கு, அட அதுக்காக அது என்னான்னு தான் கேளுங்களேன்)  

"கேளுகள் கொடுக்கப்படும் தட்டுகள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுப்போம் என்றார்..." ஹாரி  

" டேய் அப்பா அதான் ஒரு பயலும் கேக்கலன்னு தான கேளுங்கவ க்ளோஸ் பண்ணின அப்றம் என்ன பெருசா பாட்டு வேண்டி கிடக்கு....  

நம்ம வாத்தி ராசபாட்டை ராசாவும் அவரது ராசாவும் 

வாத்தியின் வகுப்பை கவனித்த மாணவர்கள் 

"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே உள்ளது தம்பி".... ராஜா

நீ வாங்குற அஞ்சு பத்துக்கு உனக்கு ஏண்டாப்பா இந்த பொழப்பு 

பாசித்தும் அன்பு மகனும் 

இணையச் சிக்கலை சரி செய்யும் பணியில் பிளாக்கர் பிரண்ட் 

"காதல் வைரஸ் ஒன்று கண்டேன் கண்டேன் நானும்... உன் கண்கள்  ரெண்டில் இன்று" 
"மவனே இப்ப என்ன பாட்டு பாடுன, கொஞ்சம் சத்தமா பாடு ராசா, தெளிவா கேக்கல... " பாஸித்    

"அப்பா இல்ல பா வேணாம், அது எதுக்குப்பா உனக்கெல்லாம்" மவன்

" இல்லபா எதோ வைரஸ்ன்னு காதுல விழுந்தது, என்னன்னு தெரிஞ்சா பதிவு போடலாம்ன்னு பார்த்தேன்" பாஸித்    

" நீ இவ்ளோ அக்கறையா கேக்கும் போதே தெரியும் டா ப்பா, இரு இரு அரசன் மாமா வரட்டும் நாலு கவிதை சொல்ல சொல்றேன், அப்பனா தான் நீ சரியா வருவ...

எங்கள் தங்கம், வரலாறு போற்றும் சிங்கம், சங்கம் தழைக்க போராடும்.....  போராடும்.....( ரைமிங் வரல.. வாங்க மேட்டர் உள்ள போவோம்)     

"ஆஆஆஆஆஆஆ....ஆஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.." வரலாறு 

"ஐயோ ப்பா டேய் நீ இப்ப கத்துறத நிறுத்த போறியா இல்லையா..."  

"ஏண்டா மவ அப்பன போயி இப்புடி திட்டுற" ...

" நீ பண்ற காரியத்துக்கு உன்ன போலீஸ்ல புடிச்சிகுடுக்காம இருக்கனேன்னு சந்தோசப்படு.. 

" என்றா ஆச்சுன்னு இப்ப கத்துற நீயி"
 
"ஆங்....உனக்கு நீயே வரலாறுன்னு பேரு வச்சிப்ப,அதுக்காக வரலாறு படத்துல இருந்து தான் பாட்டு பாடனும்னு என்ன சட்டமா, சரி அதாது பரவாயில்ல அதுக்காக ஏண்டா தீயில் விழுந்த தேனா பாட்ட 'ஆஆ ஆஆ' ன்னு கத்தி கூப்பாடு போடுற"  

வசுவின் அறிய புகைப்படம் 
பின்குறிப்பு மற்றும் முக்கிய புண்குறிப்பு : ஒருவேளை இந்தப் பதிவு யார் மனதையாவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ புண்படுத்தி இருந்தால்... அது மட்டுமே இந்தப் பதிவின் முழு நோக்கம் என்பதை மிகப் பெருமையுடன் சொல்லிக் கொல்கிறேன்....20 comments:

 1. வணக்கம் ஆல் சங்க உறுப்புகளுக்கும் ...

  ReplyDelete
 2. யோவ் சீனு எங்கே இருந்து இந்த படங்களை எடுத்தே! என்னமா இருக்கு அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம் போலிருக்கு ...

  ReplyDelete
 3. போப்பா உனக்கு ஒரு ரொட்டிய கூட ஒழுங்கா சுடத் தெரியல.... நீயெல்லாம்..... ப்பா டேய் அடுத்த தடவ ரொட்டி சுடும் போதாது சட்டி சுடாம ரொட்டிய சுடு என்ன" //

  இப்ப தீவிரவாதி உண்மையிலே சுட ஆரம்பிச்சிட்டாராம், பாத்து சூதானமா இரும்..

  ReplyDelete
 4. Replies
  1. யோவ் என்னய்யா சிரிப்பு.... புடிங்க சீனுவ ஒரு போடு போட்டுடலாம்....

   Delete
 5. வாத்தியையும், தலையையும் வம்பிழுத்த சீனுவை வன்மையாக கண்டிக்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. சரியா சொன்னிங்க பாஸ் .. வாங்க மதியம்சாப்பிடும் வரை உண்ணாவிருதம் இருப்போம் ..

   Delete
 6. என் மனசை நோகடிக்கலீ்ங்க...

  ReplyDelete
 7. எங்கள் தங்கம், வரலாறு போற்றும் சிங்கம், சங்கம் தழைக்க போராடும்..... போராடும்.....( ரைமிங் வரல..)


  -அப்படியே எல்லா வார்த்தையிலும் எண்டர் அடிங்க சரியாயிடும்...

  ReplyDelete
  Replies
  1. என்டர்க்குபதில் உருட்டு கட்டையால் அடிங்க ...

   Delete
 8. யோவ் சீனு ... என் போட்டோ எத்தனை நல்ல படம் இருக்கு... அதைவுட்டு இப்படி ஒரு படம் ... நீ நல்லா வரணும் .. வருவைய்யா ...

  ReplyDelete
 9. வசு வோட படம் பார்த்தா சிரிப்பு நிக்காம வருது ...

  ReplyDelete
  Replies
  1. உலகத்த கலக்குதோ இல்லையோ ..வயித்த கலக்குது உங்க ஹேர் ஸ்டைல்

   Delete
 10. ஏலேய் சீனு.. என்ன அவமானபடுத்திபுட்டதா நெனைக்காத... 2025-ல இந்த கேர் ஸ்டைலுதான் ஒலகத்த கலக்கபோகுதுலே பக்கி... :p

  ReplyDelete
 11. அட சங்கத்து சிங்கங்கள் எல்லாருக்கும் என்ன வாயிற்று

  ReplyDelete
 12. //வாத்தியின் வகுப்பை கவனித்த மாணவர்கள்
  //

  அய்யயோ .. அப்படியே கரக்டா இருக்கே ... எப்படி எடுத்திங்க ??

  ReplyDelete