Searching...

Popular Posts

Tuesday, April 30, 2013

என்னது வசுவுக்கு இன்னிக்கு பொறந்த நாளா !

12:18 PM
எங்கள் அண்ணன், அஞ்சா நெஞ்சன்... 
கலகக் கண்மணி... 
ஆயிரம் அடிவாங்கியும்
அலப்பறை செய்யாத மன்னன் 
வசுவை வாழ்த்தவோ வணங்கவோ 
எங்களுக்கு வயதில்லை....

இந்த போட்டோவ தேடுறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு 
இன்று உனது 
உண்மையான பிறந்தநாளா 
உண்மை இல்லதா பிறந்தநாளா 
என்று எங்களுக்குத் தெரியாது.

இருந்தும் உன் பிறந்தநாளை 
கொண்டாடுகிறோம் 
காரணம்  
வரலாறுக்கு ஏது ஆரம்பம், 
வரலாறுக்கு ஏது முடிவு.... 


உழைப்பாளர் தினத்தில் பிறந்து 
உழைப்பாளர்களை உண்னதமாக்கினாய் 

உன்னால் உன்னதமானது 
பாரதநாடு அன்று 
உன்னால் உன்னதமானது 
வெளிநாடு இன்று 

மே தினத்தில் பிறந்து 
ஆடு மேய்த்தாய் 
அன்று 

ஒட்டகமும் மேய்கிறாய் 
இன்று 

மீண்டும் உன் 
மேய்த்தால் அதுவே 
நன்று 


இன்று போல் என்றும் நீர் நீடுடி வாழ வாழ்த்துக்கள்   

இன்று வாசுவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரியாணி பொட்டலாம் இலவசமாக வழங்கப்படும் 

முகவரி 

வசுவின் இருப்பிடமான 

நம்பர் ஆறு 
விவேகானந்தர் குறுக்கு தெரு 
துபாய் மெயின் ரோடு 
துபாய் பஸ்ஸ்டான்ட் அருகில் 
துபாய் 


பிரியாணி பொட்டலத்தை வசு சாப்பிடும் முன் வசுவின் பக்த கேடிகள் விரையுமாறு கேட்டுக் கொல்லப்படுகிறார்கள்.  

16 comments:

 1. ஹேப்பி பெர்த் டே வாசு (இன்னைக்காவது யாரும் பெரிய மனுசய்ங்க வசுவோட நெச பெயர கேட்டு சொல்லுங்கப்பா.. )

  ReplyDelete
  Replies
  1. வசுவுக்கு இந்த பெற விட ஒரு நல்ல பேரு வேணுமா என்ன... பக்கி எல்லா இடத்துலையும் போய் அடி தான் வாங்கிட்டு வருது அதுனால கொசுன்னு பேரு வச்சிருவோமா :d

   Delete

 2. அன்பு நிலைபெற !
  ஆசை நிறைவேற !
  இனபம் நிறைந்தாட !
  ஈடில்லா இந்நாளில் !
  உள்ளத்தில் குழந்தையாய் !
  ஊக்கத்தில் குமரியாய் !
  எண்ணத்தில் இனிமையாய் !
  ஏற்றத்தில் பெருமையாய் !
  ஐயம் நீங்கி !
  ஒற்றுமை காத்து !
  ஓர் நூறாண்டு !
  ஔவை வழி கண்டு !
  நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !

  ReplyDelete
  Replies
  1. //ஊக்கத்தில் குமரியாய் !// யோவ் வசு நோட் திஸ் பாயிண்ட்

   Delete
 3. உண்மையான (அ) உண்மையில்லாத பிறந்ததினமோ எதுவாக இருந்தாலும் சரி, வசுவுக்கு இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்!

  அதுசரி... வசுவுக்காக நீ எழுதியிருக்கறதுக்குப் பேரு கவிதையாலே?
  b-(

  ReplyDelete
  Replies
  1. அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல வசுவ பத்தி எழுதணும்னா புது கவிதை வரவே மாட்டேங்குது

   அதான் அறுசீர்கழிநெடிலடி வெண்பால ஒரு பா இயற்றி இருக்கேன் நல்ல இருக்க வாத்தியாரே :>)

   Delete
  2. இன்றுதான் அவரின் உண்மையான பிறந்த நாள், உங்களுடன் சேர்ந்து நானும் என் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்

   Delete
 4. வசு பிறந்த நாளை முன்னிட்டு ஹாரி , பாசித், அரசன், சீனு நால்வரும் மொட்டை அடித்து (அவர்கள் தலையைதான்) தீ மிதிப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அய் நம்ம வாத்தி மொட்ட போடா போறாராம் அல்லாரும் வாங்கோ

   Delete
 5. இந்த மே தினம் இனி கோளாறு சாரி வரலாறு தினம் என அழைக்கபடும்

  ReplyDelete
  Replies
  1. வரலாறு தினம் வேணாம்.. கோளாறு தினமே நல்ல தான் இருக்கு

   Delete
 6. இனிய நண்பருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ட்ரீட் கேளுங்க சார் ;((

   Delete
 7. அரேபிய கண்டத்திலிருந்து காய்ச்சிய உற்சாக பானம் வாங்கி தருவதாய் உறுதி அளித்த எங்கள் நாயகருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வசு அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு தலா அரை பவுன் தங்க காசு கொடுக்க போவதாக மயிலாடுதுறையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன, மேலையூர் ஆசிரியர் வாழ்க ...

  அடுத்த படியாக மேடவாக்க தோழர் சீனு ஐயாயிரம் பேருக்கு தலா அரை கிலோ வெள்ளி வழங்குவதாக செய்தி கசிகிறது! மற்ற தோழர்கள் வரலாற்றின் பிறப்பை எப்படி கொண்டாடுவது என தீவிரமாக யோசித்து வருவதால் தமிழகத்தில் ஒரு பதற்றமான சூழல் உருவாகும் நிலை ...

  - காமெடி கும்மி செய்தி .பிரிவு ...

  ReplyDelete
 9. அப்பாடா இன்னிக்கு நமக்கு 43-ஆவது பிறந்த நாளுங்கரத்தை எந்த இடத்திலேயும் மெனுசன் பன்னல... வாங்குன காசுக்கு கரிட்டா வேலை பார்த்திருக்கான் பக்கி.!

  ReplyDelete