Searching...

Popular Posts

Saturday, April 20, 2013

திருமதி தமிழ் - அமர காவியம் ஒரு பார்வை

9:35 AM
பதிவர் பட்டாளமே படை திரள, வுட்லேன்ட்ஸை அடைந்தோம். நான், மின்னல் வரிகள், மெட்ராஸ் பவன், ஸ்கூல் பையன், அஞ்சா சிங்கம், கரைசேரா அலை மற்றும் ஆரூர் மூனா.         

படம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில், ஆரூர் மூனா செந்திலுக்கும், அஞ்சா சிங்கம் செல்வினுக்கும் தவிர்க்க முடியா வேலை வரவே, வேறு வழியே இல்லமால் அரங்கத்தில் இருந்து இத் திரைக்காவியத்தை பார்க்க முடியா வருத்தத்தில் அழுது கொண்டே வெளியேறினர்.


மின்னல் வரிகளுக்கும், அரசனுக்கும் கூட இடைவேளை நேரத்தில் கிளம்பி செல்லும் வாய்ப்பு கிடைத்து, இருந்தும் உலக மகா காவியத்தை தவறவிடக் கூடாது என்ற நிலையில் உறுதியாய் இருந்ததால், அவர்கள் வாழ்வில் ஜெயித்து விட்டனர். எங்களால் இனி எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்ளும் மன திடம் வந்துவிட்டது என்று பெருமையாய் சொன்னனர்.
--------------------------------------------

தங்கத் தலைவன் திரையில் தோன்றும் அந்த நொடியில் இருந்து ஆரம்பமாகிறது அந்த பொன்னான (ம) புன்னான தருணம். எடுத்தவுடன் சண்டைக் காட்சி. காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளை பந்தாடுகிறான் தமிழரசன். அவனை மூட்டை கட்டி கடலில் தூக்கி எறிகின்றனர். 

கடலில் எறியப்பட்டவன் சாக்கடையில் இருந்து எழுந்து வந்தவனைப் போல் வருகிறான். சூடு பிடிக்கத் தொடங்குகிறது. வெயில் காலம் என்பதால் தியேட்டரில் ஏ.சி அளவு கம்மியாக இருந்தது. சீட் சூடு பிடிக்கத் தொடங்கியதால் சீட்டில் உக்கார முடியவில்லை.

நேரம் கிடைத்த போதெல்லாம் ஒவ்வொரு காட்சியாக எடுத்து, அதை நேரம் கிடைத்த போதெல்லாம் ஒட்டவைத்து, நேரம் கிடைத்த போது வெளியிட்டு உள்ளார்கள் இந்த உலக மகா காவியத்தை. காரணம் படம் பல வருடங்களுக்கு முன் எடுக்கபட்டது. படம் எடுக்கப்பட்ட ஆண்டை உத்தேசமாக கணக்கிட்டால் 2005 ஆக இருக்கலாம். 2005இல் சுனாமி வந்து தமிழகத்தை அழித்துவிட்டதால், மற்றொரு அழிவு உடனே வேண்டாம் என்று சற்று காலம் தாழ்த்தி வெளியிட்டுள்ளனர்.      


இதுவரை உலக சினிமா பார்த்தது இல்லை. கொரியன் சினிமா பாரு மச்சி உசுர உருக்கிரும்ன்னு சொல்லுவானுங்க. ஆயிரம் கொரியன் சினிமா சேர்ந்த  படத்துல கொரில்லாவுக்கு பதிலா நம்ம ஹீரோ நடிச்ச படம் தான் திருமதி தமிழ்.

இனி 'சிரி'யசான விமர்சனம் :

மாறுபட்ட கதைக்களம். சிங்காரச் சென்னையிலும், கோயம்பட்டூரிலும் நடப்பது போல் காட்டப்பட்ட சினிமா முழுக்க முழுக்க காட்சியாக்கப்பட்டது குமரி மாவட்டத்தில். சென்னைக்கான அடையாளத்தை ஒரு பிரேமில் கூட காட்டாமல் சென்னையில் நடப்பது போல் கதையை நகர்த்திய முதல் படம் இது தான் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது.

எஸ்.ஏ ராஜ்குமாரின் பின்னணி இசை கள்ளையும் கரைக்கிறது, குவாட்டர் இல்லமால் மப் ஆன எபெக்ட்டை தருகிறது.  கேமெராவில் இரண்டு கோணம் மட்டுமே வைத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய கோணத்தை ஏற்படுத்தியுள்ளார் கேமரா மேன். ஒன்று ஜூம் அவுட் மற்றொன்று ஜூம் இன்.

டமிலரசனில் தொடங்கி சும்மா வந்து போகும் ஆயா வரை யாரையும் விடாமல் துரத்தி சென்று ஜூம் இன் செய்கிறார் அடுத்த நொடி ஜூம் அவுட் செய்கிறார். சகலகலா வல்லவன் யா அந்த ஆளு என என்னும் படி அட போட வைக்கிறார்.

சாதாரண லவ் ஸ்டோரி இல்லை உலகமகா லவ் ஸ்டோரி. மற்ற கதைகளில் வரும் திருப்பங்களைப் பார்த்து கழுத்து மட்டும் தான் சுளுக்கிக் கொள்ளும், இங்கோ பல திருபங்களையுடைய இத் திரைகதையில் பயணித்து. திரும்பி திரும்பி, தென்காசியில் என் பக்கத்துக்கு வீட்டு முட்டு சந்து வரை கொண்டு போய் விட்டுவிட்டது திரைகதை. மனிதன் அநியாயத்திற்கு யோசித்து யோசித்து கதையை செதுக்கி உள்ளார்.

ஒரு முக்கியமான திருப்பம்.


கதையில் இரண்டு தேவயாணி. முதலாமவர் நம் 'அகில உலக அண்ட பிரமாண்ட அழகன் தமிழரசன்' கிடைக்கவில்லை என்ற காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்கிறார். இருந்தும் கிளைமேக்சில் திடிரென்று மற்றொரு தேவயாணி வருகிறார். என்ன என்று பார்த்தால் இங்கு தான் அறிவியலின் உன்னத அதிர்ச்சி புகுந்து விளையாடுகிறது.

தேவயானியின் அப்பாவான ராதாரவிக்கு இரண்டு பொண்டாட்டி. இரண்டு வேறு வேறு பொண்டாடிகளுக்கு பிறந்த குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கிறார்கள்.

இதற்கு முன் நாம் பார்த்த தமிழ்ப் படங்களில் ஒரு தாய்க்கு பிறந்த குழந்தைகள் மட்டுமே டபுள் ஆக்டாக இருப்பார்கள். இப்படத்தில் இரு வேறு பொண்டாடிகளுக்கு பிறந்த குழந்தைகளும் ஒரே மாதிரி இருந்துத் தொலைத்து ஆனந்த அதிர்ச்சி. ஓ மை காட் ஐ கான்ட் பிலீவ் திஸ் மெடிக்கல் மிராக்கில். இட் இஸ் எ பெர்பெக்ட் ட்விஸ்ட்.

சுஜாதா திரைகதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில், ஒருவர் எழுதிய கடிதத்தை படிக்கும் பொழுது அவரே படிப்பது போல் காட்டுவது பழைய திரைக்கதை உத்தி என்று எழுதியுள்ளார். ஆனால் ராஜகுமாரன் அந்த பழைய உத்தியை புதுமையான விதத்தில் காட்சிபடுத்தியுள்ளார்.

ராமாயணம் மகாபாரதம் போன்ற, ஏன் அதனுடன் எல்லாம் கூட ஒப்பிட முடியாது, இது மாறுபட்ட காவியம், அதனால் முழுக் கதையையும் சொல்ல முடியாது, மேலும் சொன்னால் அதில் இருக்கும் விறுவிறுப்பு குறைந்து விட வாய்ப்புகள் பிரகாசம். அதனால் நீங்கள் நிச்சயம் இந்தப் படத்தை அரங்கில் பார்க்க வேண்டும்.

தமிழரசன் பேசும் வசனங்கள் காதில் தேன் பாய்கிறது. இவரை எல்லாம் ஏன் தமிழகம் இன்னும் முதலமைச்சர் ஆக்கவில்லை என்ற கேள்விக்குப் பின் ஒரு ஆச்சரியக் குறி வருகிறது. முழு நீள வசனங்களை அநாயசமாக ஒப்பிக்கிறார், மனிதன் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் இந்த ஆர்வத்தை காட்டியிருந்தால் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கியிருக்கலாம், நல்லவேளை அப்படி எல்லாம் நடக்கவில்லை, இல்லை என்றால் இந்த அமர காவியம் நமக்குக் கிடைத்திருக்காதே. 

காஸ்ட்யும் அப்பப்பா அசர அடிக்கிறார். அவரது உடை மற்றும் ஒப்பனை அருமை. ராமராஜன் ரோஸ் கலர் லிப்ஸ்டிக் போட்டார் என்றால் இவர் கருஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக் உபயோகம் செய்துள்ளார்.

வசனங்கள் பக்கா. மனப்பாடம் செய்ய முடியவில்லை. என் ஆதர்ச வசனகர்த்தா சுஜாதா தோற்றுவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சில சமயங்களில் ராஜகுமாரனை பார்க்கும் பொழுது வருத்தமாய் உள்ளது. எவ்வளவு அம்சமான ஆணழகனாய் உள்ளார், இவருக்கு பொய் இப்படி ஒரு பொண்டாட்டியா என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது துக்கம் தொண்டையைக் கவ்வுகிறது.   


இந்த அரசன் வரும் பொழுது எங்கே படம் மொக்கையாய் இருந்து விடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வந்திருந்தார். படம் போன போக்கில் மெய் மறந்து ஆர்வமாய் பார்க்கத் தொடங்கிய அரசன் சிறிது நேரத்தில் என் காதில் கிசுகிசுத்தார் " தலைவரே என்ன அறியமா தூங்கிருவேன், அப்பப்பா என்ன கவனிச்சு எழுப்பி விடுங்க. இந்தப் படம் பார்காட்ட என் தலைமுறை என்ன திட்டும்" ன்னார். அவர அடிக்கடி அடிச்சி எழுப்பி விட வேண்டிய நேரத்துல பல முக்கியமான காட்சிகள மிஸ் பண்ணிட்டேன்.

நம்ம சிவா கூட திரைக்கதை தெளிவா புரியல நாளைக்கு இன்னொரு தபா போலாமான்னு கேட்டார் , நீங்களும் வாரீங்களா... 

நம்ம ஸ்கூல் பையன் இனி நம்மள நம்பி எத்தன படத்துக்கு வேணும்னாலும் வருவாரு.   

இப்படிப்பட்ட திருமதி தமிழ் படம் எப்படி இருந்தது என்று சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 


ஒவ்வொரு படமும் ஆரம்பிக்கும் பொழுது என் பேரு முகேஷ் என் வாயில கேன்சர், எனக்கு ஆப்பரேசன் பண்ண போறாங்கன்னு போடுற கருத்து செறிவுள்ள படத்த எவ்வளவு ரசிச்சு பார்பீங்க. முப்பது செகண்ட் போட்டாலும் எவ்ளோ ஆழமான கருத்து சொல்லுது.

அதேமாதிரி, அந்த முகேஷ் மூன்னு மணிநேரமும் அப்டியே பேசிட்டு இருந்தா அதுல எவ்ளோ கருத்து இருக்கும். அதுதாங்க அவ்ளோ தாங்க படம். நம்ம முகேஷ்க்கு பதிலா தமிழரசன் நடிச்சி பட்டைய கிளப்பி இருக்காரு.

என்ன ஒன்னு அந்த தியேட்டர விட்டு வரும் போது முகேஷ் செத்துப் போயிருப்பாரு... இங்க வைஸ் வெர்ஸா அவ்ளோ தாங்க...      

31 comments:

 1. கடைசி வரைக்கும் ஏன் யாருமே கதைய சொல்ல மாட்றீங்க? பீட்சா, 13B மாதிரி எதுவும் திகில் கதையா? ஒரு ஜனரஞ்சக படத்தின் கதையை மக்கள் சொல்லாமல் இருப்பது இது தான் முதல் முறை.. அந்த அளவுக்கு கதையில் என்னமோ இருக்கிறது என தெளிவாக தெரிகிறது.. எங்கள் ஊர் புண்ணாக்கு தியேட்டர்க்காரர்கள் இந்த படத்தின் அருமை தெரியாமல் இதை திரையிடவில்லை.. ஊரில் ராக் ஸ்டார் ரசிகர்களை ஒன்றிணைத்து இதை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கலாம் என்றிருக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. படம் முடியும் பொழுது ராக்கென வாக்கென டாப்பென ஸ்டைலென ன்னு ஒரு பாட்டு பாடி நம்மாளு டான்ஸ் ஆடுறாரு பாருங்க அப்பப்பா ஜாக்சன் தோத்த்ருவான்...

   இந்த படத்தில் உள்ள கதையை சொல்லிவிட்டால் பரபரப்பு குறைந்து விடும் என்பதால் மட்டுமே சொல்லவில்லை.... நீங்கள் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்வதற்கு பதிலாக ஏன் சென்னை வரை வந்து திருமதி தமிழ் பார்த்து இந்த முயற்சியில் இறங்கக் கூடாது.

   Delete
 2. சீனு.... படம் பார்த்து அருமையா விமர்சனம் எழுதியிருக்க..

  இத பார்த்து படம் பார்த்துற போறாங்க யாராச்சும்...

  அதனால இந்த பதிவை டிராப்ட் பண்ணிரலாமே!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. ஐயையோ அப்படி ஏதும் நல்ல காரியம் நடக்க வாய்ப்பு இருக்க வாய்ப்பு இருக்குன்னா இன்னும் பல பதிவுகள் திருமதி தமிழுக்காக எழுத நான் தயார்

   Delete
 3. யோவ் நாளைய வரலாறு, இயற்பியல், வேதியியல், புள்ளியியல் இப்படி எத்தனை இடத்தில் இந்த படம் பதிவாக போகிறதோ என்கிற சொல்லணா மகிழ்வில் இருக்கிறேன்...என்ன ,ரெண்டு மூணு இடத்தில மனுஷன் மதப்பிரச்சினையை கெளப்பிவிட்டு இருக்காப்ல ....

  ReplyDelete
  Replies
  1. மதப் பிரச்னை எல்லாம் முக்கியம் இல்லையா... இந்து மதப் பிரச்னை என்பதால் ஒருவனும் கண்டுகொள்ள மாட்டான் என்று வையுங்கள்... இருந்தாலும் இந்திய திருமண சட்டத்தை விடுத்தது இந்து திருமண சட்டம் என்ற பாணியில் சிந்தித்த ராஜ குமாரனுக்கு விஜயா ஆஸ்பத்திரி அருகில் ஒரு சிலை... ஓகே வா

   Delete
 4. அவங்க காட்ன படத்தைவிட நம்ம எடுத்த படத்தை வரலாறு .பேசும் ...

  ReplyDelete
  Replies
  1. வரலாறு தான் வரவே இல்லையே, இப்ப எதுக்கு கோர்த்து விடுறீரு :-)

   Delete
 5. அதான் சென்னையை காட்டுகிறேன் என்கிற பேர்வழியில் வடபழனி முருகன் கோவிலையும் அதை ஒட்டிய அரண்மனையையும் எங்கேயோ தேடி எடுத்து ஒட்டி இருக்காப்ல நம்ம ரகளை இது போதாதா ? நமக்கு லொக்கெசனா முக்கியம் கதையா கதை கதைதான் முக்கியம் ...
  ஏன்னா நடிப்பு , என்ன ஒரு டயலாக் டெலிவரி .... தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் ///

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் செம லோகேசன் யா

   Delete
 6. ராம் அண்ணே உங்க உண்ணா விராதத்துக்கு என் முழு ஆதரவு உண்டு ... உடனே ரெடி பண்ணுங்க .. நானும் கலந்துக்குறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி அதுக்கு இன்னொரு தபாபடத்த போய் பாத்துரலாம்

   Delete
 7. " தலைவரே என்ன அறியமா தூங்கிருவேன், அப்பப்பா என்ன கவனிச்சு எழுப்பி விடுங்க. இந்தப் படம் பார்காட்ட என் தலைமுறை என்ன திட்டும்" ன்னார்.//

  என் தலைமுறை உமக்கு செய்ய வேண்டியதை கச்சிதமாக செய்யும் தலைவரே

  ReplyDelete
  Replies
  1. யான் பாக்யவானேன் ஸ்வாமி

   Delete
 8. ஹா... ஹா... ரொம்பவும் ரசிச்சு(!)ப் பாத்த ஒலக சினிமாவுக்கு அருமையா விமர்சனம் பண்ணிட்டீங்க சீனு! ராம்குமார்...! அவர் ராக் ஸ்டார் இல்ல... டெரர் ஸ்டார்!

  :p

  ReplyDelete
  Replies
  1. சார் படாத கடைசி வரைக்கும் பார்த்த உங்க மன திடத பார்த்து நான் புல்லரிச்சி போய் நிக்குறேன்

   Delete
 9. //சூடு பிடிக்கத் தொடங்குகிறது. வெயில் காலம் என்பதால் தியேட்டரில் ஏ.சி அளவு கம்மியாக இருந்தது. சீட் சூடு பிடிக்கத் தொடங்கியதால் சீட்டில் உக்கார முடியவில்லை//

  இன்னும் சூடு ஆறலையே சீனு....

  //நம்ம ஸ்கூல் பையன் இனி நம்மள நம்பி எத்தன படத்துக்கு வேணும்னாலும் வருவாரு//

  யோவ்.. என்ன நம்பி ஒரு பொண்டாட்டி ரெண்டு புள்ளைங்க இருக்குயா.. நோ, நெவர்....

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் சொல்லி அலுத்து பொறந்தாலும் உங்கள விடுறதா இல்ல... நோ நெவர்

   Delete
 10. அடுத்த பவர் ஸ்டார் ரெடியா ?

  ReplyDelete
  Replies
  1. டெரர் ஸ்டார் என்பது தான் சரியான பட்டமாக இருக்கும் :-)

   Delete
 11. யோவ் சீனு எதையும் விட்டு வைக்க மாட்டேன்கிற ஆரூர் மூனா அஞ்சா சிங்கம் படம் பார்க்க கொடுப்பினை இல்லை என்ன செய்ய.....

  ReplyDelete
 12. டெரர் ஸ்டார் பற்றி டெரரான விமர்சனம்... தொண்டையைக் கவ்வுகிற விசயமும் டெரர் தான்...

  ReplyDelete
 13. //2005இல் சுனாமி வந்து தமிழகத்தை அழித்துவிட்டதால், மற்றொரு அழிவு உடனே வேண்டாம் என்று சற்று காலம் தாழ்த்தி வெளியிட்டுள்ளனர். //

  //என்ன ஒன்னு அந்த தியேட்டர விட்டு வரும் போது முகேஷ் செத்துப் போயிருப்பாரு... இங்க வைஸ் வெர்ஸா அவ்ளோ தாங்க... //

  ரசித்தேன் சீனு.

  ReplyDelete
 14. //நம்ம சிவா கூட திரைக்கதை தெளிவா புரியல நாளைக்கு இன்னொரு தபா போலாமான்னு கேட்டார் , நீங்களும் வாரீங்களா...//

  வாங்க..வாங்க...தியேட்டரையே புக் பண்ணிடுவோம். போனா வராது. பொழுது போனா கிடைக்காது!!

  ReplyDelete
 15. கும்பலா போய் பார்த்திருக்கீங்க.. ிந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்

  ReplyDelete
 16. It is quite interesting.

  #i'm putting very decent comment, so no bad word please x-)

  ReplyDelete