Searching...

Popular Posts

Wednesday, June 5, 2013

கவியாழி கண்ணதாசன் - காமெடி கும்மி கண்டெடுத்த முத்து

காமெடி கும்மி கண்டெடுத்த முத்துக்கள் 

வெகு நாட்களாய் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் காமடி கும்மியை எப்படி பிரபலப் படுத்துவது என்று விவாதிப்பதற்காக சங்கத்தின் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாட்டு கிளைகளுக்கு அவசர தந்தி அனுப்பினார் தற்போது விடுமுறையை வெட்டியாய் கழித்துக் கொண்டிருக்கும் சங்கத்தின் தீவிரவாதி சதீஷ். அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியதின் பெயரில் சங்கம் மிக அவசரமாய் கூகுள் ஆண்டவரின் முக்கிய குழந்தையான ஜி.மெயில் புண்ணியத்தில் ஒன்று கூடியது.

இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தலைவர் ஹாரி மற்றும் வசு இருவரும் ரூம் போட்டு சிறிது நேரம் யோசித்ததில் மிக முக்கியமான அந்த சிந்தனை சங்கத்து அடியாள் அரசன் மனதில் உதித்தது.

பதிவுலகைக் காக்க திடீரென்று முளைத்த ஒரு விடிவெள்ளி எங்கள் காமெடிகும்மி என்பது அண்ட சராசரம் அறிந்த உண்மை, அப்படி இப்படிப்பட்ட பதிவுலகில் தோன்றி தன் அயராது உழைப்பினாலும் சாலச் சிறந்த சிந்தனைகளாலும் எவர் ஒருவர் முன்னேறி இருகிறாரோ அவரை 'காமெடி கும்மி கண்டெடுத்த முத்துக்கள் ' என்ற தலைப்பில் ஒரு பதிவு தேத்தி கவுரவிக்கலாம் என்று மிக சிறப்பாய் மிகச் சரியாய் முடிவு செய்யப்பட்டது.

இப்பயணத்தில் பலரை சங்கம் இனம் கண்டுகொண்டு வெகுவாய் குழம்பியதில் அந்த பதிவரை குடவோலை முறையில் தேர்ந்தெடுப்பதாக முடிவுசெய்தது. 

நான் தான் சீட்டு எடுப்பேன் என்று தீவிரவாதியும், தலைவர் ஹாரியும் சிறு பிள்ளைத் தனமாய் முட்டி கொண்டதில் இருவரையுமே ஆளுக்கு ஒரு சீட்டை எடுக்க சொன்னோம்.

கவியாழி கண்ணதாசன் அய்யா அவர்களும், சாலச் சிறந்த பதிவர் குட்டன் அவர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இங்கு ஏற்பட்ட அடுத்த குழப்பத்தை சமாளிக்க தமிழ்மணத்தை தேடி ஓடினோம். அட இங்கே வெற்றி 'வெற்றிவேல் வீரவேல்' என்று சீறிக் கொண்டு கவியாழியைத் தேடி ஓடியது. 

அவ்வகையில் சங்கம் எப்படி மிக வேகமாக முன்னேறியதோ அதே வேகத்தில் முன்னேறிக் காட்டிய ஒருவருடன் சங்கம் தனது பயணத்தை தொடர விரும்பியது நிறைவேறி விட்டது .

கவியாழி தனது அசராத உழைப்பினால் த.ம.தரம் எட்டு, குட்டன் தலையில் ஒரு குட்டு. 

இன்னும் கொஞ்சம் முன்னேறினால் ஒன்றைத் தொட்டுவிடும் தூரம் தான். அதனால் ஒருமித்த கருத்துடன் சங்கம் கவியாழியை கவுரவிப்பது எண்டு முடிவு செய்தது. 

இனி கவியாழிக்கு ஒரு வாழ்த்து...

கவியாழி அவர்கள், கடந்த ஆகஸ்து மாதம் முதல் பதிவுலகில் வலம் வரத் தொடங்கியுள்ளார். சங்கம் அவரை கூர்ந்து தொலைநோக்குப் பார்வையுடன் கவனித்த வரையில், மிக உன்னதமான தனது படைப்புகளால் இந்த உயரத்தை எட்டியுள்ளார் என்பதை பெருமையுடன் சொல்கிறது.

பதிவர்களை உற்சாகப்படுத்துவது, பதிவர்களை சந்திப்பது, நேரிலும் தொலைபேசியிலும் உரையாடும் பொழுது மிக கனிவாய் உரையாடுவது மற்றும் நீண்ட நேரம் ஆயினும் மிகப் பொறுமையுடன் பதிலளிப்பது என்பன போன்ற பல நல்ல பழக்கங்கள் கவியாழி அவர்களிடம் காணக் கிடைகிறது.         

கடந்த ஆகஸ்து மாதத்தில் இருந்து எழுதி வரும் கவியாழி அவர்கள் இன்னும் தனது ஒரு வருடத்தைக் கூட நிறைவு செய்யவில்லை அதற்குள் இருநூறு பதிவுகள் கடந்து உற்சாகமாய் அடுத்த பதிவினைத் தேடி ஓடிக் கொண்டுள்ளார். அவரை இந்த நல்ல பதிவின் மூலம் கவுரவிப்பதை சங்கம் பெருமையாக நினைக்கிறது.

மேலும் தனது "அம்மா இங்கே வருவாயா ! அன்பை நீயும் தருவாயா!" என்ற கவிதைப் புத்தகத்தையும் கடந்த புத்தக கண்காட்சியின் பொழுது வெளியிட்டு எழுத்தாளன் என்ற அடுத்த நிலைக்கு சென்றுள்ளார். வாழ்த்துக்கள் அய்யா! 

கவியாழி அவர்களை பேட்டி கண்டு வெளியிட வேண்டும் என்று சின்னா மிகவும் விரும்பினார். ஆனால் இது மிக அவசரமான மற்றும் அவசியமான பதிவு என்பதால் அவரை பின்பு ஒருநாள் பேட்டி கண்டுகொள்ளலாம் என்று விட்டுவிட்டோம். கவியாழி கவிஞரே விரைவில் எங்களுக்கு பேட்டி தாருங்கள் என்று சங்கம் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறது.     

இன்று போல் என்றும் பல சிறப்பான பதிவுகளை எழுத வேண்டும், மிக சீக்கிரத்தில் தமிழ் மனதில் ஒன்றாம் இடம் பெற்ற மகுடாதிபதியை வலம் வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் சங்கம் உங்களை வாழ்த்தி காமெடி கும்மி சங்க நிர்வாகிகளின் மூலம் உங்களை கவுரவிக்கிறது.

அன்பின் பதிவர்களே....

காமெடி கும்மி மூலம் கவுரவிக்கப் படப்போகும் அடுத்த பதிவர் நீங்களாகவும் இருக்கலாம்,தயார்...    

விரைவில் அடுத்த முத்துடன் சந்திக்கிறோம் 

20 comments:

 1. Poachcu.... Nalla eluthura pathivarayum ini ezhuthaama aakkiduveenga pola?

  - ippadikku,

  Comedy kummy technical department

  ;)

  ReplyDelete
  Replies
  1. டெக் டிபார்ட்மெண்ட் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை இம்மி பிசகாமல் தப்பாக பார்த்தால் மட்டும் போதும்... இம்மி பிசகி தப்பு தப்பாக துப்பறியும் வேலையில் இறங்கினால் வசுவின் பதிவுகளை லென்ஸ் வைத்து படிக்கும் படி தண்டனை வழங்கப்படும் என்பதை தாழ்மையுடன் மிரட்கிறோம் :-)

   Delete
 2. Nadurathiri pathivu eluthuna athu sangaththu powerstara thaan irukkanum...

  ReplyDelete
  Replies
  1. உங்களை ஒருமுறை மன்னித்து அருளுகிறேன் :-)

   Delete
 3. காமடியா? இருந்தாலும் கஷ்டப்படாமல் இதையும் எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்குமே வேண்டும்.எனினும் என்னைப் பற்றி தகவல் தெரிவித்தமைக்கு நன்றிகள் நான் சொல்லிவிடுகிறேன்
  ஆனால் எல்லா தகவலும் சரியாக இருப்பதால் இது காமடி அல்ல.கடந்தகால காவியமாய் இருக்கும் என்பதில் எனக்கு ஐய்யமில்லை.
  குழுவினருக்கு எனது மகிழ்வான வாழ்த்துக்கள்.உங்கள் பணியை சிறப்பாய் செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. பாசமிகு கவியாழி அவர்களுக்கு பாசமிகு வணக்கங்கள்

   //காமடியா?// உங்களுக்கு இப்படி ஒரு ஐயம் வர பல காரணங்கள் இருப்பதால் சற்றே விளக்குகிறோம்... நன்றாக கூர்ந்து பாருங்கள் இங்கே மானாவாரியாக ஓட்டப் பட்டவர்கள் அனைவருமே சங்கத்து நிர்வாகிகள். மற்றவர்கள் அனைவருமே எங்களால் மானாவாரியாக மதிக்கபடுகிரார்கள்.

   இன்னும் சற்றே கூர்ந்து கவனியுங்கள் எல்லாரும் நேரடியாக ஓட்டப் பட்டுள்ளார்கள், யாரும் மறைமுகமாக கிண்டல் செய்யப் படவில்லை.

   // இருந்தாலும் கஷ்டப்படாமல் இதையும் எதிர்கொள்ளும் பக்குவம் எல்லோருக்குமே வேண்டும்.// இதில் உங்கள் பக்குவம் தெரிகிறது

   //எனினும் என்னைப் பற்றி தகவல் தெரிவித்தமைக்கு நன்றிகள் நான் சொல்லிவிடுகிறேன்
   ஆனால் எல்லா தகவலும் சரியாக இருப்பதால் இது காமடி அல்ல.// இதில் சாலச் சிறந்த உண்மை இருக்கிறது...

   //கடந்தகால காவியமாய் இருக்கும் என்பதில் எனக்கு ஐய்யமில்லை.// நூற்றில் ஒரு வார்த்தை.. இவை தான் உங்களை காவியம் படைக்க வைக்கப் போகின்றன...

   //குழுவினருக்கு எனது மகிழ்வான வாழ்த்துக்கள்.உங்கள் பணியை சிறப்பாய் செய்யுங்கள்// உங்களிடம் ஒரு பேட்டி வேண்டுமென்று குழு விருபப்பட்டது தாங்கள் பதில் ஏதும் சொல்லவில்லை.

   இப்படிக்கு
   காமெடி கும்மி
   அண்ட பிரமாண்ட கிளை
   தொடர்புக்கும் அடி வாங்குவதற்கும்
   வரலாற்றுச் சுவடுகள்

   Delete
  2. Aaru vaarthai sollirukkaanga... Neenga nootril oru vaarthainu solreenga?

   Delete
 4. சகோதரர் கவியாழி அவரகளுக்கு என் வாழ்த்துக்களாஇ சொல்லிடுங்க.

  ReplyDelete
 5. கவியாழினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...

  அடுத்த முத்து யார் ?
  (முத்து பழையபடம் எனவே கொச்சடையான் என வையுங்கள் )

  இப்படிக்க

  வ .சு வின் அடிபொடிகள் ..

  ReplyDelete
  Replies
  1. //கவியாழினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...//

   யோவ் வாத்தி கவியாழினி இல்லையா கவியாழி.... இப்படி பட்ட ஆளுங்க சங்கத்துல உறுபினர்களா இருக்கதால தான் சங்கம் உயிர் வாழும்ன்ற நம்பிக்க அப்பப்போ வருது =p~

   Delete
 6. வாழ்த்துக்கள் கவியாழி அண்ணா......

  ReplyDelete
 7. Eyyaa kummi boys, ennai paaraatti pathivu potteengalee....

  enn pathivukku vanthu comment + vote potteengalayaa....

  ippadikki
  Kaviyazhi KANNADASAN

  :-))))

  ReplyDelete
 8. (h)
  காமெடி கும்மி இனி பதிவர்களை கவுரவிக்க முழு வீச்சில் செயல் படுமா?

  அடுத்த முத்து எப்படி தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தை முன்னாடியே சொன்ன நாங்களும் குடவோலையில் பங்களிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. குடவோலையில் பங்கேற்க நீங்கள் பணவோலை கொடுக்க வேண்டும்.... எவ்வளவு என்று பின்னால் அறிவிப்போம்.... ;)

   Delete
 9. நீங்கள் எனக்கு பெட்டி கொடுத்தால் பேட்டி கொடுக்க நான் தயார்.

  ReplyDelete
  Replies
  1. வத்திப்பெட்டி தானே? சீனுகிட்ட (கண்டிப்பா) இருக்கும்.... :-) :-) :-)

   Delete
 10. ஓராண்டுக்குள் தரம் எட்டு(!) எட்டிய எங்கள் தலைவர் விரைவில் முதலிடத்தையும் தாண்டி மேலே ஓடிக்கொண்டேஏஏஏ இருப்பார்! சிங்கம் ஒன்று புறப்பட்டதேஏஏஏஏய்...! தொடர் சாதனைக்கு வாழ்த்துக்கள்.
  =p~

  ReplyDelete
 11. கவியாழி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் அவரின் பதிவுகள் தொடரட்டும் பதிவுலக கும்மியில்!ஹீ

  ReplyDelete
 12. இன்றுதான் படித்தேன்!ரொம்ப அழுத்திக் குட்டி விட்டீர்கள் போலும்;நான் காணாமலே போய் விட்டேன்.
  கும்மி என்னையும் ஒரு முத்து(மதுரை!) என்று அறிவிக்கும் காலம் வரும்!கட்டுண்டோம்!பொறுத்திருப்போம் காலம் மாறும்!ஹி,ஹி
  :)))))))))))))

  ReplyDelete