Searching...

Popular Posts

Thursday, June 13, 2013

சங்கத்தின் நிரந்தர தீவிரவாதியின் பிறந்த நாள் - திடீர் அமானுஷ்ய திருப்பம்


காலை திடிரென்று அரசனிடம் இருந்து ஒரு போன், யோவ் என்னய்யா பண்ற சீக்கிரம் வாயா நம்ம தீவிரவாதி துப்பாக்கிய தூக்கிட்டு ஓடிவராப்ள என்று அலறிக் கொண்டிருந்தார். 

அட நம்ம தீவிரவாதிகிட்ட எது துப்பாக்கி என்று குழம்பிய தலைவன் ஹாரியும் கும்மி உறுப்பினர்களும் வந்திருக்கும் ஆபத்தை சமாளிக்க உடனடியாக அடியாள் அரசனின் ரூம் நோக்கி விரைந்தனர்.

அரசன் மிகவும் பதற்றத்துடன் "யோவ் தலைவரே இன்னிக்கு தீவிரவாதி பொறந்த நாளு, நாம யாரும் கொண்டடலன்னு கோவத்துல இருக்காரு, எங்கியோ இருந்து ஒரு துப்பாக்கிய வேற தூக்கிட்டு வராரு, அவருக்கு இருக்க கோவத்துல நம்ம சுட்டே புடுவாருன்னு நினைக்கிறன்" எதாவது பண்ணுங்க எதாவது பண்ணுங்கன்னு அரசன் அலறிய அலறலில் வசு தலைமையில் தீவிரவாதியின் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப் படப்போவதாக உடனடியாக அறிவிக்கப் பட்டது.


சங்கத்தின் நிரந்தர தீவிரவாதியின் பிறந்த நாள் விழா கோலாகலங்கள் 1) மேடவாக்கம் ஏரியாவில் சீரும் செம்மையாக கொண்டாடப்பட்ட விழாவில் கண்ணாடி மச்சான் அனைவருக்கும் கனவு கொப்பரை கவர்ச்சி திமிங்கலம் " நமியின் " நாலணா சைஸ் படங்களை விநியோகித்து கனவை நனவாக்கினார்!


2) இன்று ஒரு நாள் பாடம் நடத்தபோவதில்லை என்று வாத்தி எடுத்த முடிவினால் மாணவர்கள் ஆங்கங்கே பட்டாசு வெடித்து கொண்டாட்டம்...


3) பாசித் மற்றும் தல ஹாரி பயங்கர குஷி மூடில் இருப்பதால் இணையம் இன்று சற்று ஓய்வாக இருக்கும் என்று நம்புவோமாக! 


4) கார்த்திக் கேட்டபடி ஆன்ட்ரியா போனை ஆட்டைய போட்டு கொடுக்க்போவதாக சின்னா வெறிகொண்டு கிளம்பியதினால் கார்த்தி ஏகத்துக்கும் சந்தோசத்தில் திளைக்கிறார்!


5) நான் வீட்டுப்பாடம் செய்யமாட்டேன் தீவிரவாதி பொறந்த நாளை கொண்டாடுவேன் என்று ஸ்கூல் பையன் அடம்பிடிப்பதால் வீட்டில் விழி பிதுங்கி நிற்பதாக சற்று முந்தைய செய்தி சொல்கிறது!


6) தன்னுடைய மேற் படிப்புக்கு சிறிய இடைவேளை கொடுத்துவிட்டு எண்ணூறு பக்கத்துக்கு வசு வாழ்த்துமடல் வரைந்து கொண்டிருப்பதை வளைகுடா நாடுகள் வாய்பிளந்து பார்த்துக்கொண்டிருக்கின்றன!


7) சினிமா ராஜ் அவர்கள் அமெரிக்காவில் இருந்தபடியே வாழ்த்துக்களை குவித்து கொண்டிருப்பதால் சற்று அச்சத்தில் அமெரிக்கர்கள்!


8) அரசன் எழுதிய மூணே முக்கால் வரி கவிதையை மூன்று மணிநேரமாக படித்து மண்டை சூடேறி, சில்க் சட்டை போட்டுக்கொண்டு சீவலப்பேரி அரிவாளோடு தீவிரவாதி தேடுவதாக தகவல் கிடைத்திருக்கிறது!(மிஸ்டர் தீவிரவாதி அமைதி ப்ளீஸ்)


இப்படியாக தீவிரவாதியை வாழ்த்துவதில் சங்கம் மிகுந்த பெருமை கொள்கிறது ....இப்படிப்பட்ட பிறந்த நாள் விழாவை எங்கள் அமானுஷ்ய தலைவன் தலைமையேற்று சீரும் சிறப்புமாக நடத்திய பொழுதில் திடிரென்று ஏற்பட்ட ஒரு திருப்பம் சங்கத்தை மீண்டும் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பச் செய்தது.

அந்த சம்பவம் 

பட்டிக்ஸ் அவர்கள் தனது பக்கத்துக்கு வீட்டில் இருந்து களவாடிக் கொண்டுவந்த பழைய துண்டை தலைவன் ஹாரி அவர்களிடம் கொடுத்து தீவிரவாதிக்கு சால்வையாக அணிவிக்கச் செய்யும் பொழுது திடிரென்று ஒரு சத்தம்,

டேய் நைனா..

சத்தம் வந்த திசையை நோக்கி மொத்த கூட்டமும் திரும்பியது     

மீண்டும் அதே சத்தம் உச்சஸ்தாயில் கேட்டது 

டேய் நைனா..

விழாமேடையின் முன்பு தீவிரவாதியின் மகன் ரத்தம் கொதிக்கும் கண்களுடன் கும்மி குழுவினரை சுட்டு எரிப்பது போல் பாரதக் கொண்டிருந்தான்.

"டேய் நைனா நா ஆச ஆசையா வாங்கின தீபாவளி துப்பாக்கிய தூக்கிட்டு ஓடிவந்துட்டியே, உண்ன", என்று பாய்ந்து ஸ்லொ மோஷனில் ஓடி வரும் பொழுது.

பட்டிக்ஸ் மெதுவாக தீவிரவாதியிடம் 

"யோவ் வெக்கமா இல்ல... "

"பவ்யமாக நமது தீவிரவாதி பட்டிக்ஸிடம் அது ஒன்னும் இல்லன்னே துப்பாக்கிய காமிச்சா தான் நம்ம பயலுங்க கொஞ்சம் மிரளுரானுங்க இல்லாட்டா ஒவரா கலாய்கிரானுங்க.."

இந்தப் பதிலைக் கேட்ட பட்டிக்ஸ் இன்னும் கோவமாக "அப்போ நீ எதோ சுடப் போறேன்னு சொன்னியே அது என்னது"

அய்ய அது ஒன்னும் இல்லன்னே, இன்னிக்கு நமக்கு பொறந்த நாளு, அதான் பயலுகளுக்கு நாலு சப்பாதிய சுட்டு கொடுக்கலாம்னு கொஞ்சம் ஆர்வத்துல சுடப் போறேன்னு கத்திட்டேன், பக்கிங்க பயந்துட்டனுங்க


"கார்ர்ர்ர்" பட்டிக்ஸ் வாயை அஷ்ட கோணலாக்க 

"அண்ணே இன்னிக்கு பொறந்த நாளு" என்று தீவிரவாதி கெஞ்ச 

அதுனால உன்ன சும்மா விடுறேன் என்று பட்டிக்ஸ் சாந்தமாக பிறந்தநாள் விழா இனிதே நடைபெற்று வருகிறது.19 comments:

 1. சங்க உறுப்பினர் சதீஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சதீஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. காமெடி கும்மி கண்டெடுத்த கண்ணதாசன் அண்ணனுக்கு நன்றி

   Delete
 3. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சதீஷ்

  ReplyDelete
 4. எல்ல்லாருக்கும் இலவச ரீ - சார்ஜ செய்கிறேன்னு சொன்னார் .. எங்கே போனார் ?

  ReplyDelete
  Replies
  1. பப்ளிக் பப்ளிக் உமக்கு மட்டுமாது ரீ சார்ஜ் செய்யலாம்னா ஏன்யா இப்படி சவுண்ட் ?

   Delete
 5. அன்பின் சதீஷ் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. என்னுடைய வாழ்த்துக்களையும் சேர்த்துக்கோங்க

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ....உங்க பங்குக்கு உங்க ஏரியால நீங்க என்ன செய்தீர்கள்? நான் கேக்கல...சங்கம் கேக்குது....

   Delete
 7. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..........அந்த வாழ்த்து படத்த தேடி பிடிச்சு போட்ட சீனுவத்தான் தேடுறேன் .....இதுபோலொரு பிறந்தநாள் வாழ்த்துக்களை இதற்கு முன் அனுபவிக்கவில்லை.நெகிழ்வுடன் நன்றி நண்பர்களே....

  ReplyDelete
  Replies
  1. எவ்ளோ அடிச்சாலும் சிரிச்ச மாதிரியே மூச்சியை வச்சிக்கிட்டு சமாளிச்சிர்ரியே பங்காளி.. அந்த ராச தந்திரத்தை எனக்கும் சொல்லிக்குடேன்!

   Delete
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சதீஸ்

  ReplyDelete
 9. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. ஹ ஹ ஹ.. யோவ் பங்காளி ... வாழ்த்துக்கள்யா!

  ReplyDelete