Searching...

Popular Posts

Thursday, July 18, 2013

பதிவர் திருவிழா தேதி அறிவிப்பு

12:03 AM
பதிவுலக நட்புகளே,

"செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது."

கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கனிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மெற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கபட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.

விழாவினை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்த பதிவர்கள் தங்களது ஆலோசனைகளை ஞாயிற்றுக் கிழமை தோரும் கே,கே.நகரில் உள்ள DISCOVERY BOOK PALACE-ல் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களின் போது தெரியப்படுத்தலாம், விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும் திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும் அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர் சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.

இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.

இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்த மான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது.
மாநாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகத்தோற்றம். (படத்தில் இருக்கும் அழகான வாலிப பையன் அடியேன் தான்)

கட்டிடத்தின் முன் பகுதியில் போதுமான இடவசதி உள்ளது.

வாயில்பகுதியிலிருந்து எடுத்த படம்.

வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளது.


முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது.

பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :

 1. மதுமதி  kavimadhumathi@gmail.com
 2. பட்டிகாட்டான் ஜெய்  pattikattaan@gmail.com
 3. சிவக்குமார் – madrasminnal@gmail.com
 4. ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com
 5. அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
 6. பாலகணேஷ் – bganesh55@gmail.com
 7. சசிகலா - sasikala2010eni@gmail.com

உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal)தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.

 பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதலத்தில் பதிவிடுமரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எழுத்து - பட்டிகாட்டான்... ஆக்கம் - வேற யாரு பதிவர்களான நாம தான் 

நன்றி பட்டிக்ஸ்  :  http://pattikattaan.blogspot.in/2013/07/blog-post_18.html

17 comments:

 1. திருவிழா ஆரம்பம்... வாழ்த்துக்கள்...

  தகவலை எனது தளத்தில் ப்ளக்ஸ் பேனர் போல் வைத்தாயிற்று...! "நன்றாக இருக்கிறதா ?" என்று பார்த்து விட்டு சொல்லவும்... நன்றி...

  தொடர்புக்கு : dindiguldhanabalan@yahoo.com

  ReplyDelete
 2. வலைப்பதிவர்கள் திருவிழாவுக்கு வாழ்த்துகள்..!

  (h)

  ReplyDelete
 3. அடடா!
  எங்கள் வீட்டில் அன்று திருமணம். வர முடியாத சூழ்நிலை!
  வருத்தமோ வருத்தம்!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் என்ன? திருவிழா மிகச் சிறப்பாக நடக்க வாழ்த்துகள்!

   Delete
 4. வரவேற்கிறேன்;வாழ்த்துகிறேன்;பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 5. வரவேற்கிறேன்;வாழ்த்துகிறேன்;பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 6. நான் தகவலை பகிர்ந்துவிட்டேன் எனது தலத்தில் மாநாடு சிறப்பை நடைபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. திருவிழா சிறக்க வாழ்த்துகள்...

  பல எழுத்துப் பிழைகள் உள்ளது... உ.தா: நிகழ்ழ்சி, முடிவ்...

  முன்பா மாநாடு என்பதை மாடு என்று போட்டுள்ளதை முகப்பு புத்தகத்தில் பார்த்தேன்... ஹ ஹா...!

  ReplyDelete
 8. பதிவர் சந்திப்புல பத்திரப் பதிவர்களுக்கும் அழைப்பு விடுப்பீங்கதான... ஏனா அவுங்கதான் ஒரிஜினல் பதிவர் பாருங்க...

  ReplyDelete
 9. வலைப்பதிவர்கள் திருவிழாவுக்கு வாழ்த்துகள்..!நான் தகவலை பகிர்ந்துவிட்டேன்

  ReplyDelete
 10. பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. பதிவர் சந்திப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.

  by: 99likes

  ReplyDelete