Searching...

Popular Posts

Thursday, August 8, 2013

பிரபல கவிஞருக்கு ஒரு திறந்த மடல் ....
தமிழின் மேல் மோகம் கொண்டு எழுத தொடங்கிய உங்களுக்கு முதலில் "காமெடி கும்மியின் மணம் கமழும்  மலர்ச்செண்டுகள்"! சென்ற வருடம் இதே மாதத்தில் பதிவு எழுத தொடங்கிய நீங்கள் இதுவரை சுமார் இரண்டு நூறுகளுக்கும் மேல்  பதிவு எழுதி, சில புத்தகமும் வெளியிட்டு அருஞ்சாதனை புரிந்துள்ளீர்கள் மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்! ஒரு வருடத்தில் இரு நூறுக்கு மேலும் பதிவும் , 100 க்கு மேல் பின்தொடர்பவர்களையும் வைத்திருப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, குறிப்பாக தமிழ் மணம் ரேங்க்கில் பத்துக்குள் ஒரு இடம் தக்கவைப்பது அளப்பரிய சாதனை. நாடி நரம்பு ரத்தம் சதை என்று பதிவுலகின் மேல் ஒரு தீராக் காதலும், கடின உழைப்பும் இல்லையெனில் இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படியொரு வெற்றிக்கனியை சுவைக்க முடியாது! அதற்காக உங்களை வாழ்த்த கும்மி எப்போதும் கடமைப் பட்டிருக்கிறது!

இவ்வளவு சிரமப்பட்டு எழுதும் உங்களின் எழுத்துக்கள் சில நேரம் சறுக்கிவிடுகின்றன என்பதை ஒரு தொடர்ந்த வாசகனாக சுட்டிக்காட்டவும் தங்களின் சமீபத்திய பதிவுகள் ஒரே மாதிரியாக இருக்கிறது என்பதை இதன் மூலமாகவாவது சொல்லிவிட வேண்டும் என்றும் பெருத்த அவா எங்களுக்கு. நீ யாரடா என்னை சொல்வதற்கு அப்படித்தான் எழுதுவேன் என்று சொன்னால் உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் இந்த வரியோடு எம்மை துச்சமென எண்ணி தூர விலக்கிவிடுங்கள். அவ்வாறு இல்லாமல் ஒரு வாசகனின் விருப்பம் என்று கருதினால் வாருங்கள் சற்றே அளவளாவுவோம்.  

சில நாட்களாக உங்கள் பதிவுகளில் இன்று எப்படியாவது பதிவு போட்டுவிடவேண்டும் என்ற பரிதவிப்பு இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை உங்களின் பதிவுகள் காட்டுகின்றன! பதிவு என்பதை ஒரு தினசரிக் கடமையாக எழுதுவது என்பதில் ஹிட்ஸ் கிடைக்கலாமே தவிர ஹிட் ஆகுமா என்பதை பதிவு எழுதும் நல்லுலகம் மிகத் தெளிவாய் அறியும். கூடவே நிறைய எழுத்துப்பிழைகளும்! கவிதைக்கு பொய்தான் அழகு எழுத்துப்பிழை அல்ல. கொஞ்சம் நிறுத்தி நிதானமாக மிக தெளிவாக பதிவிடுங்கள், அதைத்தான் உங்கள் வாசகர்களாகிய நாங்கள் விரும்புகிறோம்!

நாம் செய்யும் மொய்களுக்கு மறு மொய் செய்பவர்களே இங்கு அதிகம் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை! சற்று யோசித்துப் பாருங்கள், நாம் எழுதிய பதிவு எழுத்துப் பிழைகளாக இருந்தும் , அருமை, நன்று, சிறப்பு என்று வெறும் சம்பிரதாய கருத்துக்களாக நிரம்பி வழியும்! இனம் காணுங்கள், தமிழ் மண மகுடத்திற்காக பதிவு எழுத வேண்டாம், தமிழுக்கு மகுடம் சூடட்டும் உங்களின் வலிமை பொருந்திய எழுத்துக்கள்! இந்தப் பாராவின் முந்தைய வரியை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள், அதை வாசிக்கும் பொழுது உங்களுக்குள்ளேயே ஒரு பெருமிதம் ஏற்படவில்லையா, உங்களுக்குக் கிடைத்த தளத்தை இன்னும் சற்றே சிறப்பாய் கையாள வேண்டும் என்கிறோம்.   

ஆகவே அய்யா தங்களுக்கு கிடைத்திருக்கும்  நல்ல களத்தை உரிய முறையில் பயன்படுத்துமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறது "காமெடி கும்மி"! அடுத்து இது உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் பண்ணுவதற்காகவோ, இல்லை உங்களை காயப்படுத்தும் நோக்கிலோ எழுதவில்லை என்பதை விம் அல்லது சபீனா போட்டு விளக்கவும் கும்மி கடமை பட்டிருக்கிறது. அப்படி ஏதேனும் மனம் வருந்தினால் தங்களிடம்  "கும்மி"  மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது!

பின்னூட்டுவதற்கு முன்:-

அ ) முதலில் நமது பிரபலம் என்ன எழுதி இருக்கிறார் என்று சில நொடி படியுங்கள், பிடித்திருந்தால் கருத்திடுங்கள்.  

ஆ ) உற்சாகப் படுத்துவதில் தவறில்லை, உற்சாகமே தவறாகிவிடுமோ என்று தான் ஐயப்பட வேண்டியுள்ளது. சில பதிவர்களின் பின்னூட்டங்கள் நான்கு கிலோ அல்வா மாதிரி தோன்றும்! வேண்டாம் நிறுத்துங்கள், உங்களின் தகுதிக்கு அழகில்லை!

இ) தவறுகளை சுட்டிக்  காட்டுங்கள், புரியவில்லை என்றால் கேளுங்கள், அதை தவிர்த்து அருமை, எருமை என்று ஏகாந்தம் வீச வேண்டாம்! அது யாருக்கும் நல்லதல்ல! சமீபத்தில் கூட ஜெயமோகன் தனது பதிவில் எதிர்வினை இல்லாதவனால் சிறந்த எழுத்தாளனாக முடியாது அதனால் எதிர்வினை அளியுங்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறியது எவ்வளவு நிதர்சனம். ஒரு பதிவருக்கு நாம் வழங்கும் எதிர்வினையானது அவரை பட்டை தீட்ட வேண்டுமே அன்றி மழுங்கடித்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருக்க வேண்டும் என்பதை மட்டுமே இங்கு கூற விழைகிறோம்.       

ஈ) நாம் தவறுகளை குறிப்பிடும் பட்சத்தில், பதிவை எழுதியவர் தன் எழுத்தின் நடையை, தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிட்டும்! இல்லையெனில் அவரும் அரைத்த மாவையே அரைப்பார், நீங்களும் அரைத்த கருத்தையே அரைப்பீர்கள், இதனால் யாருக்கு என்ன பயன்?

உ ) வாக்களித்ததற்கு சான்றாக விரலில் மை பூசுவது போல், பதிவில் மையடிக்க வேண்டாமே! நம் ஒவ்வொருவரின் செயலையும், பின் வளரும் பதிவர்கள் தொடர்வார்கள் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள்!  

ஊ) ஏதோ புரியாத மொழியில் பதிவு எழுதியிருந்தாலும், வம்படியாய் ஆஜராகி ஏடாகூடமாய் கருத்திட்டு கடைசல் கொடுப்பதை தயவு செய்து நிறுத்துங்கள், இல்லையெனில் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஓயாமல் திறந்த கடிதம் எழுத வேண்டிவரும் என்று காமெடி கும்மி உங்கள்  ஒவ்வொருவரின் காதுகளில் உரக்க ஊதி விடைபெறுகிறது. நன்றி.


17 comments:

 1. யாரைச் சொல்றீங்கன்னு தெரியலை!

  சொல்றதெல்லாம் சொல்லிப்புட்டு கடைசியில் மன்னிப்பு வேறு!

  ReplyDelete
 2. ஹா ஹா.... நேருக்கு நேரா சொல்லியே புரியல.... இதுமட்டும் புரியவா போகுது?

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்தான் புரியலை!என்ன செய்ய!

   Delete
 3. யாரை சொல்லுறீங்க... அந்த பிரபலம் யாரு?

  ReplyDelete
  Replies
  1. அவரேதான் .......(இப்படியும் குழப்பலாம் )

   Delete

 4. உள்குத்து பதிவுன்னு தெரியுது ஆனா யாரை குத்துறீங்கனு தெரியில ..நானும் தமிழ்மண 'டாப் டென் ' வரிசையை செக் பண்ணிட்டேன்...ஆனா ஒன்னும் மட்டுபடலையே,,,,

  ReplyDelete
 5. அதுவும் சரிதான் !யார் அவர்????

  ReplyDelete
 6. //அருமை, நன்று, சிறப்பு என்று வெறும் சம்பிரதாய கருத்துக்களாக நிரம்பி வழியும்! இனம் காணுங்கள், தமிழ் மண மகுடத்திற்காக பதிவு எழுத வேண்டாம்,//

  இதுதான் அருமை...யாரை சொல்லுரீங்கனு தெரியில..ஆனா எல்லோருக்கும் பொருந்து.

  ReplyDelete
 7. //WWW . சொல்லவே வெக்கமா இருக்கு.COM //

  ஹா.ஹா.. ஹா..ஹா..

  ReplyDelete
 8. என் மன ஓட்டத்தில் உள்ள சில விசயங்களை நீங்களும் பகிர்ந்திருக்கிறீர்கள்... நான் பொதுவாக வைக்கும் விமர்சனமும் இதுதான்...

  இங்கு நட்பு ரீதியாகத்தான் கமெண்டும் ஓட்டுகளும் விழுகின்றன... 'ஓட்டுக்கு ஓட்டு' இதுதான் பதிவுலகத்தில் தாரக மந்திரம். இதில் சில நல்ல பதிவுகளும் பதிவிட்டு சில நிமிடங்களிலேயே தமிழ்மண முகப்பை ஆக்கிரமிக்கிறது. ஆனால் அவசர கோலத்தில் எழுதப்பட்ட சில பதிவுகள் ,காபி பேஸ்ட் பதிவுகள் இவைகளும் பதிவிட்ட சில நொடிப்பொழுதில் சிறந்த பதிவுகளுக்கு பக்கத்தில் அதிக ஓட்டுவாங்கி வரிசை கட்டி நிக்கிறது. இதில் தவறு யார் மீது என்று சொல்வது..? இத சொன்ன சண்டைக்கு வருவாங்க... நமக்கெதுக்கு வம்பு... :-)

  ReplyDelete
 9. உண்மையாகவே நல்ல விஷயத்தை சொல்லியுள்ளிர்கள் . இதை படித்த பின் சிலருக்கு சுருக் என இருக்கும் ( எனக்கு இருந்தது )

  ReplyDelete
 10. தம்பி உன்னை அழிச்சிடப் போறாரு அவரு கவியைப் போல் :p

  ReplyDelete
 11. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை பதிவுலக வளர்ச்சிக்கும், தனி நபரின் எழுத்தின் தரம் உயரவும் சில பலவற்றை கவனிக்கவும், செயல்படுத்தவும் வேண்டும். கவிதைகள் என்ற பெயரில் நாறாசம் செய்து ஜீவன் இல்லாமல் வரிகளை உடைத்து வார்த்தைகளை நிரப்பாமல் வாசிப்போருக்கு இன்பம் தந்து உள்ளத்தை ஊடுருவும் சொற் குற்றம் பொருட் குற்றம் இல்லாமல் எழுத வேண்டும். எழுத்தில் வேகத்தைவிட விவேகமே நிரந்தரத்தைக் கொடுக்கும், அந்த வகையில் கும்மியின் இடித்துரைப்பை போற்றுகின்றேன். நன்றிகள்.

  ReplyDelete
 12. ஆவ்வ்வ்வ்வ்....... இன்னும் டீ வரலை , டீ குடுத்து 10 நிமிஷம் கழிச்சு ரெண்டு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி....அது போதும் எனக்கு :-))))

  ReplyDelete
 13. மேலே கருத்து பதிவு செய்தவர்களில் பாதி பேர் பச்சை பொய் சொல்பவர்கள்.

  "எனக்கு அந்த பதிவரின் பெயர் தெரியும் ஆனால் அவர் யார் என்று சொல்லமாட்டேன்" என்று சொன்னால்கூட பரவாயில்லை. அத விட்டுட்டு, "யாருப்பா?", "யாரைச் சொல்றீங்க?" என்று கேட்பது காமெடி.

  அவர் பெயரில் ஊர் இருக்கும். க்ளு - கருணாஸ் ஹீரோவா நடிச்ச படம்.

  எந்த வலைத்தளம் சென்றாலும், அந்த மனுஷன் முதல்ல கருத்தை பதிவு செய்துவிடுகிறார். ரொம்ப பாவம். இணையம் & வலைத்தளங்களுக்கு ரொம்பவே அடிமை ஆகிவிட்டார்.

  ஆனால் அவர் வலைத்தளத்தில், ஒவ்வொரு பதிவுக்கும், கிட்டதட்ட 100 கருத்துக்கள் பதிவாகிறதே?!??!??!?

  நான் எனக்கென்று எதுவும் வலைத்தளம் வைத்திருக்கவில்லை, தட்ஸ்தமிழ் சைட்டில் செய்தி படிப்பேன், பிறகு சில வலைத்தளங்களுக்கு சென்று சினிமா விமர்சனம் படிப்பேன்.

  ReplyDelete