Searching...

Popular Posts

Thursday, August 15, 2013

தென்காசி தாட்டியருக்கு கும்மியின் மனம் பொங்கும் பிறந்த வாழ்த்துக்கள்


சங்கத்தின் ஆணி வேருக்கு பிறந்த நாளாம், இதுவரை பிரியாணி போடாத கும்மியை கண்ணடிக்கிறேன் ச்சீ கண்டிக்கிறேன் என்று தீவிரவாதி காட்டமாக, அவரை சாந்த படுத்த "பட்டத்து யானை" என்கிற பெருங்காப்பியத்துக்கு இன்னைக்கு மூணு ஷோவுக்கும் டிக்கட் எடுத்துக்கொடுக்க வேண்டியதாகி விட்டது! டிக்கட் கிடைத்த ஆராவராத்தில் திருநெல்வேலி சீமையே அல்லோகலப் படுகிறதாம்! (தம்பி அண்ணா என்ஜாய்!)
கும்மி சார்பில் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்க சென்ற தல ஹாரியை, கண்ணாடி மச்சான் பார்க்காமல் தவிர்த்து விட்டதாக கசிந்த செய்தியை கண்டு வாத்தி பேஸ் புக்கில் தீ குளிக்க போவதாக அறிவித்து விட்டார்! பிறகு டெக்னிக்கல் புலி பாஸித் உண்மையை கூறிய பிறகு தான் வாத்தி சற்று ஆசுவாசமானார்! (யோவ் கண்ணாடி மச்சான் நீ எதற்கும் ஒரு காணொளி விளக்கம் கொடுப்பது நல்லது)  

என்றைக்கும் இல்லாத அளவுக்கு வரலாறே (இது வேற வரலாறு) திணறுகிற மாதிரி கண்ணாடி மச்சானுக்கு வாழ்த்து தெரிவிக்க இளம்பெண்களின் கூட்டம் அவரின் வீட்டு வாசலில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்! சிலர் நேற்று இரவே வந்து காத்திருப்பதாக சொல்லுகையில் கேட்பதில் மனம் பதறுகிறது! இன்ஸ்டன்ட் ரோசா கடைவைத்திருக்கும் அரசன் மேலும் பல தகவல்களை உங்களுக்கு பொறவு வழங்குவார்! 

வசு, சின்னமலை, தல ராஜ் மூவரும் இணைந்து மூனே முக்கால் மணி நேரம் யோசித்து சீனுவின் மூன்று வயது போட்டோவை பிரேம் பண்ணி அவருக்கே தங்களது பிறந்த நாள் பரிசாக வழங்கியதாக வரலாறு பதிவெழுதி மிரட்டி வருகிறார்! இந்த கேப்பில் ஸ்கூல் பையன் கண்ணாடி மச்சானுக்கு சேலை கட்டிய? நமியின் படத்தை பரிசாக கொடுத்து சாதனை செய்தார்!

இன்னொரு பக்கம் அகில உலக  மாதவி ரசிகர் மன்றம் சார்பாக ரூபக் சீனுவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை தொடங்கி அசராமல் அசத்தி வருகிறாராம் சமீபத்திய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது! இம்புட்டு கலவரத்துக்கும் ஹெட் நீட்டாத சீனுவை, இரத்தம் பொங்கும் கண்களுடன் பட்டிக்ஸ் கோவமாக சென்று வேகமாக இழுத்து வர, சட்டென்ற வந்த ஸ்கோடா கார் சீனுவை உள்ளிழுத்துக்கொண்டு இமைக்கும் நேரத்தில் அனைவர் கண்ணிலும் புழுதி இறைத்துவிட்டு கிளம்பிவிட்டது! 

காரில் வந்தது நமிதான் என்று வசுவும், வாத்தியும் பெருத்த சண்டை போட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருகிறார் அரசன்!

கட்டிளங்காளை, காதல் (கடித) மன்னன், சங்கத்தின் முழுநேர அரசியல்வாதி, மேடவாக்கம் மேஸ்ட்ரோ, தென்காசி தாட்டியருக்கு கும்மியின் மனம் பொங்கும் பிறந்த வாழ்த்துக்கள் சொல்வதில் மிகுந்த பெருமை கொள்கிறது! நீடூழி வாழ்க!   

7 comments:

 1. சங்கத்தின் ஆஆஆஆணி வேருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. வாழ்த்துகள் நண்பா. பொருத்தம் பிரமாதம்!

  ReplyDelete
 3. /சீனுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. //மேடவாக்கம் மேஸ்ட்ரோ// :>) அட அட...

  கடத்தப் பட்டதனால் தான், நம்ம தல முகநூல் பக்கம் கூட வரவில்லையா

  ReplyDelete
 5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா .... வாழ்க வளமுடன் ... ட்ரீட் வைத்தால் 150 வருடம் அதிகம் வாழ்வாய் ...

  ReplyDelete
 6. இதயம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சி.!

  ReplyDelete
 7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீனு ....

  ReplyDelete