Searching...

Popular Posts

Friday, August 30, 2013

பதிவர் சந்திப்பு சபையை கலைப்பதற்கு முயற்சியா...?


கும்மியின் நிர்வாகிகள் பெரிதும் விரும்பி படிக்கும் ஒரு தளம் குச்சுமுட்டாயும் குருவிரொட்டியும். அதன் வலைபூ எழுத்தாளர் உயர்திரு குட்டன் அவர்கள். இவ்வலைபூவானது இளைஞர்களுக்காக  நடத்தப்படும் மிகபெரிய இணைய பத்திரிக்கை. மேலும் அப்பத்திரிக்கையின் ஆசிரியரும் குட்டனே என்பது நாமறிந்த விஷயம்.


குட்டன் அவர்களுக்கு நாம் கழக கண்மணி பட்டம் கொடுக்கவில்லை என்பதில் நமக்கும் அவருக்கும் ஒரு சிறிய வருத்தம் உண்டு, இப்போது மற்றொரு விஷயம் அவரை இன்னும் அதிகளவு வருத்தம் கொள்ளச் செய்துள்ளது. அதாவது கும்மி நிர்வாகிகள் சிலர் குட்டன் வருகையை தடுக்க முயன்றதாக, அதுவும் நமது கும்மியை சேர்ந்தவர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளர்கள் என்பது நம்மை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இதை அறிந்ததும் நமது மற்ற கும்மி நிர்வாகிகளான அடியாள் அரசனும், தீவிரவாதி சதீஷும் அந்த மர்ம நபர்களை தொலைபேசி வாயிலாக அழைத்து மிரட்டியுள்ளனர். இதனைக் கண்டு மனம் கொதித்த அந்த திடங்கொண்ட பதிவர்,  பதிவர் சந்திப்பு நடைபெறப் போகும் சபையை கலைக்கக்ப் போவதாக நம்மை கலாயிதுள்ளார். 

கும்மி இது குறித்து பெருவருத்தமும் பெருங்கோபமும் கொள்கிறது. நமது நிர்வாகிகளால் எந்த ஒரு பதிவரும் தனது வருகையை நிறுத்தக் கூடாது.மேலும் காமெடி கும்மியின் பெரும் வருத்தம் என்னவெனில் நமது குழந்தைப் பதிவரான குட்டன், இந்த திடங்கொண்ட மற்றும் கனவுமெய்பட பதிவர்களின் அச்சுறுத்தல்களை எண்ணி பயந்துள்ளார்.

மேலும் மனநிலை பாதிக்கப்படும் அளவுக்கு நிலைமை தீவிரமாகி நேற்று பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் அவர்களை சந்தித்து ஆலோசனைப் பெற்றுள்ளார். ஒரு பிரபல பதிவரை இப்படியா துன்புறுத்துவது. இது அநியாயம் இல்லையா?

மன நல மருத்துவருடன் குட்டன்!-பதிவர் திருவிழா-2013


இதனால் குட்டனை சமாதனம் செய்வதற்காக நமது கும்மி குட்டனின் மின்னஞ்சல் முகவரி மூலமாக தொடர்பு கொண்ட போது மிகவும் வருத்தம் தெரிவித்தார், விரைந்து செயல்பட்ட பாஸித் பாய் குட்டனின் மின்னஞ்சல் முகவரி மூலம் அவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்துவிட்டார், எப்படி கண்டுபிடித்தார் என்றால் அவர்தான் எங்கள் தலைவா ஆயிற்றே.பின்னர் குட்டனை சமாதனம் செய்வது என்று முடிவாயிற்று, அவரை வாழ்த்தி வரவேற்று அவருக்கு மிகப்பெரிய பிளக்சும், ஆயிரம் அடி உயரம், ஐந்தாயிரம் அடி அகலத்தில் கட்டவுட் ஒன்றும் வைக்கப்படும் என்று சமாதானம் செய்யப்பட்டது. நமது அன்புக்கட்டளையை ஏற்று அகமகிழ்த்த குட்டன் அவர்கள் உடனடியாக பதிவர் சந்திபிற்கு வருகை புரிவதாக சம்மதித்துள்ளார்.

இந்நேரத்தில் தான் நமது திடங்கொண்ட பதிவர் கோபம்கொண்டு பதிவர் சந்திப்பை கலைக்கப் போவதாக சூளுரைத்துள்ளார். இதற்கு கனவு மெய்ப்படவும் துணைபுரிவதாக ஒரு கேள்வி, இவர்கள் கனவு மெய்ப்படக் கூடாது என்பது நமது பதில்.              

இருந்தாலும் திடங்கொண்ட பதிவருடன் பேச்சுவார்த்தை நடத்த கும்மி முடிவு செய்தது. அப்போது அவர் கூறிய பதில் தான் எங்களை பேரரதிர்ச்சியும் பெருஞ்சந்தோசமும் கொள்ளச் செய்தது, ஆனாலும் அவர் பதிவர் சந்திப்பைக் கலைக்காமல் இருக்கப் போவதில்லை என்ற தன முடிவில் உறுதியாக இருக்கிறார்.

அவர் கலைத்தால் கலைத்து விட்டுப் போகட்டும், நமது ஆதர்ச எழுத்தாளர் குட்டன் அவர்கள் பதிவர் சந்திப்புக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது, இருந்தும் அவருக்கு கட்டவுட் வேண்டாம் என்றும் தனது வாசக பெருங்கேடிகளுக்கு மட்டும் தரிசனம் தர இருப்பதாயும் வாக்குறுதி கொடுத்துள்ளார் என்பதை கும்மி சந்தோசமாய் கும்ம கடமைப்பட்டுள்ளது.          

பதிவர் சந்திப்பு சபையை கலைப்பது குறித்து திடங்கொண்ட பதிவர் கூறிய விபரம் பின்வருமாறு,  

எப்படியும் நன்றியுரை தான் தான் வழங்கப் போவதாகவும், நன்றியுரைக்குப் பின் சபை கலைய வேண்டும் அது தான் நீதி நேர்மை நியாயம் தர்மம் என்று பாயிண்டைப் பிடித்துவிட்டார் நமது திடங்கொண்ட பதிவர், அவரது புத்திகூர்மையை எண்ணி வியந்து அவருக்கு ஏன் ஆயிரம் தமிழ்மண வாக்குகள் பரிசளித்து அவரை தமிழ்மண மகுடம் என்னும் உயர் இடத்தில் ஏற்றிவிடக் கூடாது. சங்கம் இது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

வழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளியூர் நண்பர்கள் கவனத்திற்கு


20 comments:

 1. Replies
  1. வயசாயிப்போச்சு!வேற ஒரு பதிவில போட வேண்டிய கமெண்ட்டை இங்க போட்டுட்டேன்!அதனால நீக்கிட்டேன்.
   கும்மி சூப்பர்!

   Delete
 2. ப்ரொஃபைல் படத்தை இவ்வளவு பெரிசாப் போட்டுட்டீங்களே;பார்த்து நானே பயந்து போயிட்டேன்!நெறைய பேருக்குப் பயத்தில காய்ச்சல் வந்து திருவிழாவுக்கு வரமுடியாமப் போயிடப் போகுது!

  ‘போற்றுவோர் போற்றட்டும்,புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும்;வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் இதோ குட்டன் அரங்கை நோக்கிப் புறப்பட்டு விட்டார்.நீங்கள் எவ்வளவு போராடினாலும் கனவு மெய்ப்படாது!
  ஹா ஹா ஹா ஹா!

  ReplyDelete
 3. நல்லா கெளப்புறீங்க பீதிய....

  அந்த திடங்கொண்ட பதிவரையும், கனவு மெய்ப்பட கனவு காணும் பதிவரையும் அரசவைக்கு கொண்டு வந்து பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லையை ஆறு முறையும், அரசவைக் கவிஞரின் கவிதை புத்தகத்தை முன்னூறு முறையும் மனப்பாடம் செய்ய வைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது .....

  ReplyDelete
 4. அவரை தமிழ்மண மகுடம் என்னும் உயர் இடத்தில் ஏற்றிவிடக் கூடாது. சங்கம் இது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.//

  ஏற்றிட்டாப் போச்சு...

  ReplyDelete
 5. அவரை வாழ்த்தி வரவேற்று அவருக்கு மிகப்பெரிய பிளக்சும், ஆயிரம் அடி உயரம், ஐந்தாயிரம் அடி அகலத்தில் கட்டவுட் ஒன்றும் வைக்கப்படும் என்று சமாதானம் செய்யப்பட்டது//

  வரலாற்றில் இடம் பிடிக்காமல் விட மாட்டிர்கள் போல...

  ReplyDelete
 6. இவ்வலைபூவானது இளைஞர்களுக்காக நடத்தப்படும் மிகபெரிய இணைய பத்திரிக்கை. மேலும் அப்பத்திரிக்கையின் ஆசிரியரும் குட்டனே என்பது நாமறிந்த விஷயம்.//

  நல்லவேளை இவர் தாய் தமிழகத்தை சேர்ந்தவர் தான் என்றும், தமிழில் பேசுவார் என்றும், சொல்லுவீங்களோ என்று பயந்தே போயிட்டேன் ... இப்படியொரு பேராபத்தை செய்யாமல் காப்பாற்றிய உங்களுக்கு கோட்டான கோட்டி நன்றி ...

  ReplyDelete
 7. தலைவா....... Time to Jump.......!

  ReplyDelete
 8. அரசன் அண்ணே நீங்கள் அடியாள் என்று கும்மியே ஒப்புக்கொண்டது...அதனால் உங்களை கும்ப மாட்டார்களோ!!!

  ReplyDelete
 9. //விரைந்து செயல்பட்ட பாஸித் பாய் குட்டனின் மின்னஞ்சல் முகவரி மூலம் அவரது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்துவிட்டார், எப்படி கண்டுபிடித்தார் என்றால் அவர்தான் எங்கள் தலைவா ஆயிற்றே//

  அதனால் வரும் தேர்தலில் பாஸித் பாய் அவர்களை நிற்கவைக்க கும்மி நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது..

  ReplyDelete
 10. உண்மையச் சொல்லுங்க தலைவா சூச்சு போகும்போது எடுத்த போட்டோ தானே அது ?

  குட்டன் போட்டோ ....! ய..................ப்பா ? முடியல ......!

  இந்தப் போட்டோவோ மட்டும் ஐயாயிரம் அடிக்கு கட் அவுட்டா வச்சுருந்தீங்க , நஹசாகிக்கு, ஹிரோஷிமா வரிசையில சென்னையும் சேந்து( செத்)துருக்கும் ....! இன்னா கொலவெறி ....?

  ReplyDelete