Searching...

Popular Posts

Thursday, August 1, 2013

ஓட்டகம் மேய்த்தலின் வரலாற்றுச் சுவடுகளும் - ஒட்டகமே வரலாறான சுவடுகளும் - மேல்படிப்பின் ரகசியமும் - உங்கள் மேல் எனக்கு உள்ள லவ்வும் - A STORY ABOUT MY PLANET EARTH - MY LOVER MALAR AND JOURNEY ABOUT VARALATRU SUVADUGAL

5:09 AM

(இது சத்தியமாக வரலாற்றுச் சுவடுகள் என்னும் தளத்தில் எழுதி வரும் பதிவரை கிண்டல் செய்து எழுதப்பட்ட பதிவில்லை. ஒருவேளை இந்தப் பதிவை படித்து அவர் மனம் வருத்தமடையுமானால் அதனை காமெடி கும்மி பட்டாசு வெடித்து கொண்டாடும் என்பதையும் ஆழ்ந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொல்கிறோம்)

(இதை விட பெரிய தலைப்பு யோசித்துவிட்டேன், சிக்க வில்லை. அதனால் வசு எம்மை மன்னிப்பாராக.)        

********

என் காதலி மலருக்காக, திடிரென்று மேல்படிப்பு படிக்க வேண்டிய கட்டாயம். அதனால் ஏற்பட்ட இடைவெளியை நிறைவு செய்ய வாருங்கள் பதிவுக்குள் தொபுக்கடீர் என்று குதிக்கலாம்.     

துபாயில் அடர்ந்த பாலை வனத்தில் ஒட்டகம் மேய்ப்பதற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எனது கிராமமான கொட்டாம்பட்டியில் ஆடு மேய்ப்பதற்குமான இடையில் நிகழ்ந்த, இதுவரை யாரிடமும் சொல்லாத வரலாற்றுச் சுவடுகளை உங்களிடம் தைரியமாக, அதே நேரத்தில் இந்த இணையப் பொதுவெளியில், உங்களிடம் மட்டும் ரகசியமாக சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து இந்தக் கதையை வேறு யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். 

உங்களிடம் மட்டும் இதை சொல்கிறேன் என்று நான் சொல்லும் பொழுதே நீங்கள் உணர்ந்திருக்கலாம் எந்த அளவிற்கு உங்களை உருகி உருகி காதலிக்கிறேன் என்று..


அப்போது நான் முளைத்து மூணு இலைகூட விடாத சிறுவன். அப்போது என்று போட்டு ப்ளேஷ்பேக் எழுத ஆரம்பிப்பதில் இருக்கும் அலாதி சுகம் வேறு எந்த பதிவு எழுதும் போதும் எனக்கு ஏற்பட்டதேயில்லை. 

அன்றைய தினம் கொட்டாம்பட்டியில் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மலர் எனக்குத் தெரியாமல், எனக்கு தெரிந்த பின் எனக்குத் தராமல் இரண்டு தேன்முட்டாயை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அன்று அவள் சாப்பிட்ட தேன் முட்டாய் தான் துபாயில் ஒட்டகம் மேய்க்கக் காரணமாய் இருக்கும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை. 

தேன்முட்டாய் காலியானதும் என்னிடம் வந்தாள் "வசு, வசு" என்றாள்.

"என் பேரு வசு கிடையாது, என் பேரு, என் பேரு... சொல்ல மாட்டேன் போடி"

" உன் வாழ்க்கை வரலாற்றுச் சுவடுகள இந்த உலகம் வருங்காலத்தில் அருமை, அற்புதம், உலகத்திலேயே மிக சிறந்த பதிவு,  மனபாடம் செய்ய வேண்டிய பதிவு, தம பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் என்றெல்லாம் புகழ்ந்து பேசும். அப்படிப்பட்ட வரலாற்றுச் சுவடுகளுக்கு வசுன்ற பேரு தான் சரியா இருக்கும்"

என் மலர் சொன்னதுக்கு அப்றமா மறுப்பு எது, நானும் வசுவானேன்.

என் மலர் என்கிட்டே கேட்டா " வசு, வசு.. எனக்கு தே  முட்டாய் வாங்கிக் கொடுடா"

இந்த புவியானது எப்படித் தோன்றியது என்று தெரியுமா, பால்வெளி அண்டத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெடிப்பில் பிரிந்து வந்த கற்கள் பின்னாளில் பிரபஞ்சக் கோட்பாடு படி ஓரிடத்தில் நிலைகொள்ளத் தொடங்கி பின் சூரியனில் இருந்து சரியாக மூன்றாம் இடத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்ட தல தள அமைப்புடன் ஒரு பந்து உருவாகியது. பின்னாளில் இந்தப் பந்து புவி என்றழைகபட்டது.

இப்படிப்பட்ட புவியில் தோன்றிய என் மலர் என்னிடம் ஆசையாய் தேன்மிட்டாய் வாங்கித்தா என்று என்னிடம் கேட்டால் நான் செய்ய முடியும், தேன் முட்டாய் உருவான வரலாறை அடுத்த அடுத்த தனி பதிவில் சொல்கிறேன்.

மலருக்கு முட்டாய் வாங்கிக் கொடுக்க என்னிடம் காசு இல்லை. நேராக என் அப்பத்தாவிடம் சென்றேன். அப்பத்தா என்ற வார்த்தையை எழுதும் போது தான் ஒன்றைக் கவனித்தான் இந்த சென்னைவாசிகள் அப்பத்தாவில் இருக்கும் 'அப்ப'வை அப்பப்ப எடுத்து விடுகிறார்கள். நாட்டி பெல்லோஸ்.

"அப்பத்தா..அப்பத்தா.. தேன் முட்டை வாங்கணும் காசு கொடு.." என்று அடம் பிடிக்கத் தொடங்கினேன். அப்பத்தா சொன்னாள் 

உழச்சி சாப்ட்டாதாம்ல உடம்புல ஒட்டும், வேலைக்குப் போலே என்றால் என்னால் என்ன வேலைக்கு செல்ல முடியும். ஐடியா கேட்டேன். 

"போல போக்கத்த பயலே, நீ ஆடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லல்லே..." என்றாள். அண்டப் பெருவெடிப்பில் நடந்த பெருவெடிப்பு போல், புவி எரிமலையைக் கக்கும் போது ஏற்படும் கொதிப்பு போல் பொத்துக் கொண்டு  வந்தது கோபம். வீட்டில் இருந்த ஆட்டை கட்டவிழ்த்து மேய்க்கத் தொடங்கினேன். 

காப்ரா அகீகாராஸ் ஹிர்கஸ் என்பது தான் ஆட்டின் உயிரியல் பெயர். இப்படி உயிரை வாங்கக் கூடிய ஒரு அறிவியல் பெயரை வைத்துள்ள இந்த ஆட்டை என்னுடைய மலர் கேட்ட தேன்முட்டாய்க்காக மேய்க்கத் தொடங்கினேன்.  

ஆடு மேய்ப்பது ஒன்று அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஏற்கனவே சொன்னேன் இல்லையா இப்புவியானது மூன்று அடுக்கு அப்பார்ட்மெண்ட்டைப் போன்றது என்று. இதில் இரண்டாம் மூன்றாம் தளங்களுக்கு நமக்கு அனுமதி இல்லை. புவியின் மேல் இருக்கும் முதல் தளத்தில் சுமார் பத்து தகடுகள் போன்ற அமைப்பு உள்ளது.

இதில் மேல் தகடு மட்டுமே 35 கி.மீ தடிமனானது. மனிதனால் சுமார் 4 கி.மீ தடிமன் வரை மட்டுமே பயணிக்க முடியும். இப்புவியானது லாவா என்ற ஆந்திரா மெஸ்ஸில் இருக்கும் காரக் குழம்பு போல் ரொம்ப சூடானது, 4 .கி.மீ ஆழத்திற்கு மேல் பாறையை உருக்க வைக்கக் கூடிய கொதிநிலை கொண்டது. 

ஆடுமேய்க்க நாம் அவ்வளவு ஆழம் செல்ல வேண்டியதில்லை. முதல் தகட்டில் இருந்து துளிர் விடும் பச்சை நிற புற்களையே ஆடுகளுக்கு உணவாகக் கொடுத்தால் போதுமானது. 

ஆடு மேய்க்க சென்ற பொழுது பக்கத்து வயக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மலரின் அக்காவை சைட் தொடங்கிய வேளையில் என் ஆடு எங்கோ காணமல் சென்று விட்டது. நான் அதைக் கவனிக்கவில்லை. திடிரென்று என் பொடதியில் ஒரு அறை விழுந்தது. விண்வெளியில் சுற்றித் திரியும் ஒரு வின் கல்லானது விடுபடு திசை வேகத்தில் புவியில் வந்து மோதினால் எவ்வளவு சக்தி இருக்குமோ அப்படி ஒரு சக்தி இருந்தது அந்த அறையில். அடித்தது யார் என்று பார்த்தால் பின்னால் என் அப்பத்தா..

"ஏலே உன்ன ஆடு மேய்க்க அனுப்பினா, நீ என்னாலே அங்க நோட்டம் விட்டுகிட்டு கெடக்க. ஒரு ஆடு மேய்க்கக் கூட வக்கில்ல, உனக்குலா எதுக்குலே வெ.மா.சூ.சொ. போலே போய்  இஞ்சினியரிங் படிலே , அப்போ தெரியும். ஒழுங்கா ஆடே மேய்சிருக்கலாம்ன்னு. அன்று ஒழுங்காக ஆடு மேய்க்காத எனக்கு பாடம் புகட்ட என் அப்பத்தாவிற்கு அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.  எவ்வளவோ கெஞ்சியும் கதறியும் என் அழுகையை பொருட்படுத்தாமல் என்னை இன்ஜினியரிங்கில் தள்ளி விட்டாள்.  

பிரிடிஷ் விட்டுச் சென்ற மெக்காலே கல்வி முறையில் இஞ்சினியரிங் முடித்து வேலை கிடைக்காமல் திண்டாடிய போது தான் உணர்ந்தது கொண்டேன் ஒழுங்கா ஆடே மேய்ச்சிருக்கலாம்னு.

இந்தியாவில் வேலை இல்லாமல் துபாய் சென்றேன். எப்பாடுபட்டாவது என் மலருக்கு தேன் முட்டாய் வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டும்.

என் மலர் சொல்லியது பலிக்கத் தொடங்கியது. துபாயில் வேலை கிடைக்காமல் சுற்றிய பொழுது இந்த உலகின் வரலாற்றை எழுத ஒரு தேவ தூதன் அவசரத் தேவை என்று அசரீரி வானில் இருந்து அலறியது. நான் உண்மையான வசுவாக உருவெடுத்தேன்.

அருமை, அற்புதம், உலகத்திலேயே மிக சிறந்த பதிவு,  மனபாடம் செய்ய வேண்டிய பதிவு, தம பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் என்றெல்லாம் பாராட்டுக்களை அள்ளிக் குவித்துக் கொண்டுள்ளேன்.

இருந்தாலும் ஒவ்வொரு பதிவு எழுதும் போதும் எனக்குள் மலரும், மலரும் நினைவாக அவ்வபோது என் மலர் கேட்ட தேன்முட்டாயும் நியாபகம் வரும்.

அன்றும் அப்படித்தான் 

வளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன?; carbon dioxide can really destroy the world (part-2) - varalatru suvadugal


என்ற பதிவு எழுதிக் கொண்டிருந்தேன், அப்போது  கனவில் மலரின் செத்துப்போன அப்பத்தா தோன்றி "பேராண்டி, மலர காதலிச்சி ஆண்டியாகனும்ன்னு முடிவு பண்ணிட்ட... உன்ன யாராலும் தடுக்க முடியாது. உன் ஆச நிறவேரனும்னா ஒரே வழிதான் இருக்கு. நீ ஒட்டகம் மேய்க்கணும்".

துபாயில் ஒட்டகம் மேய்ப்பது அவ்ளோ ஈஸி இல்ல, அதுக்கு என்ட்ரன்ஸ் எக்ஷாம் இருக்கு. படிக்கணும், சோ ஒட்டகம் மேய்க்கதுல பட்டம் வாங்குற வரைக்கும் இனி பதிவு எழுதக் கூடாதுன்னு முடிவு பன்ணினேன். ராவும் பகலுமா ஒட்டகம் மேய்க்கிறது பற்றி படிக்க ஆரம்பிச்சேன்.       

அப்போது தான் கேமல்கஸ் என்ற அறிவியல் உயிரினம் ஒட்டகமாக அறிமுகமாகியது. அடர் பாலைவனத்தில் ஆயிரம் சூரியன் சுட்டாலும் என்ற மரியான் பாடலை சத்தமாக காதில் மாட்டிக் கொண்டு ஒட்டகம் மேய்க்கத் தொடங்கினேன். ஒட்டகம் மேய்ப்பதில் மேல்படிப்பு படித்ததற்காக கொட்டாம்பட்டியில் பேனர் அடித்துக் கொண்டாடியதாக மலர் பெருமை பேசினாள்.   

விரைவில் இந்தியா திரும்புவதாக உத்தேசம் உள்ளது. இந்தியா திரும்பும் போது எப்படி ஒரு அண்டப் பெருவெடிப்பில் புவி உருவானதோ, அதே போல் எண்ணைச் சட்டி பெருவெடிப்பில் உருவாகும் தேன் முட்டாயை என் மலருக்கு வாங்கிக் கொடுக்காமல் விடமாட்டேன்.

இப்பதிவு எழுத உதவிய பதிவு : 

47 comments:

 1. மலரும், மலரும் நினைவாக அவ்வபோது என் மலர் கேட்ட தேன்முட்டாயும் நியாபகம் வரும்.

  வாழ்த்துகள்..!

  ReplyDelete
 2. Replies
  1. இப்பிடி கைகொட்டி சிரிக்க வச்சிட்டியே மச்சி.!

   Delete
 3. // அப்போது நான் முளைத்து மூணு இலைகூட
  விடாத சிறுவன்.//

  அதாவது 58 வருடங்களுக்கு முன்பு. . . .!!!!

  ReplyDelete
 4. வசு வை கிண்டல் செய்தவர்களை கடா ஸாரி பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் உப்புமாவிடம் சாரி ஓபாமாவிடம் மனு கொடுக்கபோறேன்.

  ReplyDelete
  Replies
  1. அமேரிக்கா போறது இருக்கட்டும்... மொதல்ல உங்க வீட்டு தெரு முக்குல இருக்குற டீக்காடைக்காரன் கடனை செட்டில் பண்ணுங்க.. நேத்து கொலை வெறியோட உங்களை தேடிகிட்டு இருந்தான்.! :)

   Delete
 5. // விரைவில் இந்தியா திரும்புவதாக உத்தேசம்
  உள்ளது. //

  எப்போனு சொன்னா நாங்க இந்தியாவை விட்டு போக வசதியா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் உங்க சொந்த ஊரான ஆப்பிரிக்காவுக்கு போயிரலாம்னு என்னமா? :d

   Delete
 6. கொக்கமக்காவில் கொஞ்சம் ஆங்கிலத்தில் படித்துள்ளேன்...தமிழில் இது தான் முதல் முறை...விடாமல் தொடருங்கள்..இந்த முயற்சியை...வாழ்த்துக்கள்...

  இன்று என் தளத்தில்

  கிட்.. கைட்... மெகாலைட்....! (28/07/2013)

  http://comedykummi.blogspot.com/2013/07/28072013.html

  ReplyDelete
  Replies
  1. இந்த கமெண்ட் முதலில் எனக்குப் புரியவில்லை... யோவ் வாத்தி.. ஹாரி உம்மத் தான் உரசிப் பாக்றாப்ல... அடுத்த டார்கெட் நீங்கதான்ணு நினைக்கிறன் :-d

   Delete
  2. ஹாரிக்கு நேரம் சரியில்லை .. சிங்கத்தை சீண்டி பார்க்குறார் .(!!!!!)

   Delete
  3. ஏய் மச்சி காரி.. நீ.... நடிகண்டா ஹி ஹி =))

   Delete
 7. Replies
  1. நீங்கள் என்ன கலாய்த்தாலும் அவர் பதிவே தனி...

   உங்களால் முடியாது... Sorry காதல் Seenu...!

   Very bad...!

   Delete
  2. யோவ் வசு இது உமக்குக் கிடைத்த மாபெரும் அங்கீகாரம்... குறித்துக் கொள்ளவும்...

   Delete
  3. @திண்டுக்கல் தனபாலன்August 1, 2013 at 6:45 AM

   //Very bad...!//

   இந்த வலையில் ஒருவரை ஒருவர் கும்முவது என்று முடிவெடுத்த பின் யார் மீதும் எவ்விதமான தனிப்பட்ட காழ்புணர்ச்சியையும் வெளிபடுத்துவதில்லை டி.டி... எனக்கு ஒருவன் நண்பன் ஆனால் அவனை நான் கிண்டல் செய்யாமல் வேறு யார் கிண்டல் செய்வார்கள். //எனக்கு ஒருவன் நண்பன் ஆனால்// என்ற வார்த்தையை அழுத்தமாய்ச் சொல்கிறேன்.

   ஹாரி வசு பாசித் சதீஷ் என்று எல்லாரையுமே கிண்டல் செய்து பல பதிவுகள் வந்திருப்பது உங்களுக்குத் தெரியும்...

   Delete
  4. சார் இங்கிட்டு நடப்பது தனி வியாபாரம், கண்டுக்காதிங்க ...

   Delete
  5. தனபாலன் சார்.. காமெடி கும்மின்னு தலைப்பை வச்சிக்கிட்டு கலாய்க்கிலனா எப்படி... இதை படிச்சிட்டு அவரே விழுந்து சிரிச்சிருபாரு... :-)

   Delete
  6. டி டி அண்ணே உங்க அன்புக்கு நன்றியெல்லாம் கிடையாதுன்னே.. நன்றிங்கிறது நமக்குள்ள தேவையில்லை... உங்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.... இது சும்மா ஒரு டீஸிங் பதிவுன்னே கண்டுக்காதீங்க! :-)

   Delete

 8. எம்மாடி! எம்புட்டு பெரிய தலைப்பு !

  //இந்த சென்னைவாசிகள் அப்பத்தாவில் இருக்கும் 'அப்ப'வை அப்பப்ப எடுத்து விடுகிறார்கள். நாட்டி பெல்லோஸ்.// ஹா ஹா ஹா

  // லாவா என்ற ஆந்திரா மெஸ்ஸில் இருக்கும் காரக் குழம்பு போல் ரொம்ப சூடானது,// ரசித்தேன்

  //பத்தியாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் // சூப்பர் அப்பு

  த.ம. 5 :-)

  ReplyDelete
  Replies
  1. //த.ம. 5 //

   பேச்சு பேச்சா இருந்தாலும் காரியத்துல கண்ணாயிருக்கணும்... உங்க ராஜ தந்திரம் அருமைன்னே (o)

   Delete
 9. யப்ப்பாடி தப்பிச்சேன் ....இந்த வார முத்து அண்ணன் வசு வாழ்க....பாதி பதிவை வசுவிடமே சுட்ட சீனுவின் திறமையை பாராட்டி அடுத்த பதிவு யார் எழுத?

  ReplyDelete
 10. ஆஹா....கிளம்பிட்டாங்கடோய் மனோ கிளம்பிட்டாயிங்க...!

  ReplyDelete
 11. சூப்பர்! ஆமா இங்க வசு ஏன் இன்னும் கமெண்டு போடல?! கோச்சுகிட்டாரோ? :)

  ReplyDelete
  Replies
  1. கோபமா நமக்கா.. ஹே ஹே ஹே.. எங்களையெல்லாம் அவமானப்படுத்துரதுன்னா புதுசா எதாவது ஜிந்திச்சாத்தான் முடியும்.

   Delete
 12. என் தலைவனை கிழித்து தொங்கவிட்ட கண்ணாடி மச்சானை கண்டுபிடித்து ஆயிரம் முத்தம் கொடுக்க ஆசை தான், பயபுள்ள ஆம்பளையா பூச்சே ...

  ReplyDelete
  Replies
  1. //என் தலைவனை கிழித்து தொங்கவிட்ட கண்ணாடி மச்சானை கண்டுபிடித்து ஆயிரம் முத்தம் கொடுக்க ஆசை தான், பயபுள்ள ஆம்பளையா பூச்சே ...//

   நல்லாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வருவீங்கய்யா.......... என்னம்மா யோசிக்கிறீங்க........ :-)

   Delete
 13. எழுத எத்தனையோ இருக்க, இத்தனூண்டு தலைப்பு வைத்த சீனுவை நான் வன்மையா கண்டிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. இதுக்குமேல டெம்ப்ளேட் அக்செப்ட் பன்னிருக்காது.. அதான் பக்கி இதோட நிருத்திருக்கும்.!

   Delete
 14. ஆமா , வசு ன்னு நினைவில் வந்தாலே லெங்க்தியா தான் எழுத வருமா ?

  ReplyDelete
  Replies
  1. ஆளுதான் என்னை போல குள்ளம் .. ஆனா மனசுபோல தலைப்பு எல்லாம் பெரிசுதான்

   Delete
  2. இப்பத்தான்யா இந்த வாத்தி உருப்படியா பேசிருக்காப்புல.. இன்னிக்கு காலைல பல்லு விளக்கிடாப்புலைன்னு நெனைக்கேன்.!

   Delete
 15. அயல் நாட்டு விலங்குகளை மேய்த்து முடித்துவிட்டு திரும்பும் எங்கள் கண்ணன், அன்பின் நண்பன், தோள் கிள்ளும் தோழன் இந்திய விலங்குகளை மேய்த்து அதிலும் நான்கைந்து பட்டம் வாங்க கும்மியின் 432 கிளை சார்பாக வாழ்த்துகளை அள்ளி தெளிக்கிறோம்

  ReplyDelete
 16. அந்த புள்ள பேரு மலரா? என் காதுல என்னமோ மன்னங்குடி மருவழகி ன்னு கேள்வி பட்டேன்! அப்படின்னா இந்த மலர் எந்த தோட்டத்தில் பூத்தது ...?

  ReplyDelete
 17. சீனு! இப்படிகூட கலாயிக்க முடியுமா.. ஆனாலும் இடையில மானே தேனே போல... கொஞ்சம் புவிய பத்தின தகவல்கள் சுவாரசியம் தான்!!!

  ReplyDelete
 18. நல்லாதான் கலாய்ச்சு இருக்கீங்க! :)

  ReplyDelete
 19. ஹா..ஹா..இதை படிக்காம விட்டுட்டேனே... செம காலாய்ப்பு ... நான் கூட வ.சுவை கலாய்ச்சி ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன்... முந்திகிடீங்களே சீனு.

  ReplyDelete
 20. இனிமேல் அவர் இம்மாபெரிய தலைப்பு வைப்பாரு..? :-)

  ReplyDelete
 21. வரலாற்று சுவடுகள் எங்கிருந்தாலும் விழா மேடைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்..

  ReplyDelete
 22. ஒரே ஒரு பிரியாணிக்காக எம்புட்டு வேலை பார்த்துருக்கான் இந்த சீனு பக்கி. ஆட்டோட உயிரியல் (Capra aegagrus hircus)பேரையெல்லாம் தேடி எடுத்துருக்கியே மச்சி... உன்னோட இந்த புரோட்டா எத்திக்ஸ்ஸ.. ச்சே..ஆங்.. ப்ரொபசனல் எத்திக்ஸ்ஸ நெனைச்சா என் கண்ணு கலங்குது.

  ReplyDelete
 23. பின்னாடியே ஆள் வச்சு பாலோ பண்ணுறாய்ங்க போல... இவ்வளவு துல்லியமா தகவல் திரட்டிடுக்கானுகளே.

  ReplyDelete
 24. படிக்க வைக்கிறத்துக்கே இவ்வளவு பெரிய தந்திரமா நடத்துங்க நடத்துங்க...............

  ReplyDelete