Searching...

Popular Posts

Tuesday, September 17, 2013

கண்ணாடி மச்சானின் மச்சக் கன்னி!அதிகாலை நேரம்.... பறவைகள் கீச்சிட்டு இரை தேடி புறப்பட்டிருக்கும் வேளையில்,  நான் பஞ்சு மெத்தையில் இருந்து எழுந்து ஜன்னல் வழியே பார்வையை செலுத்தினேன். எதுத்த வீட்டு பிகர் கோலம் போட்டு கொண்டிருந்தாள். என்ன அழகு அவளும், அவள்கோலமும். இன்று நான் விழித்த நேரத்தால் நான் பாக்கியமானேன்.


பிரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கி பல் விளக்கி குளிர்ந்த நீரில் குளித்து, ஆகா... காலை குளியல் எவ்ளோ சுகம் தெரியுமா... நேத்து கட்டம் போட்ட சட்டை அணிந்ததால், இன்று கோடு போட்ட சட்டையை தேடினேன். கிடைத்தது என் பிறந்தநாள் சட்டை, சிறு சிறு பட்டை வரிகளால் அழகாக நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்த சட்டை அது.

ட்ரெஸ் அணிந்துவெள்ளி பிரேம்ல் செய்த பிள்ளையாரை இரண்டு கைகளை கூப்பி வணங்கி, ஜவ்வாது வாசனை நிறைந்த திருநீரை நெற்றியில் பூசி டைனிங் டேபிளில் அமர்ந்தேன். அம்மா செய்த குஸ்பு இட்லியை கார சட்னியுடனும், சாம்பாருடனும் துவைத்து  தொண்டை வழியாக வயிற்றில் இறக்கி, தண்ணீரை குடித்து மனசார அம்மாவை வாழ்த்தி இதே இட்லி போல பொண்ணை பாரும்மா-ன்னு சொல்லி பையில் பச்சைக்கலர் பேனாவை சொருகி, காலில் தோல் செருப்பை மாட்டி, எதிர் வீட்டு பெண் தெரிகிறாளா என ஒரு பார்வை பார்த்து தெருவில் இறங்கி, என்னை கடந்து புழுதியை கிளப்பி விட்டுச் செல்லும் குப்பை லாரி ட்ரைவரை மனசுக்குள் வசை பாடி தூரத்தில் தெரியும் கோவிலை வணங்கி பஸ் நிறுத்தம்  நோக்கி நடக்க ஆரம்பித்தேன்

பஸ் நிறுத்தம் அருகே ஏதோ சண்டை... என்னவென்று மூக்கை நுழைக்க எத்தனிக்கையில் பஸ் நிறுத்தத்திற்கு ஒரு அழகான பெண் ஓடி வருகிறாள்.
அவளை பார்த்து அவர் அலங்காரத்தில் லயித்து அவளருகே நிற்க அந்த வயதான அம்மணிகளை புறந்தள்ளி பின்னே நின்றேன். எனக்கு அந்த பஸ் நிறுத்தம் ரொம்பவே பிடிக்கும். நான் சின்ன வயசுல ஸ்கூலுக்கு போன நாட்கள் முதல், இதோ இப்ப வரை இந்த ஸ்டாப்பில் தான் பஸ் ஏறுவேன். சின்ன வயசில் அப்பா வந்து ஏத்தி விடுவார். ம்ம்ம்.... அந்த காலம் வருமா? இப்ப அப்பா வந்தால் இப்படி பிகர்களை சைட் அடிக்க முடியுமா? சரி, வாங்க அந்த பொண்ணுகிட்ட போலாம்.

தக்க சமயம் கிடைத்தது. உடனே, அவளிடம் பேச எத்தனிக்கையில் அவள் செல்போன் ஒலிக்க அதில் யாரோ ஒருவனிடம் கலகலவென அவள் சில்லறையை கொட்ட, நான் என் தலையில் கையால் கொட்டிக் கொண்டேன். ச்சே.. அவள் எங்கோ லாக்காகி உள்ளாள்... என்னே என் மனம்...


ஓ... ஒரு பேருந்து அப்போது என்னைக் கடக்கையில் அதன் போர்டை பார்த்தேன்... அது எங்கள் ஆபீஸ் வழியே போகுமே...

அடச்சே... கன்னியால் என் கண்ணு நொல்லை ஆயிருச்சே... எனது அஞ்சு வருஷ ஓல்டு டைட்டன் வாட்சை பார்த்தேன்.. பெரிய முள் ஒன்பது பக்கத்திலும், சின்ன முள் ஒன்பதுக்கு பக்கத்திலும், அட மணி எட்டே முக்கால் ஆயிருச்சே... அடுத்த பேருந்து வர இன்னும் பத்து நிமிடம் இருக்கே... பொழுதை போக்க அந்த சண்டைக்குள் மூக்கை நுழைக்க எண்ணி அங்கே பார்த்தால் போலிஸ் வேன்.... ஆ.... வேணாம்,,,, இங்க பின்னால் நின்று?! ரசித்தேன் அவளை!!
 
கடிகார முள்ளை நானே சுற்றினேன்.  பத்து நிமிடம் கடந்து பதினொன்றாவது நிமிடம் ஆரம்பிக்கையில், புழுதி கிளப்பிக் கொண்டு ஒரு பஸ் வந்தது...
ஆங்... புழுதியால் பஸ் போர்டு எனக்கு தெரியவில்லை. அப்போது என் கண் கண்ணாடியை சட்டையால் துடைத்து போட்டு பார்த்தேன்... ஆம்.. நான் ஏற வேண்டிய பஸ் அது. வழக்கம் போல மாநகர பேருந்து நிறுத்தத்தில் தள்ளியே நின்றது.
ஓடினேன்...
கம்பியை பிடித்தேன்....
கடைசி படியில் காலை வைத்தேன்...
பஸ் கிளம்பியது....
கால் தடுமாறியது....
என்னை ஒரு கை பிடித்து உள்ளே இழுத்தது....
காலை கடைசி படியில் ஸ்டெடியா நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன்...
அங்கே... என் கண்ணை நானே நம்பவில்லை...
ஆம்... அவளே.....
நான் பின்னால் நின்று?! பார்த்த அதே பெண்...
அப்போது அவளின் செல்போன் ஒலிக்க, அவள் மறுபடியும் சில்லறையை சிந்தப் போகிறாள் என நினைத்து.. நினைத்து.... நினைத்திருக்கையில்...
அவள் செல்போனை கட் செய்து என்னை இறுக பிடித்தாள்.....

கண்ணாடியை சரி செய்து கண்களில் பொருத்தி அவள் கண்களைப் பார்த்து, ஹாய், வெரி தாங்க்ஸ் என்றேன். அதற்கே முப்பது நிமிடம் ஆகியிருந்தது.

அதற்குள் என் ஆபீஸ் ஸ்டாப் வந்திருந்தது.... இறங்க வேண்டிய கட்டாயம்.... இறங்கிவிட்டேன் என் மொபைல் எண்ணை டிக்கெட்டில் எழுதி அவளிடம் கொடுத்து விட்டு....
  
டிஸ்கி:
 "வீட்டில் கிளம்பி பஸ் பிடித்து ஆபீசுக்கு போனேன்." இந்த வரியை சீனு தன் பதிவில் சொன்னா எப்படி சொல்வான்னு ஒரு கற்பனை....
 
      

42 comments:

 1. //என்னை ஒரு கை பிடித்து உள்ளே இழுத்தது....
  காலை கடைசி படியில் ஸ்டெடியா நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன்...
  அங்கே... என் கண்ணை நானே நம்பவில்லை...
  //

  தம்தன நம்தன தம்தன நம்தன..

  ReplyDelete
 2. //"வீட்டில் கிளம்பி பஸ் பிடித்து ஆபீசுக்கு போனேன்." இந்த வரியை சீனு தன் பதிவில் சொன்னா எப்படி சொல்வான்னு ஒரு கற்பனை....//

  சீனு நிச்சயம் இவ்வளவு சீக்கிரம் முடிச்சிருக்க மாட்டப்புல.. என்ன பெட்டு?

  ReplyDelete
  Replies
  1. என்ன இருந்தாலும் சீனுவை மிஞ்ச முடியுமா ஆவி?

   Delete
 3. எல்லாம் சரி. ஆனால் சீனு பல் விளக்கினார், குளித்தார் என்பதை மட்டும் நம்பமுடியவில்லை. . .

  ReplyDelete
  Replies
  1. எனக்கெல்லாம் தலைசுற்றலே வந்து விட்டது வாத்தியாரே ... எம்மாம் பெரிய பச்சை பொய்

   Delete
  2. சீனு பல்லு விளக்குனாரா?????

   எனக்கு மயக்கமே வருது...

   Delete
  3. என்னாலையே நம்ப முடியல.. பக்கிங்க நம்புனா என்ன நம்பாட்டா என்ன.. யோவ் வசு இத்தன நாள் நம்ம கூட பழகியும் அம்மள பத்தி தெரியாம இருக்குதுங்க =p~

   Delete
 4. // ஹாய்,
  வெரி தாங்க்ஸ் என்றேன்.
  அதற்கே முப்பது நிமிடம் ஆகியிருந்தது.
  //
  இதுக்கே 30 நிமிஷம் ஆச்சின்னா????
  மத்ததுக்கெல்லாம்???? ஐ மீன் கரெக்ட் பன்றதை சொன்னேன்.

  ReplyDelete
 5. மச்சக்கன்னி படத்தை போடாத இப்பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன் பாஸ்

  ReplyDelete
  Replies
  1. யோவ் நீ என்னையா கண்ணிடிக்கிறது... என்ன மச்சக் கன்னி கூட சேர்த்து வைக்காததுக்கு நான் ஆர்ப்பாட்டம் பன்னம் போறேன் b-(

   Delete
 6. தக்க சமயம் கிடைத்தது. உடனே, அவளிடம் பேச எத்தனிக்கையில் அவள் செல்போன் ஒலிக்க அதில் யாரோ ஒருவனிடம் கலகலவென அவள் சில்லறையை கொட்ட, நான் என் தலையில் கையால் கொட்டிக் கொண்டேன். ச்சே.. அவள் எங்கோ லாக்காகி உள்ளாள்... என்னே என் மனம்...//

  செம அப்சர்வேஷன் பாஸ் ...

  ReplyDelete
 7. அடுத்து தீவிரவாதி பற்றி வருமோ ?

  ReplyDelete
 8. அதற்குள் என் ஆபீஸ் ஸ்டாப் வந்திருந்தது.... இறங்க வேண்டிய கட்டாயம்.... இறங்கிவிட்டேன் என் மொபைல் எண்ணை டிக்கெட்டில் எழுதி அவளிடம் கொடுத்து விட்டு....
  //

  இனி சீனுக்கு கெரகம் சரியில்லை ... எங்கிருந்தாலும் நலமுடன் வாழ்க ...

  ReplyDelete
 9. உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்...
  பல மாதம் வருடம் என மாறும்...

  நீங்காத ரீங்காரம் நான் தானே...
  நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே...

  ராகங்கள் தாளங்கள் நூறு
  சீனு உன் பேர் சொல்லும் பாரு...

  சிந்தாமல் நின்றாடும் செந்தேனே...
  சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்...

  வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது...
  குளுகுளு தென்றல் காற்றும் வீசுது...

  சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
  துடிக்குது எங்கும் தேகம் கூசுது...

  சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்...
  கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்...

  ReplyDelete
 10. //நிறுத்தி நிமிர்ந்து பார்த்தேன்...அங்கே...//

  ஆக்ச்சு"வலி" இந்த இடத்துல தொடரும் போட்டுருக்கணும் ... நீங்க மிஸ் பண்ணீட்டீங்க ....

  //நின்று?! // இதுக்குப் பேருதான் குறியீட்டு குசும்பு .....!

  ReplyDelete
 11. தி.கொ.போ.சீ ய செம்மயா அப்சர்வேஷன் பண்ணீருக்கீங்க....! ஜூப்பர் ....!

  ReplyDelete
 12. இத தான் அன்னிக்கே கட்டபொம்மன் "கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக" என்று சொல்லி வைச்சாரு.. (m)

  ReplyDelete
 13. அட... நான் என்னவோ.. ஏதோன்னு பயந்துட்டேன்... கடைசியில சீனு மேல "சீன" தூக்கிப் போட்டுட்டீங்களே அப்பூ..!!!!


  நல்ல இன்ட்ரஸ்டிங்காதான் இருநதது...!!!

  அதுசரி.. போலீச பார்த்ததும் பின்வரிசையில நின்னுட்டு பொன்ன சைட் அடிச்ச உங்களோட புத்திசாலித்தனம்....மெச்சத்தக்கது...

  கற்பனையோ.. உண்மையோ.. நல்ல கலந்துகட்டி படிக்க வச்சீட்ங்க.....


  குட்..குட்...!!

  ReplyDelete
 14. "வீட்டில் கிளம்பி பஸ் பிடித்து ஆபீசுக்கு போனேன்." இந்த வரியை சீனு தன் பதிவில் சொன்னா எப்படி சொல்வான்னு ஒரு கற்பனை....

  ------------------------------------------------------------------------

  ஹ ஹா... கண்ணாடி மாமா மாதிரியே அப்படியே எழுதியிருக்கீங்க...

  ReplyDelete
  Replies
  1. வெற்றி மாமா.. நீங்களாது நமக்கு ஒரு நல்ல பிகர ஏற்பாடு பண்ணுங்க.. அப்புறம் பாருங்க எத்தன லவ் ஸ்டோரி எழுதுறேன்னு... x-)

   Delete
 15. சூப்பர்! :) ஆனா, இந்த பதிவு பத்தி சீனுக்கு தெரியுமா? ;) இங்க ஆளையே காணோமே?

  ReplyDelete
 16. கடந்த வாரம் முழுவதும் கொஞ்சம் பிசியா இருந்துட்டேன் அதான் வர முடியல..

  ஆனாலும் நம்ம பிரகாஷ் அண்ணனுக்கு திரிகால ஞானி ன்னு பட்டம் கொடுக்கலாம்... கூடவே இருந்து பார்த்த மாதிரி எழுதி இருக்காப்ல.. ஏண்ணே மதுரைல ரூம் போட்டு யோச்சீங்களோ..

  கதையிலையாது நமக்கு ஒரு மச்சக் கன்னி மடங்குமான்னு பார்த்தா இங்கையும் விட்டுப் போயிருச்சே.. சீக்கிரம் இன்னொரு கத எழுதி சேர்த்து வையுங்கோ... நா ரெம்ப ஜந்தோசப்படுவென் :))

  ReplyDelete
 17. அன்பின் பிரகாஷ் - சீனுவ வச்சு ஒரு கதையா - அரை வரிய வச்சு சீனு எப்படி பதிவு போடுவாருன்னு ஒரு பதிவா - பலே பலே - நல்லாத்தான் இருக்கு - சீனுவின் கற்பனையில் பிரகாஷ் -எப்படி இருக்கும் - சீனு எப்ப வரும் - பதில் எழுத வேண்டாமா - நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. பாவம் சீனு. ஒரு அப்பாவி புள்ள மாட்டிடக்கூடாதே! படுத்தி எடுத்திட வேண்டியது!!

  ReplyDelete
 19. //காலை குளியல் எவ்ளோ சுகம் தெரியுமா...//

  என்னைக்காவது குளிச்சா அப்படித்தான்... :-)

  //சண்டைக்குள் மூக்கை நுழைக்க எண்ணி அங்கே பார்த்தால் போலிஸ் வேன்//

  ஹா ஹா ஹா...

  ReplyDelete