Searching...

Popular Posts

Thursday, September 12, 2013

பதிவர் சந்திப்பில் நான் கண்ட குறைகள் - பகிரங்க கடிதம்

நமது சங்கத்து அடிதாங்கி இடிதாங்கி பதிவர், பதிவர் சந்திப்பு குறித்து ஒரு பகிரங்க மடல் எழுதப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அத்தி பூத்தாற் போல, கள்ளிச் செடியில் அகில் பிறந்தாற் போல  வாசக சிகாமணி ஒருவர், பதிவர் சந்திப்பு குறித்த தனது பார்வையை மடலாக வரைந்து மின்புறா மூலம் அனுப்பியிருந்தார். ஒருவேளை இக்கடிதம் பிரசுரிக்கப்படாது போனால் தன்னுடைய வலைப்பூவில் இதைப் பதிய போவதாக நம்மை மிரட்டினார். 

அவரது பதிவை ஆவண செய்ததில் பதிவர் சந்திப்பில் தான் கண்ட மாபெரும் குறைகளை மடலாக ட்ரா செய்திருந்தார். கும்மிக்குத் தேவை மடல் இல்லை அதன் மூலம் வரும் ஹிட்ஸ் மட்டுமே, சமகால சூழலில் பதிவர் சந்திப்பை குறை கூறி எழுதினால் ஹிட்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த ஹிட்ஸை வைத்து என்னை செய்யப் போகிறோம் என்கிறீர்களா, அண்ணா சாலையை விலைக்கு வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டுள்ளோம். அதனால் வாசகராக சிக்கிய அந்த ஆட்டின் மடலை இங்கயே பிரசுரித்து விட்டோம். 

மடல் உங்கள் பார்வைக்கு 

******

அன்பின் விழாக்குழுவினருக்கு  

பதிவர் சந்திப்பு முடிஞ்சு 15 நாள் ஆக போகுது ஏண்டா இப்போ மடல் எழுதுறே இன்று நீங்கள் கேட்பது புரியுது. ஆணிகள் அதிகமாக புடுங்க வேண்டி இருந்ததால் கொஞ்சம் லேட் ஆகிட்டு .

பகிரங்க கடிதம் :

பதிவர் சந்திப்பில் ஆரம்பம் முதலே பல குறைகள் . முதலில் , எங்க சொந்தக்காரன் வீட்டு விசேஷத்திற்கு போனா கூட பஸ் ஸ்டாப் அல்லது ரயில்வே ஸ்டேஷன் இல் இருந்து வீட்டுக்கு எப்படி வரணும்னு வழி கேட்டா ஆட்டோல வா அல்லது நடந்துவானு தான் சொல்லுவாங்க . ஆனா விழாக்குழுவினரில் ஒருவர் என்னடானா காலை 4 மணிக்கு எழுந்து என்னை கூப்பிட தாம்பரம் வந்து,  அங்க என்னை அழைத்துக் கொள்ள முடியாததால் அங்கிருந்து எக்மோர் வந்து பத்திரமா அழைத்து சென்றார். இது பெரிய குறையில்லையா ?

சொந்தகாரனே இரண்டு வேளைக்கு மேல சோறு போடமாட்டான் . ஆனால் சனிகிழமை தொடங்கியே நல்ல விருந்து வச்சீங்களே இது நியாயமா ? (சதீஷ் நான் காசு குடுக்குறேன் என சொன்னதுக்கு கூட சீனு அதெல்லாம் முடியாது நீங்க எங்க கெஸ்ட் என சொன்னாரே ... இது மாபெரும் பிழை இல்லையா)

கல்யாணத்துக்கு வந்தவங்கள மண்டபத்திலேயே ஒரு ஓரமா கொசு கடியில் படுக்க வைப்பதுதானே நம்ம பண்பாடு நீங்க என்னாடானா நல்ல A.C ரூம் போட்டு கொடுக்கிறிங்க . இதுல ரூம்ல டிவி வேற ....

நாங்க நான்வெஜ் தான் வெட்டுவோம் திங்குறவன் தின்னு , இல்லைனா தண்ணி குடிச்சுட்டு சும்மா இருன்னு சொல்லாம அது என்ன வெஜ் , நான் - வெஜ்னு பிரிச்சு சாப்பாடு . பதிவர்களுக்குள் பிரிவினை உண்டாகுறீங்களா ?

கூட்டம் அதிகம் வந்தா தயிர் சாதம் போட்டு ஆளை காலி பன்றதுதான் நம்ம வழக்கம் ,நீங்க பிரியாணி போடுறிங்க , அதுவும் வெஜ் , நான்-வெஜ்னு, இப்படி போட்டு அந்த வீதியில் உள்ள கடைகாரர்கள் வருமானத்தில் கைய வச்சுடிங்களே இது பெரிய குறையில்லையா ?

எங்க விட்டில் கூட நான் சரியாய் சாப்பிடலைனா போடா இவனேனு சும்மா
இருப்பாங்க நீங்க என்னடானா பிரியாணி போதுமா , இன்னும் வேணுமான்னு
கேட்குறிங்க , என்ன கொடூர செயல் இது ???

கோவிலில் 50 ருபாய்க்கு டியூப் லைட் வாங்கி வச்சவனே தான் பேரை லைட்டே மறைப்பது போல எழுதுறான் . ஆனா நீங்க என்னடானா மேடையில உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளவில்லை. கேட்டா நேரம் பத்தவில்லை என்கிறீர்கள் . எவன் எப்படி போன உங்களுக்கு என்னா நீங்க உங்கள் அருமை பெருமைகளை சொல்லவேண்டியதுதானே .?

ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் கரெண்ட் போற ஊரில் இருந்து வந்துருக்கோம் . எங்களுக்கு வேர்க்கும்னு உங்களை யாரு பெரியபேன் ரெடி பண்ண சொன்னா? நாங்க என்ன எப்போவும் கரண்ட இருக்குற நாடுலையா பொறந்தோம் ?

== இப்படி பல குறைகளை சொல்லலாம் . எனக்கு குறை சொல்லி பழக்கம் இல்லை அதனால இதோட நிறுத்தி கொள்கிறேன்.==

இப்படிக்கு 
ரா 

அன்பு வாசகருக்கு சிறிய வேண்டுகோள் 

உங்கள் கடிதத்தில் பல எழுத்துப் பிழைகள் இருந்தது, இப்படிப்பட்ட இந்த மடலை அப்படியே பப்ளிஷ் செய்தால் அதை எழுதியது சீனு என்றோ அல்லது எங்கள் குரு பட்டிக்ஸ் என்றோ மற்ற கோடானுகோடி வாசகர்கள் தவறாக நினைத்துவிட வாய்ப்புண்டு என்பதை உங்களுக்குக் கூற கடமைப்பட்டுள்ளோம்.

இப்படிக்கு 
கா

20 comments:

 1. இப்படியெல்லாம் கூடவா நடக்கும்.. அநியாயம்... அக்கிரமம்..!!!!

  அண்ணாத்த எழுதின லெட்டர் கரெக்ட்தான்.. இப்படி அநியாய நடந்துருக்கீங்களே...

  :-d :d
  :-d :d
  :-d :d
  :-d :d

  ReplyDelete
 2. எதிர்மறை விமர்சனம். யாருப்பா எழுதுனது. முகவரி கொடுத்தால் நக்கீரனின் கவிதை தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

  ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.

  ReplyDelete
  Replies
  1. //நக்கீரனின் கவிதை தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.//

   அண்ணன் அவர்கள் தனது மகா தியானத்தை தொடர வேண்டும் என்று சங்கம் விரும்புகிறது...

   ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.

   Delete
  2. ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பாஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா

   Delete
  3. நமது ஆசிரமத்தில் எவ்வளவு சாமியார்கள், வருக மகான்களே வருக.

   ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.

   Delete
 3. இப்படி ஒரு கடிதம் எழுதிய அந்த ரசிக கலா புருஷருக்கு என் நன்றிகளும் வணக்கங்களும்!

  ReplyDelete
  Replies
  1. அந்த கலா புருஷர் யார் என்று சங்கம் தேடி வருகிறது.. அவருக்கு விரைவில் கட்டவுட் வைக்க வேண்டும்... உங்களுக்கு யாருன்னு தெரியுமா

   Delete
 4. இப்படி பல குறைகளை சொல்லலாம் . எனக்கு குறை சொல்லி பழக்கம் இல்லை அதனால இதோட நிறுத்தி கொள்கிறேன்//

  மேல சொன்னது என்னவாம் பாஸ் ... சந்திப்புக்கு வந்து மூச்சு விடாம பிரியாணிய மூக்கு வரைக்கும் மொக்கிட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் குறை சொல்ற அரை புத்திய விடுமாறு உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. தோழர் அரசன்

   விருந்தோம்பல் தமிழர் பண்பாடு... நாம் அதை சரியாக செய்தோம்.. சிலரால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது புரிதல் வரும்போது அவர்களும் சொல்வார்கள் அரே ஓ சம்பா...

   கோபம் ஆன்மீகத்திற்கு சத்துரு

   நீங்கள் மகாதியானத்திற்கு செல்ல வேண்டிய அவசர நிலையில் இருக்கிறீர்கள்.. உடனடியாக அண்ணன் ஆருராரைத் தொடர்பு கொள்ளவும்

   அரே ஓ சம்பா ... ஜெய் போலோநாத்

   Delete
 5. குறை சொல்லும் உம்மையெல்லாம் அந்த மண்டபத்தை மூவாயிரம் தபா சுத்த வைக்கனும்யா ... என்னா லொள்ளு ?

  ReplyDelete
  Replies
  1. அரசவைக் கவிஞரை மறந்து விட்டீரே.. நமது போர்ப்படைத் தளபதி அல்லவா அவர்.. கவிஞரே எங்கிருந்தாலும் வாரும்...

   Delete
 6. இந்த குறைகளுக்கு விழா குழுவினர் பதிலளிப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை...

  ReplyDelete
 7. இப்படியெல்லாம் செய்தால்
  குறைசொல்லாமல் எப்படி இருக்க முடியும்

  ReplyDelete
 8. NO...USE....

  இப்ப..என்ன...பண்ணுவீங்க...
  இப்ப ...என்ன...பண்ணுவீங்க....??????

  ReplyDelete
 9. ஆமா , நீங்களும் உங்க குருப்பு ஆள்களும் யாருப்பா?என்ன்வோ எழுதுரிங்கோ ,பேசரிங்கோ திடீர்னு அடிசிகிரீங்கோ ,பாசத்தை பொழி பொழின்னு பொழியிரிங்கோ என் ரசிகர்களை மெண்டல் ஆக்க எதாவது உள்குத்து வேலை செய்யிறிங்களா? நான் மட்டும் இத்தாலிக்கு போய் act கொடுத்து இருந்தேன்னு வச்சிக்கோ இந்நேரம் எனக்கு முப்பத்தஞ்சி பார் இறா ரத்னா அவார்டு கொடுத்து இருப்பாங்கோ.நல்லா இருங்கோ இப்படிக்கு உங்க பிரியாணி உண்டமணி .என் ரசிகர்களை மெண்டல் ஆக்கிடதிங்கோ ,நான் எவ்வளவு பூ வேணுமின்னாலும் மிதிக்கிறேன்

  ReplyDelete
 10. நான் முன்னமே சொன்னதுதான்.. ரா அவர்கள் சொல்ல மறந்துட்டார். விழாவில் கரும்பு ஜூஸ் விநியோகிக்கப் படவில்லை..

  - இப்படிக்கு, விழாவை நம்பி முன்னால் கடை போட்டு ஏமாந்த கரும்பு ஜூஸ் வியாபாரி

  ReplyDelete