Searching...

Popular Posts

Monday, October 14, 2013

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு - ஹாரிபாட்டர்

11:35 PM


பெயர் - ஹாரிபாட்டர் 

நிஜப் பெயர் - வாயில் நுழையாத ஒரு அழகிய பெயர் 

தொழில் - படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாத்துவது 

உபதொழில் - தொடர்ந்து எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு வலையுலகை ஏமாத்துவது 

பொழுதுபோக்கு - புதிய புதிய தளங்களைத் திறப்பது, பின் சத்தமில்லாமல் மூடிவிடுவது    

கவனிக்கபட்ட பதிவுகள் : சன் தொலைக்காட்சியே நிறுத்திவிட்ட டாப் டென் மூவிஸை வாராவாரம் தொடர்ந்து வெளியிட்டது.

கலாயிக்கபட்ட பதிவுகள் : திரைவிமர்சனம் என்ற பெயரில் மொக்கை படங்களுக்கும் மார்க்கை வாரி இறைத்தது.

வரவேற்பு பெற்ற பதிவுகள் : பதிவுலக ஜாம்பவான்களை பேட்டி எடுத்து தனது தளத்தில் வெளியிட்டது 

வரவேற்பு பெறாத பதிவுகள் : பிரபல பதிவர்களின் பேட்டிகள் சாமன்ய பதிவர்களையும் சென்றடையாமல் போனது        

தேர்தல் களம் : அவ்வபோது தேர்தல் நடத்தி பதிவுலகையே ஓட்டு போடச் செய்வது, சமீபத்தில் இவர் நடத்திய உங்களைக் கவர்ந்த சிறந்த சினிமா விமர்சகர் கூட பெரும் வரவேற்பு பெற்றது. 

வளர்ச்சி - குறைந்த காலகட்டத்தில் பதிவுலகம் முழுமையும் பிரபலம் ஆனது 

ஆசை - அவ்வபோது சிறுகதை எழுத வேண்டும் என்பது  

நீண்டநாள் ஆசை - ஆரம்பித்த தொடர்கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று நினைப்பது 

பதிவுலக சாதனை -  யுத்தம் ஆரம்பம் என்ற தலைப்பில் பதிவர்களைக் கொண்டே ஒரு தொடர் கதை எழுதச் செய்தது 

பெருங்கவலை - ஆரம்பித்த யுத்தத்தை முடிக்க முடியாமல் போனது    

பலம் - அத்தனை பதிவர்களின் பதிவையும் படிப்பது 

பலவீனம் - தொழில்  

பின்குறிப்பு 

பதிவர் ராஜாபாட்டை ராஜா புதிதாக தொடங்கிய ஆங்கில வலைப்பூவைப் படித்ததில் இருந்து இவரைக் காணவில்லை. காணமல் போன அன்று இவர் என்ன கலர் உடை அணிந்திருந்தார் என்று தெரியவில்லை. 

இவர் ஒரு தீவிர ரஜினி ரசிகர்  சுஜாதா ரசிகர், கோச்சடையான் டிக்கெட்டையோ அல்லது எதாவது சுஜாதா புத்தகத்தையோ கையில் வைத்துக் கொண்டே தேடுங்கள் நிச்சயம் இவரை கண்டுபிடித்து விடலாம். பாசித்தும், வசுவும் அயல்நாட்டில் தேடும் பணியை சிறப்பாக செய்து வருவதாக நம்பப்படுகிறது.   இவரை கண்டுபிடித்துத் தருவோருக்கு காமடி கும்மி சார்பில் தக்க சன்மானம் வழங்கப்படும், தீவிரவாதியும், அடியாளும் தங்கள் கைகளால் உங்களுக்கு தக்க சன்மானம் வழங்குவார்கள்     

இவை தவிர்த்து அரசவைக் கவிஞர்கள் வெளியிட்ட கவிதைப் புத்தகங்களின் நூறு காப்பிகள் வழங்கப்படும், மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.செல்வமே எங்கேடா போனாய் கண்ணா, என் அருமைக் காதலா, உன்னைக்  காணாமல் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, எங்கே ஒளிந்து கொண்டிருந்தாலும் சீக்கிரம் வந்துடுங்க என் அத்தான் ...

இப்படிக்கு 
உங்களை உருகி உருகிகாதலிக்கும் 
முனிம்மா         

24 comments:

 1. கார்த்திக் சோமலிங்கா பிளேடு பீடியா பற்றிய தகவல்கள் உண்டா?

  ReplyDelete
 2. காணாமல் போனவர் அறிவிப்பு சூப்பர்.

  ReplyDelete
 3. இன்னும் ஒரு பட்டியல் அனுப்புகிறேன்... (நான் காணாமல் போவதற்குள் - ஹிஹி...)

  ReplyDelete
 4. யாருப்பா அந்த ராஜபாட்டை ராஜா. . . அவன் மட்டும் என் கையில் மாட்டினான், அவ்வளவுதான். . .

  ReplyDelete
  Replies
  1. உங்க கையில் சத்தியமா கிடைக்க மாட்டார் சாரே

   Delete
 5. கவலைபடாதே முனிமா, ஹாரி போனா போகட்டும் எங்க தங்கம் , சென்னை சிங்கம், கண்ணாடி மச்சான் சீனு உனக்கு வாழ்வு கொடுப்பார். இது தீவிரவாதி மற்றும் அரசன் மீது சத்தியம்.

  ReplyDelete
  Replies
  1. வாத்யாரே எத்தனை நாள் கோபம் இது ... சீனு முனீமா வாழ்க்க கொடுத்தால் கொல்லங்குடி குருவம்மா கதி என்னாகிறது ...

   Delete
  2. :)) :)) :)) :)) :)) :)) :)) :))

   Delete
 6. வணக்கம்
  காணாமல் போனவர்கள் பட்டியல் தயாரித்த விதம் நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. மச்சி கலக்கல்யா ... இதுக்கும் பதில் சொல்லாத ஹாரியை வன்மையாக கண்டிக்கிறேன்

  ReplyDelete
 8. தொழிலும் , பொழுதுபோக்கும் தான் பட்டாசு ...

  ReplyDelete
  Replies
  1. ஒரு மனிஷன காணோமேன்னு அந்த புள்ள ஒரு பாசத்துல எழுதினா, இவரு எத கவனிக்குராறு பாரு..

   Delete
 9. ராஜா பிளாக் போனதுக்கே இந்த கதின்னா!? என் பிளாக் வந்திருந்தா!?

  ReplyDelete
 10. பயபுள்ள பாராட்டுதா இல்லைனா?? ஓட்டுதா??

  இருந்தாலும் சும்மாக்காச்சும் ஒரு கமென்ட போட்டு வைச்சுடுவோம்

  ReplyDelete
 11. //நிஜப் பெயர் - வாயில் நுழையாத ஒரு அழகிய பெயர் //

  வாழை பழம்னு வேணா மாத்தி வைசுக்கவா??

  //தொழில் - படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாத்துவது //

  ஹி ஹி வானா சூனாவோட நண்பன்ல.. அப்படி தான்..

  //உபதொழில் - தொடர்ந்து எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு வலையுலகை ஏமாத்துவது //

  கீஞ்சுது..

  //பொழுதுபோக்கு - புதிய புதிய தளங்களைத் திறப்பது, பின் சத்தமில்லாமல் மூடிவிடுவது //

  அசிங்கப்பட்டான் ஹாரி பாட்டர்

  //கவனிக்கபட்ட பதிவுகள் : சன் தொலைக்காட்சியே நிறுத்திவிட்ட டாப் டென் மூவிஸை வாராவாரம் தொடர்ந்து வெளியிட்டது.//

  ஹி ஹி.. இந்த பதிவுகளையும் தூக்கியாச்சு மச்சி

  //கலாயிக்கபட்ட பதிவுகள் : திரைவிமர்சனம் என்ற பெயரில் மொக்கை படங்களுக்கும் மார்க்கை வாரி இறைத்தது.//

  8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-) 8-)

  ReplyDelete
 12. //வரவேற்பு பெற்ற பதிவுகள் : பதிவுலக ஜாம்பவான்களை பேட்டி எடுத்து தனது தளத்தில் வெளியிட்டது //

  என்னதான் கோபமா சொன்னாலும் சிபி அண்ணா மேல உனக்கு ஒரு பாசம் தாம்யா..

  //வரவேற்பு பெறாத பதிவுகள் : பிரபல பதிவர்களின் பேட்டிகள் சாமன்ய பதிவர்களையும் சென்றடையாமல் போனது//

  யாருயாது சாமானிய பதிவர்கள்??

  //வளர்ச்சி - குறைந்த காலகட்டத்தில் பதிவுலகம் முழுமையும் பிரபலம் ஆனது //

  தம்பி மிகையா சொல்லுது (READ WITH "சிவாஜி" சுமன்'S SLANG )

  //நீண்டநாள் ஆசை - ஆரம்பித்த தொடர்கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று நினைப்பது //

  அட ஆமால்ல ஒரு கதை ஆரம்பிச்சேன்ல

  //பெருங்கவலை - ஆரம்பித்த யுத்தத்தை முடிக்க முடியாமல் போனது //

  தூசு தட்டனும் மச்சி.. யுத்தம் ஆரம்பிச்ச போது போலந்து கட்டிகின்னு ஓடுன ஹாலிவூட், JZ , குமரன் தான்.. இன்னிக்கும் தேட்ரன் பயபுல்லைங்கள காணவே இல்லப்பா..

  ReplyDelete
 13. இருந்தாலும் பதிவு அருமை.. பதிவாக்கி தந்தமைக்கு நன்றி..

  இன்று என் தளத்தில்

  onrumillai.blogspot.com

  ReplyDelete
 14. யாராவது காணாம போனா இப்படித்தான் வரவழைக்கணும்.... ம்ம்ம்ம்... புரிஞ்சது....

  ReplyDelete
 15. இது மாதிரி போஸ்ட் போட்டா தான் பய புள்ளை வெளிய வருது... :):):)

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

   Delete
 16. ஹா..ஹா.. செம நக்கலு... இதுதான் செல்ஃப் கலாய்யா ...

  ReplyDelete

 17. அடடே இது சீனுவின் கைவண்ணமா.... சூப்பரு...

  ReplyDelete
 18. அப்பறமும் ஹாரியிடம் இருந்து ஒரு பதிவு கூட வந்தமாதிரி தெரியலையே

  ReplyDelete