Searching...

Popular Posts

Thursday, November 28, 2013

தீவிரவாதியும், கூடவே தலைவா வும் ....

தொலைக்காட்சியில் வந்து தொல்லை தரும் தொகுப்பாள, தொகுப்பாளினிகளிடம் நமது சங்க விழுதுகள் சிலர் சிக்கினால் எப்படி இருக்கும் என்ற யோசனையை உங்களிடம் அப்படியே விபரீதமாக வழங்குகிறேன், பிடிச்சா படிங்க, பிடிக்கலைன்னாலும் படிங்க... நீங்க படிச்சா மட்டும் போதும் ... படிச்சா மட்டும் போதும் ....

விழுது 1: 

இருக்குற நாலைஞ்சு சிம்கார்டுகளை ஒவ்வொன்றாக கழட்டி மாற்றி மாற்றி பார்த்தும் இணைய இணைப்பு கிடைக்கவில்லையே என்று வெம்மி பொங்கி கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு அழைப்பு, எடுத்து ஏதும் பேசாமல் காதில் வைத்திருந்தார்(உஷாராம்) எதிர் முனையில் பெண் குரலை கேட்டதும் கொஞ்சம் உற்சாகம் கரை புரள ஆரம்பிக்கும் வேளையில் வீட்டம்மா கையில் பூரிக்கட்டையோடு நின்றதை பார்த்து அப்படியே பம்மி பேச ஆரம்பிக்கிறார்!

தொ.பாளினி: வணக்கம் சார், உங்க பேர் என்ன?

தீ. வாதி: ஏம்மா பேரே தெரியாமத்தான் போன் செய்தியா?

தொ.பாளினி: உங்க வாய்ஸ் ஸ்வீட் ஆ இருக்கு ...

தீ. வாதி:  (யார் பெத்த புள்ளையோ ?) அரசியில்லாம ஓடும் கிரைண்டர போல கட கடன்னு இருக்கு,  இதுதான் ஸ்வீட் ஆ... பொய் சொல்றதும் தான் சொல்ற கொஞ்சம் பொருத்தமா சொல்லேன் ..

 தொ.பாளினி: சார் .. செம காமெடியா பேசுறிங்க , சரி உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க , நீங்க என்ன பண்றீங்க ...?

தீ. வாதி: எம் பொழப்ப பாக்க விடுதியா? 30 நாளில் பொய் சொல்வது எப்படின்னு ஒரு புத்தகம் வாங்கிட்டு படிக்க முடியாம தெனருதேன் .. இதுல காமெடி பண்ணிக்கிட்டு ...நானும் 

தொ.பாளினி: சார் உங்களுக்கு காமெடி புடிக்குமா ? சாங் புடிக்குமா ? சொன்னீங்கன்னா உங்களுக்காக போடுவோம் ...

தீ. வாதி: இப்ப உன்னைய போட போறேன் (துப்பாக்கியல சுடுவேன்னு சொல்றது ) , ஒழுங்கா போனை வை ... 

ஒரு வழியா போன் கட் ஆக , இது நெசமா புள்ளைதானா , மெட்ராஸ் ல இருக்கும் கண்ணாடி மச்சான் பாத்த சோலியா ? ன்னு மண்டை குழம்பி போக தூங்கி போனார் நம்ம தீவிரவாதி ....

விழுது - 2:

சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய தலைவன் ஹாரி, தன் கனவில் தானே ?புலம்பியதை அப்படியே கண் முன் நிறுத்துகிறார் தொலைகாட்சி புகழ் வாத்தி திரு, ராஜா அவர்கள்.

நான் பள்ளிக்கூடத்துல பசங்களுக்கு பாடம் நடத்திகிட்டு இருக்கையில ..... (யோவ் தலைவனை பத்தி சொல்றேன்னு சொல்லிப்பிட்டு நான் பாடம் எடுக்கையில , பள்ளிக்கூடம் போகயிலைன்னு கதை அளந்துகிட்டு இருக்கேன்னு தீவிரவாதி கடுப்பாக ...) அமைதியே மறு உருவமாய் கொண்ட வாத்தி, இருங்க எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டாமா ? அப்படின்னு ஒரு வழியா ஆரம்பித்தார் ....

தலைவன் ஹாரி பொறந்த நாளை இம்முறை வித்தியாசமாக முன்னூறு கழுதைகள் ச்சீ கன்னிகள் கொண்டாடி மகிழ்ந்தது தான் சிறப்பம்சமாம். முத நாள் இரவு பனிரெண்டு மணிக்கு "எம் மேல பூசாதிங்க பூசாதிங்கன்னு " பயபுள்ள கட்டிலிலிருந்து கிழே விழுந்தது கூட தெரியாம கதறிருக்கு! பக்கத்து வீட்டு பல்லு போன பாட்டி வந்து என்னன்னு கேக்கையில தான் கனவுல , கனவுப்பன்னி ச்சீ கனவுக்கன்னி மூஞ்சில கேக் பூசிச்சாம் .. அதான் இப்படி கதறி இருக்கு பக்கி ...

அதை கேட்ட வசு முகம் பிரைட்டாகி , மச்சி எப்படி மச்சி இருந்திச்சி ... அழகா இருந்திச்சா ? என்று கேட்டு கடுப்ப கிளப்ப ஹாரி யாரும் படிக்காத தொடர்கதை எழுத கிளம்பி போய்ட்டார் .... 


டிஸ்கி : இதுல காமெடின்னு எதாவது ஒன்னு இருந்தா சத்தியமா நீங்க சிரிச்சிக்கலாம் ... இதெல்லாம் காமெடியான்னு யாரவது கேட்டிங்கன்னா , அவர்களுக்கு கண்ணாடி மச்சானின் புகைப்படம் அனுப்பி வைக்கப்படும் ....

9 comments:

 1. கண்ணாடி மச்சான்ஸ் சிக்கலையோ ...? :)

  ReplyDelete
 2. தயவு செய்து எனக்கு கண்ணாடி மச்சானின் புகைப்படம் அனுப்பிவைக்கவும்.... ;-)

  ReplyDelete
 3. நான் சிரிச்சேன் சிரிச்சேன் சிரிச்சேன் ..கடைசில சொன்ன கண்ணாடி மச்சான் படத்த அனுப்புறேன்னு சொன்ன டைமிங் காமெடிக்கும் அப்புறம் என்னைய நினைத்து சிரிச்சேன்...இங்க போட்டோ கமெண்ட் போட முடியாதா?

  ReplyDelete
 4. கண்ணாடி மச்சானின் போட்டோ பார்சல் அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete