Searching...

Popular Posts

Wednesday, March 19, 2014

நரை சேரா தலை - முழங்காலுக்கு சற்றும் கீழே - தூசி

1:35 AM

 

முழங்காலுக்கு சற்றும் கீழே...  

 

முழங்காலுக்கு சற்றும் கீழே 
  சொறி சிரங்கு அவளுக்கு!

அவசரமோ, அழகியலோ?
பேண்டேஜ், 
  கூட இல்லாமல் இருப்பாள்!

நெருங்கி நிற்கும்,
பேருந்து பயணங்களில்,  
அருகில் கால் உரச
நீர் தெளித்து கலைத்திருக்கின்றன 
இரக்கமற்ற சொறி சிரங்கு!

அவளும் காட்டியதில்லை,
என்னையும் 
  காண அனுமதிப்பதில்லை  
அவளின் காலில் அவ்ளோ பெரிய ஆணிகள்!

அவள் காலை காட்ட, 
நான் மேலே பார்க்க, 
சொரி சிரங்கு சிகிச்சைக்காய்
சேர்க்க வேண்டி இருந்தது
"காசு"
தூசி #1 

நடந்து ஒரு 10 வருடங்களுக்கு மேலே இருக்கலாம். ஸ்கூலில் யார் பையிலும் இருக்கிற பேனைகளை ஆட்டையை போடுவது வழக்கம். ஆட்டையை போட்ட அடுத்த கணமே மதில் பாய்வதும் மிகவும் பிடித்தது. ஆறடி மதில் பாயும் போது நமது கால்கள் பூமியில் இருந்து 6 அடி உயரத்தில் இருப்பது அருமை அல்லவா??

ஆட்டையை போட்டு விட்டு நடப்பது தான் பிரச்சினை. எப்படி இலாவகமாக நடந்தாலும் "கிளுக்", "கிளுக்" என்று சத்தம் போட்டு காட்டி கொடுத்துவிடும் கால் சட்டையின் இரண்டு பக்க பைகளில் கனத்து தொங்கும் பேனைகள்! பசங்ககிட்ட சுடுவதை ஒரு பக்கமும், பொண்ணுககிட்ட  சுடுவதை இன்னொரு பக்கமுமாய் வகைப்படுத்தி தனித்திருக்கும். 

  இங்க் வைத்த பேனாவின் மீது தீராக்காதல், கிறங்கடிக்கும் அதன் அளவும், அழகும்! எத்தனை வேளை கால் சட்டைக்குள்ளே இங்கை சிந்தி வெள்ளை கால்சட்டையை நீலமாக்கி இருக்கிறது! காணும் எல்லாப் பெண்களும் காலையில் ஒரு நிற கால் சட்டையிலும், மாலையில் இன்னொரு நிற கால்சட்டையிலும் பார்க்கும் போது ஒரு வித ஈர்ப்பு வருமல்லவா? என் வருகையை இதன் சத்தம் வைத்தே கண்டு பிடித்துவிடுவாள் முத்தம்மாள் பாட்டி! கையை கழுவிட்டு வாடான்னு சொல்லி திட்டிக்கொண்டே "உரி" யிலிருக்கும் சோத்துப் பானைகளை சரி சமமான வேக விகிதத்தில் எனது மண்டை மீது குறி வைத்து எறிவார்.. 

சிலவை கபாலத்தை நோக்கி கவலையில்லாமல் வரும், விலகி விட நினைத்தாலும் சில நேரங்களில் ஒன்றை ஒன்று முந்தி கொள்ளும்.. சில நேரங்களில் வீங்கி விடும்.. சில நேரங்களில் இரத்தமும் வரும்.. 

தூசி #2 

தகர டப்பாவினால் தலை தெறிக்க அடி வாங்கும் முன்பே தகரத்தின் மீதான சிநேகம் மிக அதிகம். பக்கத்து வீட்டு அண்ணன் ஒருவர் வைத்திருந்த, பழைய கறல் பிடித்த தகரம் ஒன்றை கண்டு முகம் மலர்ந்த நான் நமக்கொன்று அது மாதிரி கிடைக்காதா என்று ஏங்குமளவிற்கு செய்த வஸ்து அது!

எங்கண்ணே, இது கிடைச்சது என கேட்டு, அந்த புத்திசாலி அண்ணன் பக்கத்துக்கு தெருவில் இருக்கும் பழைய கழிவறையை காட்டி கதவை காலால் உதைத்தால் தகரம் கொட்டும் என்று சொல்ல நானும் போய் கதவை காலால் உதைக்க உள்ளே நாலு நாளாய் ஓயாமல் ஆயாய் போய் கொண்டு இருந்த தாத்தா ரெம்ப கேவலாமாய் அதுவும் ரொம்ப பாவமாய் பார்த்து வைத்தார்.. 

"மனுஷன் நிம்மதியாய் இங்கன வந்து உட்காருறது கூட உனக்கு பிடிக்கலையா ராசா" என்று அவர் அந்நிலையில் இருந்து கேட்டது இன்றும் கூட என் காதில் தூசியாய்.. 


குருட்டு முத்தம் (karumam Devathai #01)குருட்டு கிழவிக்கு
பசி அதிகமென்று 
ஊரில் சொல்ல கேட்டிருக்கிறேன்,
அதையெல்லாம் பொய்யென்றது,

உன் சுருட்டு நாத்தம்...

கஞ்சா கொய்ய
காட்டுக்கு சென்றவள் 
வீடு திரும்புகிறாள்.  
கையில் விரல்களுடனும் , 
கன்னத்தில் 

சொக்குடனும்!

உந்தனழகை! (karumam Devathai # 02) 


எல்லா மழையும் 
ஒன்றாய் இருப்பதில்லை,
அதுபோல தான் 
ஸ்ரேயா நடித்த மழையும்,
த்ரிஷா நடித்த மழையும்!

சன்னலை திறந்து வைத்து
உறங்காதே!
கதவை திற 
காற்று வரட்டும்!

 -----------------------------------------------------------------------------------------------------------
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்கள் அண்ணன், கருமை நிற கண்ணன், பாசக்கார தம்பி , ரோசக்கார காதலன், எதிர்கால இலக்கிய பேரொளி, கவிஞர் மற்றும் எழுத்தாளர் அண்ணன் அரசனை வாழ்த்துவதில் சங்கம் பெருமை கொள்கிறது. 
பி.கு - பதிவுக்கும் அண்ணனுக்கும் சம்மந்தம் இல்லாதது போல தோன்றினால் சங்கம் பொறுப்பில்லை. 

11 comments:

 1. கலக்கிட்ட ஹாரி...செம்ம காமெடி காமெடி ....:))

  ReplyDelete
 2. எனக்கு ஹாரி யாருன்னே தெரியாதுங்க...பின்ன இப்படி ஓட்டி நமக்கும் ஒரு பிறந்த நாள் வாழ்த்து பாடிட்டா..... நல்லா சிரிச்(ரசிச்)சேன்....

  ReplyDelete
  Replies
  1. நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா.. அக்காவோட பெர்த் டேயையும் பிரமாத படுத்திரலாம்..

   Delete
 3. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அரசன்....

  ReplyDelete
 4. ஓ...ஒரு பொறந்த நாளுக்கு...பதிவாவே போட்டுடீங்களா !

  ReplyDelete
 5. //இரத்தமும் // அங்க நிக்காய்ன்யா என் தலைவன் (h) (h) (h) (h) (h)

  ReplyDelete