Searching...

Popular Posts

Wednesday, March 5, 2014

டெலி ஷாப்பிங் - ஏடாகூடங்கள்.... ( Tele - Shopping )

வணக்கம் வலையுலகப் பெருமக்கள்களே!


சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கடையை  இனி மாதம் ஒரு முறையாவது திறக்கலாம் என்று எண்ணம், எம்பெருமான் முருகன் மனசு வைக்கணும்! பெயரில் இருக்கும் அளவிற்கு கூட இங்கு காமெடி? பதிவுகள் இல்லையென்றாலும் ஏதோ தானோவென்று ஓ(ட்)டிக்கொண்டிருந்த நாங்கள் சற்று சமூகம் சார்ந்தும் நோக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்! (கட்ட துரைகளுக்கு கட்டம் சரியில்லைன்னு சொல்வது காதுல விழுது) வழமையாய் உங்களிடம் வேண்டுவது தங்களின் மேலான ஆதரவை மட்டுமே!





அவசரமாய் சுழன்று கொண்டிருக்கும் இன்றைய பூமிப் பந்தில் நிறைய மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் "வியாபாரம்" என்ற ஒன்று அசுர வளர்ச்சி கண்டு வருகிறது! அதிலும் குறிப்பாக "டெலி-ஷாப்பிங்". முன்பெல்லாம் ஒரு இலவச எண்ணை கொடுத்து அதில் அழைத்தால் போதும் வீடு தேடி வரும் எங்களின் பொருள் என்று வாய் கிழிய கூவிக்கொண்டிருந்த வெள்ளைக்காரி, வெள்ளைக்காரனையும் சமீப காலமாக காணோம்! மாற்றம் வேண்டுமல்லவா ?

திடீர்னு பார்த்தா நம்ம ஊரு அண்ணாச்சி, அயல்நாட்டுக்காரனுக்காக அடி வயிறு குலுங்க குலுங்க கூவிக் கொண்டிருக்கிறார்! (இங்க தான் நாம வால்மார்ட்டை எதிர்ப்பதை மனசில் வைத்துக்கொள்ளவேண்டும்) ஒரே ஒரு டேபுள் தாம்யா, 18 வகையான பயன்பாட்டினை கொண்டது என்று, படிக்கலாம், எழுதலாம்,  நறுக்கலாம், உண்ணலாம் என்று ஏகப்பட்ட புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார். 

இவிங்க சொல்ற பயன்பாடுகள் அனைத்துமே சாதரணமாக அன்றாடம் நாம் செய்யும் அன்றாட/அவசிய செயல்கள் தான். இதில் சொகுசு என்ன வேண்டி கெடக்கு? சோறு திங்க வலிக்குதுன்னா என்ன #@:+=க்கு சாப்பிடனுங்கறேன்! முதியோர்களால் முடியாது என்று சப்பை கட்டு வேறு! தெரியாமத்தான் கேக்குறேன் முப்பது வயசை எவன்யா முதியோர்கள் லிஸ்டில் சேர்த்தது ?  இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதே அவனுங்க தான் என்பதை உணர மறுக்கும் சோம்பேறி மக்களை வைத்துக்கொண்டு என்னைக்கு நாம முன்னேறுவது ...?

மிஸ்டு கால் கொடுத்தால் போதும் என்று சொல்வதில் பெரிய நுண்ணரசியலே ஒளிந்திருக்கிறது! ஒத்த ரூவாய்க்கு போன் பக்க வக்கில்லாதவன் எப்படி சில ஆயிரம் மதிப்புள்ள பொருளை வாங்குவான் என்று  யோசிக்கிறதில்லை என நண்பர் ஒருத்தர் ஏளனமாய் சொன்னார். சில ஆயிரம் மதிப்புள்ள பொருளை வாங்குபவனுக்கு ஒரு ரூபாய்க்கு கால் பண்ண தகுதி இருக்காதா? என்று ஏன் அவன் யோசிக்கவில்லை என்று நான் கேட்டேன்! மொத்தத்தில் எலி பொறிக்குள் இருக்கும் வடை மட்டுமே நம் கண்ணுக்கு பிரதானமாக தெரிகிறது, சுற்றி இருக்கும் கண்ணி கண்ணுக்கு தெரிவதில்லை, தெரியப் போவதுமில்லை! (இங்கு இலவசத்துக்கும், விலையில்லா பொருளுக்கும் முதல்வரை தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்)   

அவனுக்கு நம்மை பற்றியும், நம்மின் கவர்ச்சி மோகம் பற்றியும் துல்லியமாய் தெரிந்து வைத்திருப்பதினால் எப்படி கொள்ளை அடிக்க முடியுமோ ? அப்படி திட்டம் போட்டு கொள்ளை அடிக்கிறான்! அதுக்கு நம்ம ஊரு நடிகனுங்க கூஜா தூக்கி வயிறு கழுவுவது தான் கண்றாவியாக இருக்கிறது. அடிக்கடி வந்து தொலையும் அந்த விளம்பரத்துல வரையலாம்னு சொல்லி உருண்டையா ஒரு பாப்பா படம் வரையுற மாதிரி காட்டுறான், நாமளும் நம்ம புள்ளை வலிக்காம வரையட்டுமே!  என்று வாங்கி கொடுத்து அகமகிழும் நாம் தான் நான்கு கிலோ மீட்டர் நடந்து போய் படித்தோம் என்பதை எளிதில் மறந்து விடுகிறோம். இப்படி எல்லாத்துக்குமே சொகுசாக உடலை பழக்கி விட்டால் முப்பது வயசுல மூட்டு வலி வராம வேற என்ன வரும் ?

ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும் நாம், எளிதில் கிடைக்கிறதே என்று வாங்கி மனசையும், உடலையும் பாழாக்கி கொள்வது ஒருபக்கம் இருந்தாலும், உள்ளூர் பொருளாதாரங்களை, அதை நம்பி தினசரி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் குடும்பங்களை நசுக்கி கொண்டிருக்கிறோம். இதன் விளைவுகள் எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ண போகிறதோ ? என்று எண்ணி பார்த்தால் மூச்சு திணறுகிறது. மீண்டும் ஒரு அடிமை வாழ்வுக்கு நாம் நம்மை தயார் படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது! 

நான் ஸ்டிக் வந்ததிலிருந்து, மண் சட்டி, நம்மூர் பாத்திரப் பொருட்கள் அனைத்தும் முகவரி இழக்க தொடங்கவிட்டது! அதை சார்ந்த தொழிலாளர்களின் நிலை ? இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்! நடிப்பவன் நடித்துக் கொண்டு தான் இருப்பான், நாம் ஏன் ஏமாற வேண்டும்! உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொண்டு, பிறகு உலகப் பொருளாதாரம் நோக்கி நகரலாம்! ஏமாற்றுவது குற்றமல்ல, ஏமாறுவது தான் குற்றம் என்கிற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம்!
   

11 comments:

 1. காமெடின்னு பேர் வச்சுட்டு இப்படி சீரியஸ் பதிவு போடலாமா ? சங்க சட்டதிட்டம் இதுக்கு ஒத்துவருமா ?

  ReplyDelete
 2. நீங்கலாம் சமூகத்தைத் திருத்த கிளம்பிட்டா அப்புறம் எங்களை யார் சிரிக்க வைப்பாங்க!?

  ReplyDelete
 3. ம்ஹூம்... இப்போதெல்லாம் எல்லாமே மிஸ்டு கால்.... எருவாமேட்டின் வாங்குவது முதல் புரூ காபி விளம்பரம் வரை எல்லாமே அதான்..

  ReplyDelete
 4. ரொம்ப சீரியஸ் ஆயிடுச்சே..

  ReplyDelete
 5. என்னையா ராசா.. காமெடி கும்மிய சீரியஸ் கும்மி ஆக்கிடீறு.. இருந்தாலும் அருமையான பதிவு ராசா.. ரொம்ப நல்ல இருந்தது.. வால்மார்ட்ல இருந்து வால் ல மாட்டியிருக்க டிவி வரைக்கும் உங்கள கடுப்பு ஏத்தி இருக்கு..

  //ஏமாற்றுவது குற்றமல்ல, ஏமாறுவது தான் குற்றம் என்கிற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம்!// அட அட அட

  ம்ம்ம்ம் அடிகடி கடையை தொறக்கவும் :-)

  ReplyDelete
  Replies
  1. //ம்ம்ம்ம் அடிகடி கடையை தொறக்கவும்//

   அப்போ தம்பி நீரு

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. சேலை வாங்க நூறு கடை ஏறி இறங்கி .துணியை தொட்டும் ,நக்கியும் பார்த்து வாங்குபவர்கள் எப்படி tv ல் காட்டுவதை நம்பி வாங்குகிறார்கள் என்றுதான் புரியவில்லை !
  த ம 8

  ReplyDelete
 8. ஆனாலும் பதிவு அருமை

  ReplyDelete
 9. பூனைக்கு மணி கட்டும் எலிகளாய் இனி காமெடி கும்மி களை கட்டட்டும் .நல்ல பதிவு அரசன் .இதன் தொடர்ச்சியா நானும் எழுதி இட கிளம்புறேன் இன்சா அல்லா இரு நாட்களில் எழுதி போடுறன்

  ReplyDelete
 10. அண்ணாச்சி.. எப்பேர்ப்பட்ட பொழுதுபோக்கு சேவையை இப்டி உதாசினப்படுத்திட்டீங்களே...

  பார்லி


  டீ குடித்த உச்சத்திலிருந்த நண்பனின் மொபைலை வாங்கி டேபில் மேட்டுக்கு மிஸ்டு கால் கொடுத்தேன்.. அட.. ஒரு நிமிடத்தில் பதில் அழைப்பு.. அடுத்த அரை மணி நேர.. அட அட அடா.. சுகா....னுபவம்..

  டேபில்மேட்தான் என்றில்லை.. அமேசான் காட்டு எர்வாமேட்டினுக்கும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்கினோம்.. ஆசம் ஆசம்..

  பழகிப்பாருங்க...

  ReplyDelete