Searching...

Popular Posts

Wednesday, May 14, 2014

பேஸ்புக் பிரபல அல்பங்களுக்கு பாசத்திற்குரிய தீவிரவாதியின் பகிங்கர கடிதம்

பாசத்திற்குரிய பேஸ்புக் பிரபலஅல்பங்களுக்கு தீவிரவாதியின் இந்த
கடிதம்(!?!?!?!?!?!) என்னால் எழுதப்படுகிறது என்பதை விட உங்களால் எழுத வைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

விசேச வீட்டுக்குத்தான் வக்கனையா கிளம்பிப்போகனும்.சுடுகாட்டுக்கு அப்படில்லாம் அவசியம் இல்ல என்பதால் நேரா மேட்டர்க்கு போயிடுவோமே. .
ப்ளாக் பண்ணிடுவேன் ,அன் ப்ரென்ட் செய்துடுவேன்னு மிரட்டுறது ,வெருப்ப காட்ட லைக் போடாமையே குத்துவது போன்ற செயல்களால் என்ன சாதிக்க விரும்புறீங்க அண்ணாச்சி? பிரபலம்னு காட்டிக்கவா?

நீங்க அப்படி செய்துட்டாக்க இங்க கமுந்தடிச்சி படுத்துகிட்டு அழவா போறோம்?? இல்ல தூக்குல தொங்கனும்னு எதிர்பார்க்கிறீங்களா? இது கெய்ல் போனா மேக்ஸ்வெல் உலகம் தலிவா.கவர்மெண்ட்ல வேலை பார்க்குறவன்ட்ட கேட்டாத்தான் அரசு வேலைன்னு பீத்திக்குவான் ....ஆனா நீங்க? கேக்காமலேயே 'பீ'த்திக்கொல்லுறீங்களேடா*. என்ன கருமம்டா மார்க்கு .

நீங்க போடுற ஒன்னு ரெண்டு உருப்படியான ஸ்டேட்டஸ்க்கு உங்க மொத்த பதிவுக்கும் லைக் போடுற நாங்க  கேனையனுங்க ..நீங்க  புத்திசாலியாம். உண்மை என்னான்னா ஓட்ட பஸ்ஸா இருந்தாலும் பாட்டு கேட்டுகிட்டே சாகலாம்னு வந்து சேர்ந்தவங்கதான் உங்ககிட்ட ரெக்வெஸ்ட் அனுப்புன நாங்க.

வந்த புதுசுல நீ இருந்த கண்டிசன் என்ன? ஒன்ற அடி டப்பால ஒரு காசுக்கும் ஆகாத லைக்க வாங்கிட்டே இவ்ளோ பண்ணுறேன்னா நாட்ல அவனவன் அடிக்கிற கோடிக்கு என்னெல்லாம் செய்யலாம்?

எனக்கு ஒரு டவுட்டு அண்ணாச்சி ,அவ்ளோ பெரிய அப்பாடக்கர்னா நீ ஏன் ஐநா ல பேசக்கூடாது? கொறஞ்ச பட்சம் அரட்ட அரங்கத்திலாவது?

வாயில வட சுடுற தெறமைய தவிர என்னா இருக்குன்னு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?அகங்காரம்? நீயும் சாகித்ய அகடாமி வாங்கல நானும் வாங்கல..அப்புறம் என்ன ____________ல அடுத்தவன மட்டம் தட்டுறது?

போஸ்ட் ஆபிஸ்காரன பார்த்தில்ல...என்னா ஆட்டம் ஆடுனாங்க..இப்ப பாரு.என்னாச்சு?அத்த விடு..இவ்ளோ பந்தா பண்ணுறீயே உனக்கு உங்கூட்ல பொறம்போக்குன்னுதானே பேரு .அங்க ப்ளாக் பண்ணிப்பாறேன் அண்ணாச்சி, நெட் பேக்குக்கு குட் பைதான்.

இன்சூரன்ஸ் ஏஜண்ட்ட பார்த்த மாதிரி உன் ப்ரெண்ட்ஸ்லாம் தெறிச்சி ஓடுனதுக்கு காரணம் உன் ஸ்டேட்டஸ்தான்னு உணர்ந்திருப்பியா என்னைக்காவது? ஆனாலும் நாங்க லைக் போட்டோமே அந்த நன்றி இருக்குதா உனக்கு?

அவ்ளோ பெரிய பிரதமர் பதவில இருக்குற சிங்கே வாய திறக்கமா அமைதியா இருக்காரு...ஆனா நீ? ஓவர் புல்லான தண்ணி டேங்கு மாதிரி சல சலன்னு .

நல்லா கேட்டுக்கோ பிரபலமே,வாழ வைக்கும் தெய்வம்னு சொன்னவனுக்கே படம் ரிலீசாகல தெரியும்ல .ஒரு நா இல்லன்னா ஒரு நா மார்க்குப்பயட்ட சொல்லி அன் லைக் பட்டனை வைச்சொம்னு வையேன் மகனே அப்புறம் பாரு கூத்த !

ராணுவத்துல செத்தவன விட ஆணவத்துல செத்தவன் அதிகம்னு பஞ்ச் பேசிட்டு போகலாம்.ஆனா நீ சாகப் போறதில்லைன்னு தெரியும்.அதனால நேரா என்னோட டிமாண்ட்ட சொல்றேன் கேட்டுக்கோ....என்னாது கேக்க மாட்டியா?பரவால்ல சொல்ல வேண்டியது என் கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு அப்கி பார் கந்தி சர்கார் ச்சீ.

அதாகப்பட்டது, unfriend ,block போன்ற செயல்களை செய்யும்போது சம்பந்தப்பட்ட நபருக்கு இன்ன காரணத்திற்க்காக உங்களை இந்த மாதிரி செய்கிறேன் என்று சொல்லி விட்டு செய்தால் உங்கள் வீரமும் இன்ன பிற திறமைகளையும் எங்களால் போற்றப்படும்.புகழப்படும் .அண்ணாச்சிகள் நீங்கள் இதனை செய்வீர்களா? செய்வீர்களா?

பாமரன் மாதிரி உங்கள குத்தலா கூட என்னால புகழ முடியாது.ஏன்னா நீங்க ரத்தம் தேவை ஸ்டேட்டஸ கூட உங்க தனித்தன்மை போகிடக் கூடாதுன்னு பகிர மறுப்பவர்கள்.இனியாவது பகிர்வீர்களா? பகிர்வீர்களா?

இப்போதைக்கு இதயாது செய்ங்க..அப்புறமா இன்னொரு நாள் வேறு பஞ்சாயத்தோடு வர்றேன் தெய்வங்களே.
_________________________________________________

ஒருமையில் ஒரு ப்ளோவில் எழுதிட்டேன் ...வயசுல மூத்தவங்க ஆங்காங்கே 'ங்க' சேர்த்து படிக்கவும்.சிரமத்திற்கு கண்டிப்பா திட்டவும்.நான் ஒரு  சொரணை கெட்ட பதிவன்.

*இது கண்டிப்பாக என்னை விட அதாவது பதினாறு வயதுக்கு குறைந்தவர்களை மட்டுமே குறிப்பிடும்.மத்தவங்களுக்கு வசக்கம்போல 'ங்க ' சேர்த்துக்கோங்க.தப்பில்லை.6 comments:

 1. யோவ் திட்றதா இருந்தா இன்னார் இப்படி செஞ்சார்ன்னு திட்டவும்.. நான் டேஷ்ல அரசன் பேர போடவா இல்ல ஹாரி பேர போடவா ன்னு பாசித் கூட தீவிர ஆலோசனைல இருக்கேன்..

  எனகென்னவோ நீர் இத கண்ணாடி (தக்காளி கண்ணாடினா நான் இல்லையா) இந்த மொகம் பாப்பியலே மொகம் அது முன்னாடி போய் நின்னு நீர் கூறியதை கூறிப் பாரும்.. (அப்பவாது அறிவு வருதா பாப்போம் )

  ஆமா யோவ் வாத்தி ஒழுங்கா பாடம் எடுக்காம ஏன்யா தீவிரவாதிகூடவே ஒரண்ட இழுக்கீறு.. பாவம் முட்டுசந்துல உக்காந்து எப்படி அழுறாரு பாரும் x-) x-) x-) x-)

  ReplyDelete
 2. தம்பி நீங்க சொல்றது எதுவும் புரியல 8-)
  ....நான் ஏன் கண்ணாடி முன்னாடி நிக்குறேன்? என்னைய யாருமே ஓரண்ட இழுக்கல ...இது பாதிக்கப்பட்ட ஒரு பரிதாப லைக்கரின் சார்பாக அழப்பட்டது.

  ReplyDelete
  Replies
  1. அப்டி வாயா வழிக்கு :-) எனக்கும் எதுவும் புரியல.. ஒரு கமெண்ட் :-) :-b

   Delete
 3. அண்ணாச்சி யார சொல்றீகன்னு தெரியல... நான் அப்படிபட்ட அப்பாடக்கரெல்லாம் இல்லீங்க ! பாருங்க இப்பகூட உங்க வலைப்பூவை தேடிபிடிச்சி கமெண்ட் போட்டிருக்கேன்....

  அவய்ங்க கிடக்கிறாங்க ! நீங்க வாங்கஜீ ! வாங்கஜீ ! நான் உங்களுக்கு லைக் போடறேன்... நீங்க எனக்கு லைக் போடுங்க ! ஒண்ணா டீம் ஒர்க் பண்ணலாம் !

  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
 4. face book அதிகம் போறதில்ல யார சொல்லறீங்கன்னு தெரியல .
  என்னை கூட ஒரு பிரபலம் 5000 பேர் தாண்டி வெறும் subscriber ஆ திடீர்னு மாத்திட்டார்.. அதனால நான் unfriend பண்ணிட்டேன்.

  ReplyDelete
 5. நல்லா இருக்கு பதிவு.

  ReplyDelete