Searching...

Popular Posts

Monday, July 7, 2014

"ஹார்லிக்ஸ்" வித் "ஹாரி" - சீனு ஸ்பெசல்

10:00 PM
இன்னையில இருந்து வாராவாரம் இல்லை மாசா மாசம் இல்லை வருசா வருஷம் இந்த "ஹார்லிக்ஸ்" வித் "ஹாரி" வரும்னு சொல்லிக்கிறோம்.. 

எங்களோட முதல் "போனி" வேற யாருமில்ல தற்போதைய "மாஸ்ட்" வான்ட்டட் இளைஞர் "எழுச்சி" பிளாக்கர்களில் ஒருவரான "கண்ணாடி மச்சான்" என்கிற சீனு..

மொதல்ல அவரை வெல்கம் பண்ணிரலாம்.. 

அரங்கம் அதிர வெற்றி நடை போட்டுக்கிட்டே உள்ளே வராரு சீனு..

ஹாரி - வாங்க சீனு.. எப்படி இருக்கீங்க..

சீனு - முதலாவது என் "நெஞ்சி"ல் குடியிருக்கும் என் ரசிகர்களுக்கு வணக்கம்.. அப்புறம் என்.................

ஹாரி - நோ இது பேமிலி ஷோ.. மிஸ்டர் சீனு 

சீனு - இல்லைங்க என் கூட பிறக்காத என் அண்ணன் தம்பிகளுக்கும், அக்கா தங்கைகளுக்கும் வணக்கம்.னு சொல்ல வந்தேங்க 

ஹாரி - சூப்பர் சீனு.. அப்புறம் சீனு சொல்லுங்க.. சமீபமா "தொட்டால் தொடரும்" இசை வெளியீட்டுக்கெல்லாம் போனீங்க.. என்ன ஆச்சு??

சீனு - ஆமாய்யா.. அங்க போயாச்சும் யாரு பிகருங்கள தொடுவோம், அதுங்களாவது தொடரும்னு தான் போனேன்.. ஆனா "கேபிள் சங்கர்" தான்  "ஆட்டோ சங்கர்" கூட என்னைய தொடர்ந்து வந்து கிட்டு இருக்காரு..

--------------------------------------------------------------------------------------------
இடை வேளைக்கு பிறகு
--------------------------------------------------------------------------------------------

வாக்களிக்கலாம் 
யார் அடுத்த கேப்டன்??--------------------------------------------------------------------------------------------
தொடர்கிறது
--------------------------------------------------------------------------------------------

"பிராட் பிட் பயர்" ரவுண்ட் சீனு

ஹாரி - 'டெண்'டுல்காருக்கு ஏன் ''டெண்'டுல்கார்னு பெயர் வைச்சாங்க?? "லெவண்"டுல்கார்னு பெயர் வைச்சா என்னவாம்??

சீனு -  - இதன் காரணத்தை தனி பதிவாய் எழுதலாம் என்று உத்தேசம்.. எப்படிப் பெயர் வைத்திருந்தாலும் மரியாவுக்கு தெரிந்திருக்க போவதில்லை அதனால் அந்த தனி பதிவை இங்கேயே கேன்சல் செய்கிறேன்...

ஹாரி - நீங்களும் ஸ்ரீனிவாசன் ''பவர்'' பெயரும் ஸ்ரீனிவாசன்? அப்படி பவர்புல் பெயரா ஸ்ரீனிவாசன்?? 

சீனு -அராத்துவின் பெயரும் ஸ்ரீனிவாசன்... அதனால் இதனை வேறு மாதிரியும் கொள்ளலாம்... 

ஹாரி - ''விஜய்'' அவார்ட்ஸ் ஏன் இந்த வருஷம் விஜய்கு கொடுத்தாங்க? விஜய்னு பெயர் வைச்சதன் நிமித்தமா?? 

சீனு - நிமித்தம் தெரியும், எஸ்ரா எழுதிய புத்தகம்.. அது யார் விஜய்.. புட்பால் ப்ளேயரா  

[திடிரென அரங்கத்திற்குள் சங்கத்தின் இன்னொரு முதுகெலும்பான ராஜபாட்டை ராஜா, தீவரவாதி சதிஸ்,  அரசன், ஆவி நுழைகிறார்கள்.. கரகோஷம் கூரையை பிய்த்து கொண்டு போகிறது.. இன்னும் நின்ற பாடில்லை.. இனி அவர்களும் ஜாலி ரவுண்டில்] 

ஹாரி - ஆட்டோக்ராப் படத்துல நீங்க சேரன்.னா?? மல்லிகா, கோபிகா, சினேகா யாரு??

'ராஜ பாட்டை' ராஜா - 1ம்பு டீச்சர், காலேஜ் ஆயா, பக்கத்து தெரு ஆன்டி

ஹாரி - எல்லாம் சாஸ்தி வயசா இருக்கே.. நில்லுங்க பார்க்கலாம்..

சீனு -அஞ்சாப்பு வரைக்கும் ஒண்ணு, பத்தாப்பு வரைக்கும் ஒண்ணு, பன்னெண்டாப்பு வரைக்கும் ஒண்ணுன்னு உங்க கேள்விக்கான பதில் அதுக்குள்ள முடிஞ்சு போச்சு... சேரன் பாவம்.. நல்லவேளை நான் சேரன் இல்லை .

ஹாரி - பெயரு வரலையே பா.. சரி அடுத்தது. லிப்-லாக் சீன் வைச்சாங்க என்றால், நீங்க யார் கூட கஜா கஜா?? 

1. லட்சுமி மேனன் 
2. பார்வதி ஓமனகுட்டன் 
3. ப்ரியா மணி
 


ஹாரி - யெஸ் யெஸ் 5. காந்திமதி  

சீனு -ஆப்சன் ஒண்ணையும் மூனையும் லாக் செய்யும் விருப்பம் எனக்கில்லை ( ஐ மீன் கேள்விக்கான பதிலைச் சொன்னேன் 

ஹாரி - என்ட ஓமனே...

சதிஷ் - அப்ப நாலு இல்ல அஞ்சாத்தான் இருக்கும் சீனுவோட ஆன்சர் 
  
சீனு -தீவிரவாதிக்கு செம அனுபவம் போல.. நாலையும் அஞ்சையும் ரெகமன்ட் செய்யறார்... (நாலும் அஞ்சும் என் பட்டியல்ல இல்ல .. ஆகையால் வேனுன்றவங்க என்சாய

சதிஷ்ரெக்கமண்ட் செய்தது வாத்தி .....யாம் அல்ல

சீனு -ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிங்க தான...

சதிஷ் - இப்பத்தான் நிம்மதியா இருக்கு ...

ஹாரி - மோடியின் வெற்றிக்கு விஜயகாந்த் தான் காரணமா??

சீனு -பேஸ்புக் போராளிகள் இல்லையா... ஹாரி - இத்தனை வயதான(???) பின்னரும் ஏன் தீவிரவாதியை "செல்ல"துரை என அழைக்க வேண்டும்? இதில் நீங்கள் நடைமுறை முரணாக கருதும் கருதுகோள் என்ன??  

'ராஜ பாட்டை' ராஜா - குள்ளமாக இருந்திருந்தால் "குள்ள"துறைனு சொல்லலாம். நல்லா ஹைட்டா இருக்கார் அப்போ "நெட்ட"துறைனு சொல்லலாமே??

ஹாரி - தீவி குண்டா இருந்தா "குண்டு''துரைனு வைச்சு இருக்கலாம், ஒல்லியா இருக்காரே "ஒல்லி'' துரை சொல்லலாமோ?  

 [தீவிரவாதியை பற்றி கிண்டல் கேள்விகளா என்று கோபக்கனல் கண்ணில் தெறிக்க உள்ளே வருகிறார் அண்ணியார் திருமதி -சதிஸ்]

Mrs சதிஷ் - செல்ல துரை என்பது சதிஷ் அப்பா பேரு .இவர். பேர் சொல்லும் பிள்ளை

 'ராஜ பாட்டை' ராஜா - நான் அப்பவே சொன்னேன் ஹாரிதான் கேட்கல. . . .சதிஷ்யை விட்டு அவர் அவர் சுடுற சப்பாத்தி கட்டையாலையே ஹாரியை அடிக்க சொல்லுங்க

Mrs சதிஷ் - என்ன என் பிள்ளை யை கலாய்க்கிறீங்களா ஹாரி அண்ணா வுக்கு சப்பாத்தி கட்டைன்னா, ராஜா அண்ணா உங்களுக்கு பூரி கட்டை ஜம்மு வில் இருந்து பார்சல் வருது .

சதிஷ் - மனைவியுடையான் கலாய்க்கு அஞ்சான் ....ஷப்பா இன்னிக்கு தப்பிச்சிடலாம்னு நம்புறேன் 

ஹாரி - ஹாரியை நீங்க தம்பின்னே சொல்லலாம் இப்பதான் 22 ஆவுது.. வாத்தியை நீங்க ''ராஜா தாத்தா''ன்னே சொல்லலாம்.. ஆடி முடிஞ்சா 65 ஆக போகுதுல  

ஹாரி - //என்ன என் பிள்ளை யை// எல்லாம் ஓகே இந்த இதுவ தான் தாங்க முடில.. சரி அடுத்த கேள்வி நமது வாத்தியிடம் கணிசமாக 100 பேர் படித்தால், எத்தனை பேர் உருப்படுவார்கள் என்று நினைக்கின்றீர்கள்??

'ராஜ பாட்டை' ராஜா - அந்த வாத்தி மட்டும்தான் உருபடுவார். . . .

ஹாரி - அப்போ எல்லாம் புஸ்.னு சொல்லுரிங்க?? 

'ராஜ பாட்டை' ராஜா -வாத்தி உருப்பட்டா மாணவர்களும் உருப்படுவார்கள் என்பது உலக நியதி. .  

சீனு - வாத்தி வகுப்பை கட் அடிப்பவன் அத்தனை பேரும் உருப்படுவான்

ஹாரி - இது அப்சலுட்லி கரிட்


--------------------------------------------------------------------------------------------
இடை வேளைக்கு பிறகு
--------------------------------------------------------------------------------------------

வாக்களிக்கலாம் 
யார் அடுத்த கேப்டன்??--------------------------------------------------------------------------------------------
தொடர்கிறது
--------------------------------------------------------------------------------------------
ஹாரி - ஆவி ஏன் தனது பெயரை கோவை ஆவி என வைத்துள்ளார்? கோவை பெருச்சாளி, கோவை பூதம் என்று வைக்காததன் அகக்காரணி என்னவாக இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்??

சீனு -இதற்கு நான் பதில் சொல்லியே ஆகா வேண்டும் இல்லையேல் அகங்காரக் காரணி ஆகிவடும்... 

//கோவை பெருச்சாளி, கோவை பூதம்// அவர் சமீபத்திய ப்ரோபைல் பிக்சர் தான் தங்களை இப்படியெல்லாம் சிந்திக்க வைக்கிறது என நினைக்கிறன்.. கவலை வேண்டாம் நாளையே மாற்றச் சொல்லிவிடுகிறேன்..

ஆவி - எதோ கலாய்க்கிற மாதிரி தெரியுதே? 

ஹாரி - இன்னைக்கு இரவே ஒருத்தன போட்டு தள்ளனும்னு நினைச்சா யாரை போட்டு தள்ளுவிங்க?? என்னைய என்று மொக்கை போட கூடாது?? அவரு பெயர நீங்க ''TAGGING'' பண்ணி விடனும்??


ஹாரி - இது டகால்டி.. குறைந்தது அரச ன் பெயராவது சொல்லவேண்டும் நீங்கள்  

அரசன் - யோவ் எனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகலையா ... அதுக்குள்ள ஏன் இந்த கொலைவெறி ...

ஹாரி - "வாத்தி உருப்பட்டா மாணவர்களும் உருப்படுவார்கள் என்பது உலக நியதி. . . - [ராஜா - பிரபல ஆசிரியர்] இந்த கருத்து பற்றி உங்கள் தாழ்மையான கருத்து என்ன??  

'ராஜ பாட்டை' ராஜா -தாழ்மையான கருத்துனா?? படுத்துகிட்டு டைப்பன்னனுமா??

ஹாரி - அது அவரு இஷ்டம்.. குனிஞ்சுகிட்டே கூட பண்ணலாம்..

சீனு - பிரபல ஆசிரியர் - எந்தப் பத்திரிக்கைக்கு...[சிறிது யோசித்தவர்] வாத்தி உருபோட்டால் மாணவர்கள் மண்ணாப் போவார்கள் என்பது ராஜநியதி

ஹாரி - ''சதிஷ்யை விட்டு அவர் அவர் சுடுற சப்பாத்தி கட்டையாலையே'' - [ராஜா - பிரபல ஆசிரியர்] ஒரு பிரபலத்தை இப்படி சப்பாத்தி சுடுபவர் என்கின்ற தொனியில் கிண்டல் அடித்துள்ளார்.. கும்மி புராணத்தின் படி இதற்கு என்ன தண்டனை.. ((அப்புறம் என்ன ஆம்லட் போடுவது பற்றி இதில் குறிப்பிட படவில்லையே 

சீனு - ராஜா செய்தது மிகபெரிய கொடூர செயல்... தனக்கு நன்றாக செய்யத் தெரிந்த ஒன்றை தன்னைப் போன்ற மற்ற குடும்பஸ்தனும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது ஆணவம்... தமிழ்நாட்டில் இவ்வளவு நாள் தோசை சுட்டுக்கொண்டிருந்த தீவிரவாதி இப்போது தான் சப்பாத்தி சுட பழகியிருப்பதாக தகவல் வந்தது... ஆனால் வாத்தியோ தினசரி தோசை பூரி சப்பாத்தி என்று சுட்டுத் தள்ளுகிறார்.. அந்த அகம்பாவத்தில் பேசுகிறார் என்று நினைக்கிறன்... 


நன்றி 

மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திக்கலாம்  

14 comments:

 1. ஏதோ நைட்டு பத்து மணிக்கு மேல நடத்துற ஷோ மாதிரியே ஆரம்ப பில்டப்... இது கொயந்தைங்க நடத்துற ப்ரோக்ராம்ன்னு நாட்டுக்கு இன்னும் தெரியாது போல..

  ஆனாலும் விளம்பர இடைவேளை பேஷ் பேஷ் பலே பலே

  ReplyDelete
  Replies
  1. :)) ஆமாயா.. இனி தெரிஞ்சிடும் :p

   Delete
 2. தக்காளி இந்த பதிவ ஒரு வாரமா எழுதிருக்கான்யா ....ஒவ்வொரு வாரமும் இப்பிடி வருமோ?

  ReplyDelete
  Replies
  1. ஒரு வாரம்லாம் இல்லைனே.. அன்னிக்கு எடுத்து அடுத்த நாள் ரெடி பண்ணுனது தான்..

   Delete
 3. அடாடா.. வாத்தியோட வயசு 65ஆ.... என்னைவிட சீனியர் சிட்டிசன்னு தெரியாம நான் வேற மரியாத இல்லாம நாலஞ்சுத தடவ பேசிட்டனேப்பா...! :p

  ReplyDelete
  Replies
  1. நானும்தான் வாத்தியை ஒருமைல பேசிட்டேன். வாங்கண்ணா, எதாவது புண்ணிய தீர்த்தத்துல நீராடி இந்த பாவத்தை போக்கிக்குவோம்.

   Delete
 4. யோவ் சூப்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றியா சின்னா

   Delete
 5. வூட்டுக்காரரை அவரோட நன்பர்கள் கிண்டல் செய்தா எல்லா வூட்டுக்காரம்மாவும் ரசிப்பாங்க. ஆனா, தீவிரவாதி வூட்டம்மா மட்டும் ஏன் பொங்குறாங்க!?

  ReplyDelete
  Replies
  1. தீவில அவ்வளவு அன்புங்க

   Delete
 6. " ஆப்சன் ஒண்ணையும் மூனையும் லாக் செய்யும் விருப்பம் எனக்கில்லை ( ஐ மீன் கேள்விக்கான பதிலைச் சொன்னேன் ... "

  அய்யா சாமி லொள்ளு தாங்கல !!! அருமை !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete