Searching...

Popular Posts

Sunday, July 20, 2014

"ஹார்லிக்ஸ்" வித் "ஹாரி" - ஆவி ஸ்பெசல்

5:48 PM


 கடந்த வாரம் நடந்த அக்கபோரில் ''ஹாரி''யை ''ஹார்லிக்சோ''டு கண்டாலே அலறி ஓடும் நிலைமையில்; ஓட்டமும், நடையுமாய் இருந்த ஒருவரை ''ஆவி''யாகும் முதலே அமுக்கி போட்டோம்.. 

இவரை பற்றி பார்த்தோம்னா: இவர் எங்களுக்கெல்லாம் சீனியர்.. 2010 ல இருந்து எழுதிட்டு இருக்காரு. பெயர் மட்டும் தான் ஆவி.. இன்னும் சொல்ல போனால் எல்லாருக்கும் பிடித்த நல்ல "ஆவி"..

சர்ரு, சர்ருனு பதிவு வந்து இறங்கினாலும் படிக்கிறதுக்கு இலகுவா நறுக், சுருக் என்று இருக்குறதும் இவரோட ஸ்பெசல்.. 

பதிவுலகின் முக்கியாமான ஒரு ஆல்ரவுண்டர் பதிவர் 

அவருடன் ஜாலி சந்திப்பு ஸ்டார்ட்.. 

ஹாரி -  வணக்கம் சார்.. ஆவிகள் கூட பேசுறதே தனி அனுபவம்.. ரியலி பீல் பண்டாஸ்டிக்.. அதுவும் ஊரு பேரோட.. செம சார்..  

சொல்லுங்க சார்.. நீங்க தண்ணீர்ல பிடிக்கிற ஆவியா?? இல்லை செமிட்ரில பிடிக்குற ஆவியா??

ஆவி -  ஹஹஹா ரெண்டும் இல்ல.. எல்லாருக்கும் பிடிக்கிற ஆவி

சீனு - அப்போ எங்கள பிடித்த ஆவி போக வேப்பிலை அடிக்கனுமா இல்ல கரி வேப்பிலை அடிக்கனுமா


ஹாரி -   ஓ மை காட்.. மிஸ்டர் சீனு.. நீங்க இன்னும் கிளம்பலையா..ஹார்லிக்ஸ் விட் ஹாரி பார்ட் 2 ரெடி பண்ணிடலாமா??

[கேட்டது தான் தாமதம் பின்னங்கால் பிடரியில் தெறிக்க எஸ் ஆகினார்]

ஹாரி -   யோவ் நில்லுயா.. அடுத்த கேள்வி உன்னைய பற்றி தான்.. சொல்லுங்க ஆவி..  நம்ம சீனுவோட கேரளா விஜயம் எதுக்காக இருக்கும்னு நினைக்குறிங்க?? எனி ஜில்பான்ஸ்??

சீனு -சாமியாரா போகலாமா?? வேணாமான்னு ஜிந்திக்க போனாரு
 
ஹாரி -   ஏது கேரளாவிலோ??

ஆவி - ஹலோ, கேள்வி ஆவிக்கு?? உங்க செஷன் போன வாரமே முடிஞ்சிட்டு.. 

சீனு -ஆமா நல்ல ரம்மியமான பகுதி பாசு

ஆவி - 'பலரையும்' வசியப்படுத்த வேண்டி கேரள மாந்திரீகம் கத்துகிட்டு வர மாதா ஷகீலானந்தமயி கிட்ட மூணு நாள் "ஆண்மீக" உபந்யாசம் எடுத்துட்டு வர போயிருந்தாரு 

ஹாரி -  சூப்பர் சார்  

--------------------------------------------------------------------------------------------
இடை வேளைக்கு பிறகு
--------------------------------------------------------------------------------------------


லிங்க் -

Fade In முதல் Fade Out வரை

--------------------------------------------------------------------------------------------
தொடர்கிறது
--------------------------------------------------------------------------------------------
ஹாரி -   ''ஸ்கூல் பையன்'' இந்த பெயரை ஏதும் ஸ்கூல் பொண்ணு ஞாபகமா வைச்சு இருப்பாரோ??

ஆவி - தோனி மாதிரி எல்லா விஷயத்துலயும் கூலா இருக்கிறதால "கூல் பையன்" ன்னு தான் அவரை எல்லாரும் கூப்பிடுவாங்க.. ஒருமுறை ஏதோ மீட்டிங்க்ல இருக்கும்போது இவர் பேரை யாரோ சத்தமா கேட்க, இவரோ மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க விரும்பாமல் "ஸ்... கூல் பையன்" என்றாராம்.. நண்பர் தவறாக ஸ்கூல்பையன் என்று புரிந்து கொண்டு அவ்வாறே அழைக்கத் தொடங்க, அவர் பெயர் அப்படியே அமைந்து விட்டதாம்.. மற்றபடி ஸ்கூல் படிக்கும் போது நம்மாளு செம்ம சைலண்ட், ஆகவே நோ ஸ்கூல் பொண்ணு தாட்ஸ்..

ஹாரி -  இப்படி ஒரு விளக்கமா?? அடுத்த கேள்வி ஆவி.. மொக்கையா அதுவும் சூரா மொக்கையா கேள்வி கேட்கிறவங்கள பார்த்தா என்ன தோணும் ஜி?? அவ்வ்வ்வ்?? 

ஆவி - இவிங்க 'ஹாரி'யவே மிஞ்சிடுவாங்க போலிருக்கே ன்னு தோணும்

ஹாரி -  அடுத்த கேள்வி ரொம்ப முக்கியமான கேள்வி.. நம்ம ''பதிவர் செங்கோவி''யோட திரைக்கதை பெஸ்டா இல்ல ''கருந்தேள்'' திரைக்கதை சீரிஸ் பெஸ்ட்டா?? வாசிச்சது இல்லைனு டகால்டி பண்ண கூடாது வாசித்து வந்து சொல்லலாம் தப்பில்லை.

சீனு - Ha ha ha

ஆவி - கருந்தேள் ஹாலிவுட் ஸ்டைல், செங்கோவி குவைத் ஸ்டைல் ரெண்டுமே பெஸ்ட் தான்.. எனக்கு பெர்சனலா ''பதிவர் செங்கோவி''யின் எழுத்து நடை பிடிக்கும்..

ஹாரி -  இது கூட டகால்டி தான்.. குவைத்குன்னு ஸ்டைல் இருக்கா என்ன?? தமிழ் நாட்டு ஸ்டைல்ல சொல்லும்னே??

ஆவி - ஒரே ஆப்ஷன் சொல்லணும்னா.. செங்கோவி தான் நம்ம சாய்ஸ்..அவர்தான் மண் மணத்தோட எழுதறார்னு தோணுது.

இது தொடர்பாக ஹாரி ஹார்லிக்ஸ்ஸும் கையுமாக செங்கோவியை தொடர்பு கொண்டு பேசிய போது..
ஹாரி -  இவரு இன்னும் under-rated யா என்று நினைக்குற பதிவர்?? இந்தாளு எல்லாம் over-rated என்று நினைக்குற பதிவர்???

ஆவி - இதுக்கு கொஞ்சம் சீரியசா பதில் சொல்ல நினைக்கிறேன்.. உண்மையிலேயே நம்ம வாத்தியார் தான் நான் "Under-rated" ன்னு நினைக்கிறேன்.. அவரோட திறமைக்கு இன்னும் நிறைய உயரத்தில் இருக்க வேண்டியவர்.. லாபி, விளம்பரம் போன்றவற்றில் ஆர்வம் காண்பிக்காததால அவர் இன்னும் பெருசா ரீச் ஆகல..

ஆவி - ஆஹா ஓஹோ ன்னு புகழப்பட்ட ஒரு பிரபல பதிவரின் சிறுகதை தொகுப்பை வாங்கிப் படிச்சேன்.. ஒரு ஹாலிவுட் நடிகையை மணந்து கொண்ட இந்தியன் பெயர் கொண்ட அந்த புத்தகம் என்னை தூக்கி வாரிப் போடச் செய்தது.. அவர் எழுத்து நன்றாக இருக்கிறது.. ஆனா கதைகள் பெரும்பாலானவை படு திராபை.. வேஸ்ட் ஆப் டைம்.. ஆனால் சிறப்பாய் பேசப் படுகிறார்.. அவருக்கு அது கொஞ்சம் டூ மச் என்று தோன்றியது.. கம். பெல்-ஐ-டன் அவர் பெயர்.
 
ஹாரி -  சூப்பர் தல.. அடுத்த கேள்விக்கு போகலாம்.. ஆங்கில பதிவரா திடீர் எழுச்சி பெற என்ன காரணம்?? 

ஆவி - Well, ஆங்கிலம் - தமிழ்ல எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை. நான் பதிவெழுத ஆரம்பிச்சதே ஆங்கிலத்தில் தான்.. ஆனா படிக்க ஆளில்லாத காரணத்தால் அந்த இலக்கிய சேவையை நிறுத்திட்டு தமிழுக்கு வந்தேன்.. இப்ப சில இன்டர்நேஷனல் விசிறிகள் கிடைச்சிருக்கறதால அவங்களுக்கும் புரிய வேண்டி ஆங்கிலத்தில்.. மற்றபடி நாம எப்பவுமே "உயிர் தமிழுக்கு, உடல் ***வுக்கு" ன்னு வாழ்ற ஆளு.. 

சீனு - //Well// மனசுல கமலகாசன்னு நினப்பு 

ஹாரி -  மேலிருந்து கீழ் தான் ஆர்டர்.. 

ரஜினி, கமல் = ???
விஜய், அஜித் = ???
விக்ரம், சூர்யா =???
சிம்பு, தனுஸ் = ???
சிகா, விசே = ???


உங்க பேவரிட் ஒருவர் மாத்திரம் தான் சொல்லலாம்.. 

அப்படி அந்த பேவரிட் சொல்றதோட "கொய்யால இவரு நடிச்சதுலே சூர மொக்கை படம் இதான்யா" என்று நினைக்குற படம் பெயரும் சொல்லுங்க??
 


ஆவி - ரஜினி -கமல்- கமல்" தான்.. அவருக்கு அப்புறம் தான் "தல" எல்லாம்" அவர் நடிச்ச மொக்கை ன்னா அது மன்மதன் அம்பு தான்..! 

விஜய்-அஜித் = 'தல'.. மொக்கை படம் ஆஞ்சநேயா!
விக்ரம், சூர்யா = சூர்யா, 'உயிரிலே கலந்தது' 
சிம்பு, தனுஸ் - சிம்பு.. நிறைய இருக்கு.. அலை எல்லாத்துக்கும் டாப் மொக்கை..
சிகா, விசே = சிவகார்த்திகேயன், மொக்கை மெரீனா 

ஹாரி -  பதிவுலக யார் கூடவும் ஓரண்டை இழுக்காம "பேஸ் பிள்ளை"யாவே இருக்கிங்களே? பதிவுலகுல உங்களுக்கு நேரடி போட்டி பதிவர் இவரு தான்யா என்று நினைக்குற பதிவர் யாரு?? 

ஆவி - //"பேஸ் பிள்ளை"யாவே இருக்கிங்களே?// எனக்கு யார்கூடவும் வம்புக்கு போக பிடிக்காது.. ஏன், தெரியாதுன்னே சொல்லலாம்.. (??!!).. பதிவுலகல சிறப்பா எழுதற பல பேர பிடிக்கும்.. போட்டின்னு நினைக்கிற பதிவர்ன்னா அது சீனுபாய் தான்.. ஏன்னா பயபுள்ள ஏகப்பட்ட வெரைட்டி வச்சுகிட்டு அப்படியே எழுதி தள்ளிடுது.. நம்ம ப்ளாக்குல ஈ ஒட்டும்போது, எப்பவுமே பலாப்பழத்தை சுத்தின ஈயாட்டாம் அவரோட ப்ளாகுல கூட்டம் அலை மோதும்.. அதனால எப்பவாவது அவர் மாதிரி 'பிரபலம்' ஆகணும்னு நான் போட்டியா நினைக்கிற ஒரே பதிவர் அவர் தான்.. ஹிஹிஹி.. 

சீனு - யோவ்.. இதெல்லாம் ஓவர்... ஒரு போஸ்ட்டுக்கே எனக்கு நாக்கு தள்ளுது இதுல வெரைட்டி வேறயா... நான்லாம் வொர்த் இல்ல பாஸ்... உங்க தகுதிய வேற வேற வேற... நான் கொயந்த 

ஹாரி -  சீனு ஒரு மகா பிரபலம் தான்.. ஆனா நாங்க உங்க கிட்ட இருந்து "வேற வேற" தான் எதிர் பார்க்குறோம்.. உங்க பட்ச் (2010 ஆம் வருஷம்) அந்தளவுல அறிமுகமானவங்க.. அப்படி சொல்லும் போது தான்.. எங்களால கணிக்க முடியும்.. அவுரா இவரான்னு.. 

ஆவி - நான் என்னுடைய எழுத்துப் புலமைய இன்னும் நிறைய வளர்த்துக் கொள்ள வேண்டும்.. எப்பவுமே எனக்கு மேலே அதே சமயம் எட்டி விடக் கூடிய இலக்குகளை தான் வைத்துக் கொள்வேன்.. அப்படி நான் நினைப்பது சீனுவை மட்டுமே.. (இல்ல, என் பேட்ச் ல தான் சொல்லணும்னா Ananya Mahadevan ்னு ஒரு பதிவர், அவங்க அளவுக்கு ஹாஸ்யத்தோட எழுதணும்னு நினைப்பேன். வாத்தியார் எழுதற மாதிரி நறுக்குன்னு விஷயத்த சொல்லனும்னு நினைப்பேன். Nr Prabhakaran போல யாருக்கும் பயப்படாம எள்ளலோடு விமர்சிக்கணும்னு நினைப்பேன்.. ஆனா நம்ம உயரம் ஐந்தரை அடி தானே அவ்வளவு தானே குதிக்க முடியும்.. போட்டியா நினைச்சு என்ன ஆகப் போகுது..? (எப்படியோ உங்களுக்கு தேவையான பெயர்கள் கிடைச்சாச்சில்ல) 

ஹாரி -  ஆவியிடம் ஹீரோயின் பற்றி கேள்வி இல்லாமலா? இந்த படத்தை பார்க்கும் தோனுற கவிதையை 5 வரில சொல்லிடுங்க ஜி..
ஆவி -  
 
தேவதையே, 

நீ வரும் 'நேரம்' 
பார்த்து காத்திருந்தேன்..

இந்த 'ராஜா'வுக்கு ஓர் 
'ராணி'யாய் எண்ணியிருந்தேன்,

காத்திருந்த என்னை 
'நய்யாண்டி' செய்துவிட்டு,

வேறொருவனுடன் 'திருமணம் எனும் நிக்காஹ்' 
செய்துகொள்ள தீர்மானித்தாயே, நியாயமா? 


ஹாரி -  ஆவி நெஜமாவே சூப்பரு யா.. கலக்கிட்டிங்க போங்க.  

ஆவி - அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல அவளை நினைக்கும் போதெல்லாம் ஆவிப்பா அருவி மாதிரி கொட்டுது. ஆனா அதை டைப் பண்ண நினைக்கும் போது தான் சோம்பல் வந்து தடுத்திடுது.. 

ஹாரி -  சூரியாவோட பிறந்த நாளுக்கு என்ன சொல்ல விரும்புறிங்க?? 

ஆவி - நடிகர் சூரியாவோட பிறந்த நாள்னா "ஹேப்பி பர்த் டே".. இல்லே என் கல்லூரில ஒண்ணா படிச்ச காலேஜையே கலக்கின அந்த சூர்யா பிரபா என்கிற சூர்யா ன்னா வருஷா வருஷம் சொல்ற மாதிரி "நான் உன்னை விரும்பல, நீ அழகா இருக்கேன்னு நெனைக்கல.. பர்த்டே அன்னைக்கி ப்ரபோஸ் பண்ணா அடிப்பேன்னு தோணல, ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு" ன்னு சொல்வேன்.. ஹிஹிஹி. 

ஹாரி -  சீனு மச்சி யாரோ சூர்யா பிரபாவாம்யா நீ இதெல்லாம் கேட்கிறதில்லை 

சீனு -அவரு இன்னும் நாங்களும் இஞ்சினியரையே சொல்ல மறந்துட்டாரு.. இதச் சொல்றதுக்கா அவருக்கு நேரம் இருக்கப் போகிறது 

ஹாரி -  மச்சி இருந்தாலும் நோட் பண்ணிக்கையா.. என்னிக்காவது யூஸ் ஆவும்.. tamil.jillmore ஆ இல்லை tamilcinetalk ஆ?? எது சூப்பரு??  

ஆவி - உண்மைய சொல்லணும்னா சினிடாக் இன்னைக்கு தான் முதல் முறை போறேன்.. ஜில் மோர் ரொம்ப நாளா குடிக்கிறேன்.. சாரி படிக்கிறேன்.. அதிலும் நம்ம Ag Sivakumar அவர்களின் நக்கல், நையாண்டி தூக்கலா இருக்கிற எல்லா விமர்சனங்களும் பிடிக்கும்.. 

ஹாரி -  ராஜி அக்கா அது எப்படிங்க கனவுகள் காணாமல் போகும்?? அப்படி கனவுகள் காணமல் போனால் எப்படி கண்டு பிடிக்கிறதாம்?? இன்செப்சன் பிளிஸ் ச்சே இன்போமேசன் பிளிஸ் 

ராஜி அக்கா - உங்க விளையாட்டில் நான் எங்க வந்தேன்!? என்னை ஏன் இதுக்குள் இழுக்குறீங்க!? 

ஹாரி -  ஹி ஹி.. எங்களுக்கு லைக் போட்டாலே இழுத்துடுவாங்க அக்கா..
அவ்வ்வ்வ்.. அடுத்து கணேஷ் வாத்தியாரை தான் பேட்டி எடுக்கலாம்னு இருக்கோம்.. அவ்வ்வ்வ் அப்படியே அக்காவும் ப்லொவ்ல வருவீக..
 

ராஜி அக்கா -தம்பிங்க விளையாட்டில் அக்காக்கும் டமுண்டு தாராளாமாய் விளையாடலாம். பதில் தூக்கத்தில் எதாவது பிரச்சனை இருந்தா கனவு காணமல் போகும்!! 

ஆவி - நான் என்னுடைய கனவுகளில் பலமுறை காணாம போயிருக்கேன்.. ஆனா கனவுகளே காணாம போற விஷயம் அக்கா சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன்

[அப்போது அதிரடியாக வாத்தியார் உள்ளே நுழைகிறார்.. அரங்கம் அதிர்கிறது.. யாருயா சிரிக்கிறது.. மாஸ்யா மாஸ்.. அதான் அரங்கம் அதிருதுன்னேன்] 

கணேஷ் வாத்தியார் - எலேய் ஆவி... காலேஜ் படிக்கறப்ப எனக்கு லாயர் ஆகணும்னு ஆசை இருந்துச்சு. இனி படிக்க வாய்ப்பில்லைன்ற நிலைல அந்தக் கனவு காணாம தானே போச்சு...? நீ லவ் பண்ணினதே இல்லையா...? பண்ணிருந்தா நிறையக் கனவுகள் காணாமப் போற அனுபவத்துக்கு விளக்கம் கிடைச்சிருக்குமே...

ஐயய்யோ.... இப்பத்தான் கவனிச்சேன்... அடுத்து நான்தான் பலியாடா ஹாரி... அவ்வ்வ்வ்வ்... மீ எஸ்கேப்..... 


ஹாரி -  தலைவரே.. மொதல்ல ஹார்லிக்ஸ் குடிங்க.. அப்புறம் ஹார்லிக்ஸ் வித் ஹாரிக்கு ரெடி ஆகிக்குங்க.. அவ்வ்வ்வ்

[ஐயையோ அது அவருக்கு கஷ்ட காலமோ இல்ல.. நமக்கு தான் நல்ல காலமோ அடுத்த வாரம் ஹார்லிக்ஸ்.கு வாத்தியாரே கிடைசுட்டாரு]   


நன்றி 
மீண்டும் அடுத்த நிகழ்ச்சியில் சந்திக்கலாம்  

17 comments:

 1. ஆவி சேஸிங் சீனு.... சபாஷ் சரியான போட்டி...! :-d

  ReplyDelete
  Replies
  1. ஆனா அடுத்த கேள்வியின் படி மூணுக்கு மேற்பட்ட ஆட்களை சேஸ் பண்ணுறாரு

   Delete
  2. அண்ணே! இப்படியா தானா வந்து சிக்குவீங்க!?

   Delete
 2. வழக்கமா அடுத்த சினிமா எப்ப வரும்னு வெயிட் பண்ற எனக்கு. நான் "பொதுநல ஊடகங்களுக்கு" கொடுத்த இந்த முதல் பேட்டி எப்ப வரும்னு வெயிட் பண்ணின அனுபவம் புதுசு..

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றிங் தலைவரே.. :)

   Delete
  2. ஆவி! பதில்களெல்லாம் நல்லாத்தான் சொல்லி இருக்கீர்.

   Delete
 3. ஹஹஹா.. வாத்தியார் என்ட்ரிய அழகா புகுத்தின விதம் சூப்பர்.. விழுந்து விழுந்து சிரிச்சேன்..

  ReplyDelete
 4. செங்கோவி பதிலை தனியா எடுத்து போட்டது Professional ஆ இருந்தது..

  ReplyDelete
 5. ஒப்பீடு யாருக்கும் பிடிக்காது... + வேண்டாம்...!

  ReplyDelete
  Replies
  1. இது தனி நபர் விருப்பம் தானே தல.. அடுத்து முக்கால்வாசி ப்ரோமோசன்கள் இப்படியான கேள்விகளில் தான் உருவாகும்..

   Delete
 6. வணக்கம்
  ஆகா..கலக்கல் ..... ஆகா..கலக்கல்... நன்று...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. யோவ் ஆவி இந்தப்பதிவுக்கு நீரு நன்றி கமெண்ட்தான் போடனும் .....நாங்க எதையாவது எழுதிப்போட்டு கடமைய முடிக்கலாம்னா அவ்வளத்தையும் நீரே எழுதிட்டா?

  ReplyDelete
 8. நடத்துங்க , நடத்துங்க ... ஒரு நாளைக்கு அருவா வித் ஆவி னு வரபோது !!!

  ReplyDelete
  Replies
  1. ஆவி வித் அருவாவா :-t

   இல்லை ஆவிக்கு அருவா வா?? (m)

   Delete
 9. அணைத்து பதுவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும்.

  ReplyDelete