Searching...

Popular Posts

Tuesday, July 22, 2014

ஹாரி vs வ.சு நடந்தது என்ன ?




 நமது ஹாரி  நேர்மையானவர் என சொன்னால் வசு , தமிழ்வாசி, சீனு , ஆவி  போன்றவர்கள் ஓத்துகொள்ள மறுகின்றனர். அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன்.  நீங்களே அவர் நேர்மையை புரிந்துகொள்விர்கள்.

சம்பவம் 1:

ஹாரி சிறு குழந்தையாக இருக்கும் போது  நிறைய தப்பு செய்வார்[ இப்ப மட்டும் என்ன ] எனவே அவரிடம் அவர் அப்பா ஒரு உண்டியல் குடுத்து “நான் 6 மாதம் வெளிஊர் செல்கிறேன். இந்த ஆறு மாதத்தில் நீ ஒவ்வொறு முறையும் தப்பு செய்யும் போதும் இந்த உண்டியலில் 1 ரூபாய் போடு, நான் உர் திரும்பியதும் வந்து பார்கிறேன்” என சொல்லிவிட்டு சென்றார்.

6 மாதம் கழித்து வீட்டிர்க்கு வந்த ஹாரியின்  தந்தை “ஹாரி உண்டியலை எடுத்து வா “ என்றார். ஹாரி எடுத்துவந்த உண்டியலை திறந்து பார்த்த அவர் தந்தைக்கு இன்ப அதிர்ச்சி. அதில் 1 ரூபாய் மட்டுமே இருந்தது. “ஹாரி இந்த 6 மாததில் ஒருமுறை மட்டுமே தப்பு செய்துள்ளாய் எனக்கு ரொம்ப சந்தொஷமா இருக்கு, அப்படி என்ன தப்பு பன்னியதற்க்கு இந்த 1 ரூபாய் போட்ட?”

ஹாரி “ அவசரமா பணம் தேவைப்பட்டது அதான் இந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 512 ரூபாய்ய எடுத்துகிட்டேன், அந்த தப்புகாக போட்டதுதான் இந்த 1 ரூபாய்.


சம்பவம் 2:

ஹாரி, சதீஷ் , அரசன்  மூவரும் ஒரு சேட்டிடம் தலா 10000 ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். அந்த சேட் திடிரென இறந்துவிட்டார். இவர்கள் கடன் வாங்கியது யாருக்கும் தெரியாது. அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மூவரும் அவர் உடலை எரிக்கும் இடத்திர்க்கு சென்றனர்.

சதீஷ் : என்னிடம் உள்ளது 4,000 ரூபாய் தான் அதை உங்கள் சிதையில்
          எறிகிறேன்,-  என கூறி பணத்தை நெருப்பில் போட்டார்.

அரசன் : நான் சதீஷ் போல இல்லை நான் உங்களிடம் வாங்கியதில்
         60% பணத்தை போடுகிறேன்- என கூறி 6000 ரூபாய் பணத்தை
          நெருப்பில் போட்டார்.

ஹாரி:அவனுங்க இரண்டு பேரும் ஃபிராடுங்க.. நான் நேர்மையானவன்.
         உன்னிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் தருகிறேன் என கூறி

        12000 ரூபாய்க்கான காசோலையை (செக்) தூக்கி நெருப்பில் போட்டார்.


இப்ப சொல்லுங்க ஹாரி நேர்மையானவரா? இல்லையா ?


========================================================


நம்ம பதிவர்கள் ஹாரி ,வ.சு ,  சீனு  மூவரும் ஒரே பெண்ணை டாவடித்து வந்தனர். (அந்த பெண் இந்த மூவரையும் கண்டுகல) யார் அந்த பெண்ணை கழுத்தருப்பது Sorry கல்யாணம் முடிப்பது என போட்டி. இந்த பிரச்சனை நம்ம நாட்டாமை இல்யாசிடம்  சென்றது.

அவர் அந்த பெண்ணை பிக்கப்பன்ன நினைத்து மூவருக்கும் ஒரு போட்டி வைத்தார். ஜெயிப்பவர்களுக்கு அந்த பெண் சொந்தம் என சொல்லிவிட்டார்.





இல்யாஸ்  ஒரு புது மெஷின் கண்டுபிடித்துள்ளார். அதில் 10 பல்ப் இருக்கும். யாராவது அந்த மெஷினிடம் பொய் சொன்னால், பொய்யின் அளவுக்கு ஏற்ப்ப பல்ப் எரியும். ஹாரி ,வ.சு ,  சீனு மூவரில் யார் பெரிய பொய் சொல்கின்றார்களே அவர்கள் வெற்றி பெற்றவர் ஆவார். ஆனால் சொல்லும் பொய் English ல சொல்லவேண்டும்.

ஹாரி 

“  I Think I am the Tamilmanam Top Blogger…”

மெஷினில் 3 பல்ப் எரிகிறது.

 சீனு

“ I Think I don’t Like Gilmaa Movies….”

மெஷினில் 6 பல்ப் எரிகிறது.


இறுதியாக நம்ம வ.சு…மெஷின் முன்னால் நின்று…

        “ I Think…….



“டமால்… எல்லா பல்பும் பயங்கர பிரகாசமாக எரிகின்றது…

ஆயிரம் இருந்தாலும் வ.சு  வசு தாங்க…

15 comments:

  1. //நான் விக்கியை போல இல்லை நான் உங்களிடம் வாங்கியதில்
    60% பணத்தை//

    யோவ் வாத்தி மண்டைய மறைச்சீரே கொண்ட மறைச்சீரா :-d :-d :-d

    ReplyDelete
  2. //சீனு

    “ I Think I don’t Like Gilmaa Movies….”

    மெஷினில் 6 பல்ப் எரிகிறது.//

    மிச்சம் நாலும் எதுனால எரியாம இருந்து இருக்கும்

    ReplyDelete
  3. //512 ரூபாய்ய எடுத்துகிட்டேன், அந்த தப்புகாக போட்டதுதான் இந்த 1 ரூபாய்.//

    இதெல்லாம் நேர்மையின் பகுதிகளின் ஒரு அங்கம்னே..

    ReplyDelete
  4. வசு ஜோக்குதான் டாப்பு....பல்பு பல்பு ...

    ReplyDelete
  5. அடப்பாவிகளா! உங்க நேர்மையை நிருப்பிக்க நெருப்புல ஆயிரக்கணக்குல அள்ளிக்கொட்டி இருக்கீங்களே! நேர்மையை நிரூபிச்சு இந்திய ஜனாதிபதியாவா உக்காரப்போறீங்க!?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் உங்க தம்பிக அக்கா.. அதான் புத்திசாலிகளா இருக்காங்க..

      Delete
  6. பல்பு ஜோக்கு விழுந்து விழுந்து சிரிச்சேன்..

    ReplyDelete
  7. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    ReplyDelete
  8. வணக்கம்
    புத்திமான் பலவான் என்பது போலதான்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. ஹாஹாஹா.......செம...கும்மிதான்....

    ReplyDelete
  10. ஹாரி உங்கள எங்க ப்ளாக்லயும் கும்மி அடிக்க வைச்சுட்டோம்.......உங்க கும்மில நாங்களும் சேந்துட்டோம்.....

    ReplyDelete
  11. கும்மிய இவ்வளவு நாள் எப்படியோ மிஸ் பண்ணிப்புட்டமே.....

    ReplyDelete