Searching...

Popular Posts

Tuesday, July 1, 2014

தமிழ் சினிமாவின் அடுத்த "கேப்டன்" யார்?? - VOTE FAST

11:22 PM



"புரட்சி கலைஞர்" எனவும் "கேப்டன்" எனவும் தனது லட்ச கணக்கான ரசிகர்களால் அழைக்கப்படுவர் விஜயகாந்த். 90 களில் வசூல் சாம்ராஜ்யம் நடத்திய விஜயகாந்த் அரசியலிலும் அதகளம் செய்ய தவறவில்லை. மாபெரும் கட்சியை கூட தோற்கடித்து மிக குறுகிய காலத்திலே எதிர் கட்சி தலைவருமானார். 

‘விஜயராஜ்’ என்னும் இயற்பெயர்கொண்ட விஜயகாந்த் அவர்கள், 1952  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25  ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், மதுரை  மாவட்டதிலுள்ள “திருமங்கலம்” என்ற இடத்தில் ‘கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும்’ ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார்.

கேப்டன் எனப் பெயர்வரக் காரணம்

‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘சத்ரியன்’, ‘புலன் விசாரணை’ போன்ற திரைப்படங்களில் அற்புதமானக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 1991 ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற திரைபடத்தில் நடித்தார். 

இத்திரைப்படம் அவருக்கு 100வது படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. சினிமா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்த இதில், ஒரு காட்டிலாகா அதிகாரியாக நடித்து, பேரும் புகழும் பெற்றதால், இவர் மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

சூப்பர் ஸ்டார் அப்புறம் கேப்டன்

தமிழ் சினிமாவில் உச்சமாக இருக்கும் "சூப்பர் ஸ்டார்" பட்டம் எப்படி ஜனங்கள் மத்தியில் பிரபல்யமோ அத்தனை தூரம் "கேப்டனும்" மக்கள் மத்தியில் இன்று வரை பிரபல்யமாகவே இருந்து வருகிறது.

நிற்க 

அத்தனை சீக்கிரம் அந்த இடத்தை பிடிப்பது என்பது கூடாத ஒரு விடயம். காரணம் "கேப்டன்" விஜய காந்தினை போல சினிமாவில் பெயர் பெற்றவரும், அரசியல் சாணக்கியம் தெரிந்த ஒருவரால் மாத்திரமே தான் இந்த இடத்தை பிடித்து விட முடியும். 

பார்க்கலாம் யார் வெற்றியை பெறுகிறார்கள் என்பதனை..

VOTE FAST

3 comments:

  1. என் வோட்டு விஷாலுக்கே.. கலர்லயும் கம்பீரத்துல யும் அடுத்த கேப்டனா வர தகுதியுள்ள ஒரே ஆள்..

    ReplyDelete