Searching...

Popular Posts

Sunday, July 6, 2014

பட்டம் படும் பாடு - அடுத்த "கேப்டன்" யார்??

7:35 AM
பட்டம் படும் பாடு

ஆங்கில சினிமாக்களில் இந்தி சினிமாக்களில் இல்லாத ஒரு மாயை, தமிழ் சினிமா ரசிகனை ஆட்டுவிக்கின்றது என்றால் அது தான் "நாயக வழி பாடு" தான். தன்னுடைய ஆதர்ஷ நாயகனுக்கு ஒரு அடைமொழி கொடுத்து தாங்களும் மகிழ்ந்து அவரையும் மகிழ்விக்கும் ஒரு பாரம்பரியம் காலம் காலமாக இருந்தே வருகிறது.

பட்டங்கள் இரு வகை படும்

1. துறை சார்ந்த சிறப்பில் வழங்கப்படும் பட்டம்
2. மக்களால், தயாரிப்பாளர்களால் வழங்கப்படும் பட்டம்

முதலாவது பிரிவில் துறை சார்ந்த சிறப்பு எனப்படும் போது டாக்டர், பத்மஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியோ, தாதா சாகிப் பால்கே போன்றவற்றை கூறலாம்.

இவற்றில் நடிகர்கள் டாக்டர் (விஜய்), பத்ம  ஸ்ரீ (கமல்), பத்ம பூஷன் (ரஜினி), செவாலியோ (சிவாஜி) போன்றவற்றை தனதாக்கி இருகிறார்கள்.

மிக சிலரே தங்களுக்கு அடை மொழியாக சினிமாவிற்கு பயன் படுத்துவார்கள். (விவேக், கமல்)



ரெண்டாவது பிரிவு

[புரட்சி] [திலகம்] [தளபதி] [சூப்பர்] [நாயகன்] [தமிழன்] [மக்கள்] [கலைஞர்] [நவரச] [இளைய]

கிட்டத்தட்ட இவ்வளவு தான் மூலமாக இருக்கும் அடைமொழிகள் ஆனால் இவற்றின் மூலம் தயாரிக்க பட்ட அடைமொழிகள் ஏராளம்.

மேலே உள்ளவற்றில் யாதேனும் ஒன்றை இன்னொன்றோடு இணைத்து பயன்படுத்தி கொள்ளலாம்..

உ+தா

[புரட்சி] + [திலகம்] = எம்.ஜி.ஆர் 

[புரட்சி] + [தளபதி] = விஷால் 

[தளபதி]= ரஜினி 

[இளைய] [தளபதி] = விஜய் 

இதில் தளபதியை கட் பண்ணி விட்டு [திலகம்] பயன் படுத்தி பார்ப்போம்

[இளைய] [திலகம்] = அட இப்போ பிரபு  ரெடி 

இப்படி நீங்களும் உங்கள் வீடுகளில் முயற்சித்து பார்க்கலாம் செம ஜாலியாக இருக்கும்..

அப்படியே அடுத்ததாக காமெடி கும்மி பெருமையுடன் வழங்கும் அடுத்த கேப்டன் யார்?? எனும் சர்வேக்கு ஓட்டு போட்டு செல்லுமாறு கேட்டுகொள்ளுகிறோம். 



 

1 comments: