Searching...

Popular Posts

Thursday, August 14, 2014

"ஹார்லிக்ஸ்" வித் "ஹாரி" (3) - "மின்னல் வரிகள்" கணேஷ் ஸ்பெசல்

11:28 PMபதிவுலகில் பொக்கிஷமாக காக்க வேண்டிய சிலர் இருக்கின்றார்கள். அந்த மிக சிலரில் முக்கியமானவர் நம்ம வாத்தியார் மின்னல் வரிகள் "கணேஷ்". 

அழகிய தமிழ், சரளமான போக்கு, ஆபாச பதிவுகளுக்கு தடை என்று தனக்கென்று ஒரு பக்கா ஸ்டைல் கொண்டு பதிவுலகை கலக்கி வரும் வாத்தியாரை ஆவியின் ஹார்லிக்ஸ் வித் ஹாரியில் அப்படியே பிடித்து அவருக்கும் கையில் ஹார்லிக்ஸை கொடுத்து பேட்டியை ஆரம்பித்தோம். 

ஹாரி - முதலில் ஒத்து கொண்டதற்கு நன்றி வாத்தியாரே.. முதலாவது கேள்வியே உங்க பெயரை பற்றி தான்.. 
 
வாத்தியார் என்று பெயர் எப்படி வந்திச்சு?? நீங்க பாட்டு வாத்தியாரா?? டான்ஸ் வாத்தியாரா? இல்லை கம்பு சுத்துற வாத்தியாரா?? அப்படியே வாத்தியார்னு சொல்லும் போது MGR ரசிகர்கள் பொங்குனாங்களா?? இல்லையா??

வாத்தியார் - கண்ணா... பட்டம் பதவில்லாம் நாம தேடிப் போகக் கூடாது. தானா நம்மைத் தேடி வரணும். ஹா... ஹா... ஹா... நான் எந்த வித்தைக்கும் வாத்தியார் இல்ல... நம்ம சீனுப் பயலுக்கு சிறுகதை எழுதறதுல இருக்கற நுணுக்கங்கள் சிலதையும் தமிழ்ல வார்த்தைகளை ஜாக்ரதையாக் கையாள வேண்டிய அவசியத்தையும் (முன்னோடிகள் எனக்குச் சொன்னதை) விரிவாச் சொன்னேன். அவன் என்னை வாத்தியார்னு கூப்பிடப் போக, ஆவியும் ஸ்பையும் அதை வழிமொழியப் போக அப்படி வந்து ஒட்டிக்கிட்டதுதான் வாத்தியார் பட்டம். சினிமா உலகத்துல வாத்தியார்னா எம்.ஜி.ஆர். வலையுலகத்துல வாத்தியார்ன்னா அது சுஜாதா தான். நியாயமாப் பாத்தா சுஜாதா ரசிகர்கள்தான் பொங்கிருக்கணும் ஹாரி

ஹாரி - சூப்பர் வாத்தியார்ஸ்.. அடுத்து ஒரு சீரியஸ் கேள்வி.. நிச்சயம் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்த கேள்விகள் இவை.. வாசிப்பில் பல பரிமாணங்கள் இருப்பதாக ஆங்காங்கே சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள். சுஜாதா, ராஜேஷ் குமார் போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களை வாசிப்பின் ஆரம்ப நிலையாகவே எண்ண வேண்டுமாய் கருத்துக்கள் இருக்கின்றன. அப்படி எந்த வகையில் வாசிப்பின் பரிமாணமும், எழுத்தின் பரிமாணமும் ஒரு படைப்பின் நிலையை தீர்மானிக்கின்றது?? 

வாத்தியார் - எளிய வாசகனுக்கும் சுலபமாகப் புரிகிற விதத்தில் எழுதுகிறவங்க இவங்கன்றதால இவங்க ஆரம்ப நிலைன்னும் இவங்க எழுதறது இலக்கியம் இல்லன்னும் சொல்றாங்கப்பா. என்னைப் பொறுத்தவரை படிக்கிற சராசரி வாசகனுக்கும் தெளிவாப் புரியணும். படிக்கிற அந்த புத்தகத்துலருந்து ஏதாவது ஒரு (நல்ல) விஷயம் வாசகனைப் போய் அடையணும். அதைத்தான் இலக்கியம்னு சொல்வேன். ராஜேஷ்குமார் நாவலின் அத்தியாயங்களுக்கு முன்னால தர்ற பெட்டிச் செய்திகள் நிறைய அறிவை வளர்ப்பவைதான். அவர் இலக்கியவாதின்னுதான் நான் சொல்லுவேன். 

ஹாரி - பலரது நிலைப்பாடு உண்மையில் இது தான்.. //பெட்டிச் செய்திகள்// ராஜேஷ் குமாரின் பெட்டி செய்திகளுக்கு உண்மையில் நானும் ஒரு ரசிகன் தான். 

உங்களுக்கு பிடித்த டாப் 10 எழுத்தாளர்கள்?? வாசித்தத்துலையே டாப் புக்ஸ்னா இது தான் யா என்று சொல்ல கூடிய டாப் 10 புத்தகங்கள்??

வாத்தியார் - நான் தீவிர இலக்கிய வாசகன் இல்ல ஹாரி. சராசரியாப் படிக்கற ஆசாமிதான். அதுவும் தமிழ்ல மட்டும். அதனால... என் ரசனை கொஞ்சம் லோக்கலாத்தான் இருக்கும்.  1. புதுமைப்பித்தன், 
2.ஜெயகாந்தன், 
3. சாண்டில்யன், 
4. தி.ஜானகிராமன், 
5. கல்கி. 
6. சுஜாதா, 
7, அனுராதா ரமணன், 
8,பட்டுக்கோட்டை பிரபாகர், 
9.சுபா, 
10.ராஜேஷ்குமார்.

டாப் 10 புத்தகங்கள் 

1. திருக்குறள், 
2. பாரதியார் பாடல்கள், 
3.என் சரித்திரம் பை உ.வே.சா, 
4. வியாசர் விருந்து பை ராஜாஜி. 
5.பொன்னியின் செல்வன் பை கல்கி, 
6. யவனராணி பை சாண்டில்யன். 
7. குறிஞ்சி மலர் பை நா.பார்த்தசாரதி. 
8. மோகமுள் பை தி.ஜானகிராமன், 
9. கனவுகள் இலவசம் பை பட்டுக்கோட்டை பிரபாகர், 
10. பெண் இயந்திரம் பை சுஜாதா.

ஹாரி - சூபர்வ் நிறைய வாசிச்சு இருக்கீங்க.. நீங்க போட்டு இருக்குற எழுத்தாளர்கள்ல நானு 50% கூட இன்னும் தொடல.. நீங்கள் பதிவுலகிற்கு வர தூண்டுகோலாய் இருந்த Jackie Sekar,Venugopalan Rengan, C P Senthil Kumar இந்த மூவரினதும், பிளஸ் எது, மைனஸ் எது என்று எவற்றை நினைக்கின்றீர்கள்??
வாத்தியார் - சரிதான்... நான் மூணு பேத்துகிட்டயும் அடிவாங்கணும்னு ப்ளான் பண்ணி கேள்வியக் கோத்துவுடுது பயபுள்ள.... நாம யாரு... எத்தன சந்துல அடிவாங்கிருக்கோம். பயப்படுவமா....?  

1. ஜாக்கி சேகரின் பலம் - அன்று முதல் இன்று வரை எந்த பந்தாவும் இல்லாமல் எளிய மனிதனாகப் பழகுவது. பலவீனம் - அந்த எளிய மனிதன் பயன்படுத்தும் சில வசவுச் சொற்கள். 

2. வேணுகோபாலன் என்கிற சேட்டைக்காரனின் பலம் - குபீர் சிரிப்பை பேச்சிலும் எழுத்திலும் வரவழைக்கும் ஹாஸ்ய உணர்வு. பலவீனம் - நிறைய எழுதாமல் குறைவாக எழுதுவது.

3. சி.பி.செந்தில்குமாரின் பலம் - நாளொன்றுக்கு மூன்றும் அதற்கு மேலும் பதிவுகள் எழுதுவது (எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் அது) பலவீனம் - அப்படி எழுதுவதற்காக ‘சுட்ட’ பழங்களைப் பலசமயம் தருவது.

ஹாரி - ஹைபோதட்டிகல் கேள்வி தான்.. இவரு இன்னும் under-rated யா என்று நினைக்குற பதிவர்?? இந்தாளு எல்லாம் over-ratedயா என்று நினைக்குற பதிவர்???

வாத்தியார் - சேட்டைக்காரன் அண்ணா... அவரை நகைச்சுவை எழுதறவராத்தான் உங்களுக்குத் தெரியும். சீரியஸான கதைகளையும் புள்ளிவிவரங்களோட பல துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதக்கூடிய திறமை படைத்தவர் அவர்னு நிறையப் பேருக்குத் தெரியாது. அவரின் எழுத்துத் திறமைக்கு இந்நேரம் இன்னும் பெரிய இடத்துல வெச்சு கொண்டாடப்பட்டிருக்கணும்பா...  

இன்னொரு ரகத்தைப் பத்தி நான் எதுவும் சொல்றதா இல்ல.... நோ கமெண்ட்ஸ்.

ஹாரி - மேலிருந்து கீழ் தான் ஆர்டர்.. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதில் கூற வேண்டும்..

MGR, சிவாஜி = ???
ரஜினி, கமல் = ???
விஜய், அஜித் = ???
விக்ரம், சூர்யா =???
சிம்பு, தனுஸ் = ???

ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பதில் கூற வேண்டும்..

அப்படி அந்த பேவரிட் சொல்றதோட "கொய்யால இவரு நடிச்சதுலே சூர மொக்கை படம் இதான்யா" என்று நினைக்குற படம் பெயரும் சொல்லுங்க??
 
 

வாத்தியார் -வாத்தியார் - பிடிச்சது உலகம் சுற்றும் வாலிபன், சூரமொக்கை நவரத்தினம். சிவாஜி - பிடிச்சது முதல்மரியாதை, சூரமொக்கை லாரிடிரைவர் ராஜாக்கண்ணு, ரஜினி - பிடிச்சது முள்ளும் மலரும். சூரமொக்கை காளி, கமல் - பிடிச்சது அவ்வை சண்முகி. சூரமொக்கை சூரசம்ஹாரம், விஜய் - பிடிச்சது துள்ளாத மனமும் துள்ளும் சூரமொக்கை சுறா, அஜித் - பிடிச்சது காதல் கோட்டை சூரமொக்கை ஜனா, விக்ரம் - பிடிச்சது தில் சூரமொக்கை காசி. சூர்யா - பிடிச்சது கஜினி சூரமொக்கை நேருக்கு நேர், சிம்பு - பிடிச்சதுகோவில். சூரமொக்கை காளை, தனுஷ் - பிடிச்சது திருவிளையாடல் ஆரம்பம் சூரமொக்கை நய்யாண்டி.. 

ஹாரி -  ராஜாவா?? ரஹ்மானா??

வாத்தியார் -பீட்சாவை எப்பயாச்சும்தான் தின்னலாம். ஆனா இட்லி தோசைய எப்பவும் சாப்பிடலாம் ஹாரி. ரஹ்மான் பீட்சா, ராஜா நம்மளுக்கு நெருக்கமான இட்லி தோசை. (சாய்ஸ் குடுக்காம கேட்ருந்தா கண்ணதாசெம்மெஸ்விதான் புடிக்கும்னு சொல்லிருப்பேன்)

பலவகையான தலைப்புகள்ல எழுதுறிங்க.. நான் பார்த்த வரைக்கும் மோசமான பதிவுகள், நோகடிக்குற பதிவுகள் குறைவு... அல்லது.. இல்லைனே சொல்லலாம்.. எப்படி சாத்தியம் ஆச்சு??

நான் யார் கிட்டயும் நெகடிவ் பக்கத்தைப் பாக்கறதில்ல ஹாரி. நிறைய அடிகள், அவமானங்கள், துரோகங்கள் பார்த்துட்டதால வலின்னா எப்படி இருக்கும்னு தெரிஞ்சதால மத்தவங்களுக்கு என்னால அது துளியும் வரக் கூடாதுன்னு நெனக்கறேன். எதனாலயோ என்னையும் நிறையப் பேருக்குப் புடிக்குது. அதனால தானே அமைஞ்சவைதான் இந்த விஷயங்கள்.  

ஹாரி - புதுசா எழுத வர்றவங்களுக்கு ஒரு 5 tips??

வாத்தியார் -

 1) கண்ணில் படுகிற. கேள்விப்பட்ட சுவாரஸ்ய விஷயம் எதுவாக இருந்தாலும் சற்றே கற்பனை சேர்த்து மெருகேற்றி எழுதுங்கள். செம்பு கலந்தால்தான் தங்கம் நகையாகும். ரைட்டா...? 

 2) உங்களுக்குத் தெரியாத விஷயம் பற்றியோ, பார்க்காத ஊர் பற்றியோ எழுதாதீங்க. நல்லாத் தெரிஞ்சதை செய்ங்க. 

3) உங்களின் எந்த ஒரு எழுத்தும் உங்க வீட்ல இருக்கற பெண்களும் படிக்கக் கூடியதா இருக்கணும்கறத மனசுல பதிய வெச்சுக்குங்க நல்லா

 4) புரியாத வார்த்தைகளைப் போட்டு உங்கள் அறிவைப் பறை சாற்றிக்கணும்கற தாகத்தை மட்டுப்படுத்திக்கிட்டு எல்லாரும் புரிஞ்சுக்கற மாதிரி எளிமையா எழுதுங்க. 

5) லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.. யாருடைய மனமும் புண்படுகிற மாதிரி தனிமனிதத் தாக்குதலா எதையும் எழுதாதீங்க. கருத்துச் சொல்றது உங்க சுதந்திரம்னாலும் அது கேக்கறவனும் ரசிக்கற மாதிரி இருக்கணும். 

 
வாத்தியாரோட பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல.. அதனால ஹார்லிக்ஸ் வித் ஹாரி அடுத்த பகுதியிலும் தொடரும்..  


"ஹார்லிக்ஸ்" வித் "ஹாரி" (4) - "மின்னல் வரிகள்" கணேஷ் ஸ்பெசல்

 

12 comments:

 1. ஹாரி கலக்கிட்டீங்க! அவரு ப்ளாகுல சொன்னது....வைச்சு சூப்பரா கலக்கிட்டீங்க...

  //சினிமா உலகத்துல வாத்தியார்னா எம்.ஜி.ஆர். வலையுலகத்துல வாத்தியார்ன்னா அது சுஜாதா தான். நியாயமாப் பாத்தா சுஜாதா ரசிகர்கள்தான் பொங்கிருக்கணும் ஹாரி// சுஜாதா பத்தி சொன்னதுக்காக...இது......

  ஹா நம்ம வாத்தியார் எழுத்தாளர்கள் லிஸ்ட்தான் எங்களதும்....சூப்பர்.....

  ரொம்ப ரசிச்சோம் ஹாரி....அடுத்த ஹார்லிக்ஸ் யாருக்கு? வெயிட்டிங்க்....

  ReplyDelete
  Replies
  1. இவரைப் பிடிங்க ஹாரி.. நிறைய தேறும்.. ஹஹ்ஹா ;)

   Delete
  2. ப்ளாக்குல சொன்னது இல்லீங்க துளசி ஸார்... உங்களுக்காக தனியா ஹாரி முகநூல்ல எடுத்த பேட்டி இது. :)

   Delete
 2. நம்ம வாத்தியாரோட பதில்கள் எல்லாம் சூப்பர்!!! செமையா இருந்துச்சி!!! இன்னும் ரெண்டு கேள்வி கேட்ருகலாம்ல ணா?

  ReplyDelete
  Replies
  1. டேய்... அதான் தொடரும்னு போட்ருக்கார்ல ஹாரி... சரியா எதையும் படிக்க மாட்டியா நீயி... ஆனாலும் பதில்கள் சூப்பர், செமைன்னு சொன்னதால உன்னை மன்னிச்சிடறேன்.... டாங்ஸு.... :p

   Delete
 3. Replies
  1. கைதட்டிப் பாராட்டின உங்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீ. (o)

   Delete
 4. எங்கய்யா புடிச்ச ஹாரி என்னோட இந்தப் போட்டோக்களை.... செமையா வேலை பாத்திருக்க... என் அபிமான எழுத்தாளர்களின் படங்களோட படிக்கையில ரொம்ப சந்தோஷமான அனுபவமா இருந்துச்சு. ஹாட்ஸ் ஆஃப் டு ஹாரி.... (h)

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமாரின் பலம் - நாளொன்றுக்கு மூன்றும் அதற்கு மேலும் பதிவுகள் எழுதுவது (எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன் அது) பலவீனம் - அப்படி எழுதுவதற்காக ‘சுட்ட’ பழங்களைப் பலசமயம் தருவது//

  ஒரே நாள்ல பத்து பதிவு கூட போட்டுருக்கான் அந்த அண்ணன் ! நல்லா பிடிச்சு திட்டினேன், எம்புட்டு திட்டினாலும் சிரிச்ச முகத்தோடு வாங்கிகிடுரதுல அண்ணன எனக்கு ரொம்ப பிடிக்கும் !

  பதில்கள் யாவும் சூப்பர் அண்ணே...

  ReplyDelete
 6. வலையில் எங்கு பார்த்தாலும் வாத்தியார் பால கணேஷை ஏகத்துக்குப் புகழ்ந்து தள்ளுகிறார்களே, ஏதாவது பதவிக்குப் போட்டியடப் போகிறாரோ? முன்கூட்டியே வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 7. எல்லா பதில்களும் அருமை!

  எழுத்தாளர் படங்களில் சு- மட்டும் இருக்கிறார். பா- எங்கே?

  ReplyDelete