Searching...

Popular Posts

Friday, August 8, 2014

பேஸ்புக் போராளிகளும், போராட்டங்களும்

4:16 AM



கடந்த வருடங்களாக அல்லது மாதங்களாக நாம் எத்தனையோ புனித போர்களை இந்த பேஸ்புக் தளத்திலே நிகழ்த்தி இருப்போம். 

ஆத்திக நாத்திகத்திற்காக, இலங்கை இந்தியாவிற்க்காக, இஸ்ரேல் பாலஸ்தீன்காக, சுஜாதா ராஜேஷ் குமாருக்காக, SPB மலேசியா வாசுதேவனுக்காக, இளையராஜா ரஹ்மானுக்காக, கலைஞர் மம்மிக்காக ஏன் ரஜினி கமலிற்க்காக, விஜய் அஜித்திற்க்காக என்று இவை எண்ணில் அடங்கா..

கை தசைகள் அதிர, விரல்கள் பாய, கீ போர்ட் தெறிக்க, FONTடுகள் குவிய என்று நாம் போர் புரிந்தது மக்களை விழிப்புணர்வு பாதையில் நடத்த வேண்டும் என்ற ஒற்றை காரணம் மட்டுமே.. 

இதில் எத்தனையோ போர்களில் நாம் வென்று இருப்போம்.. அன்று இரவு உறக்கம் எப்படி ஒரு நிம்மதியான உறக்கமாய் கழிந்து இருக்கும். அது ஒரு பீலிங் டிவைன்.

ஆனால் காலம் செல்ல வாரங்கள் கடக்க நமக்கு ஒரு டுவிஸ்ட் காத்து இருக்கும்.

அது தான் வேறு ஒரு டைம்லைனில், வேறு ஒரு குருப்பில் இதே விடயத்திற்க்கான விவாதம் நடந்து கொண்டு இருக்கும். 

அந்த இடத்தில தான் நாம் மனம் வருந்தும் ஒரு நிலை நமக்கு உண்டாகும். அது தான் நமக்கு கிடைக்க வேண்டிய உரிய மரியாதை அல்லது அங்கீகாரம். 

அந்த இடத்தில நாம் எதிர் பார்க்கின்ற அந்த மரியாதை கிடைக்கின்றதா?? என்று கேட்டால் பதில் - இல்லை தான்..

கடவுள் இல்லைன்னு ஒருத்தனும், சுஜாதா மொக்கை ரைட்டர்யான்னு ஒருத்தனும், அஜித்திற்கு நடக்க மட்டும் தான் தெரியும்னும் ஒருத்தனும், விஜய்க்கு ஆட மட்டும் தான் தெரியும்னு ஒருத்தனும் மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பித்து இருப்பான்..

கடந்த கால போர்களில் களைத்து போயிருக்கும் நமக்கு மறுபடியும் அதே போராட்ட குணத்தோடு இந்த போரிலும் பங்கு பெற இயலுமா?

என்னை கேட்டால் நிச்சயம் சொல்ல முடியும் சற்றே களைப்பாகவும் அதை விட அசதியாகவுமே இருக்கும்.. 

அந்த நிலையில் என்ன நிகழும். சுஜாதாவும், ரஜினியும், இளைய ராஜாவும் என்று; நமக்கு பிடித்தவர்கள் எம் கண் முன்னாலே தோல்வி பாதையில் சென்று கொண்டு இருப்பதை காண வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் அல்லவா?? 

எதற்கு என்ன வழி?? இதற்கு என்ன தான் தீர்வு?? 

கேட்டால் நிச்சயம் எம்மிடம் பதில் இருக்காது.

மறுபடியும் அதே போர் வெறியை நெஞ்சில் ஊற்றி கொண்டு, போராட்ட குணத்தை இதயத்தில் ஆழ்ந்து பதித்து கொண்டு நாம் தெரிந்து கொண்ட "ஆளுமை"க்காக முதலில் இருந்தே தான் ஆரம்பிக்க வேண்டும்..

ஆரம்பிப்போம்.. வெற்றியை சுதந்தரித்து கொள்ளுவோம்.. 

வாழ்க பேஸ்புக் போராளிகள் 
வளர்க போராட்டங்கள்

3 comments:

  1. என்னங்னே!! இம்புட்டு சொல்லிப்புட்டு, போராட்டத்த ஸ்டார்ட் பண்ணாம போறிங்க!!! அப்படியே ஒரு ஸ்டேடஸ் போட்டு வம்பிலுக்கலாம்ல!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த வாரம் "செங்கோவி காப்பி ஸ்பெசல்" வாரம்.. எங்க நடக்கும்னு தெரியாது.. எங்க நடந்தாலும் வந்து இணைஞ்சுகோங்க..

      Delete
  2. யப்பா அமைதியா போய்கிடட்டுமே...அப்புறம் ஃபேஸ் புக் ஹிஸ்ட்ரி புக்கா மாறிடப் போகுதுப்பா......

    ReplyDelete