Searching...

Popular Posts

Saturday, August 16, 2014

தென்காசி நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....

இணையத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க போகும் எங்கள் பதிவர் குல திலகம், தென்காசி மன்னன், தேவதைகளின் கண்ணன், இரவுப் பணிகளை சளைக்காமல் செய்யும் சாதுர்யன், நாடோடி எக்ஸ்பிரஸின் ஓனர் 
திருவாளர் சீனு அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வதில் கும்மி சொல்லெணா மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது!

தோழர் தம்பி கும்மிக்காக பிரத்யோகமாக வழங்கிய சில புகைப்பட காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமையடைகிறோம்!


அருகிலிருந்த மங்கையிடம் கடலை போட்ட க(ளை)ளிப்பில் அண்ணன் சீனு ...  

டெரர் நாயகனுக்கு மாலை அணிவித்து மகிந்த தருணமொன்றில்.. (அருகிலிருப்பவர் பதிவுலக சூப்பர் ஸ்டார்) 

இடைவெளியில்லாமல் வரும் காதலிகளின் குறுந்தகவல்களை வாசித்துக் கொண்டிருப்பவர் தேவதைகளின் கண்ணன் சீனு ... 


தீவிரவாதி, இயக்குனர் கேபிள் சங்கருடன் நம்ம நாயகன் சீனுவின் உற்சாக சிரிப்புடன் ....


யோவ் ஆவி பாஸ் உமக்கு சரியா போட்டோ புடிக்க தெரியலை என்று சினத்துடன் சீரிய காட்சி ...

சீனுவின் சினத்தைக் கண்டு மிரண்ட ஆவி பாஸ், அடுத்த நொடியே எடுத்த பிரமாதமான காட்சி ... 

மாலை வேளையொன்றில் விஜயா மாலில் கட்டம் போட்ட சட்டையில் திட்டம் போட்டு வந்த நம்ம நாயகன்..(பின்னாடி இருப்பவரை பற்றி சீனுவிடம் கேட்டுக்கொள்ளுங்கள்)
   


பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மக்கள் கூட்டம் அலைமோதும், மேடவாக்கம் திணறும், அதனால் பொது மக்களுக்கு இடைஞ்சல் வரும் என்று பொது நலன் கருதி, தனது ஆதர்ச நாயகிகளோடு தோழர் தம்பி மூணாறில் இரகசியமாக தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ....

இன்னும் இன்னும் சாதித்து இதுபோலவே அன்போடு, நட்போடு இருந்திட உங்களோடு சேர்ந்து வாழ்த்துவதில் கும்மி பெருமை கொள்கிறது ...

மனம் பொங்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் தம்பி .... 

11 comments:

 1. hahaha..வாழ்த்துகள் வாழ்த்துகள்!!

  ReplyDelete
 2. அப்படித்தான் இன்னும் இன்னும் ......ப போட்டாக்களை எதிர்பார்த்தேனுங்க ..

  காப்பி பெர்த்து டே டோலர் ஜீனு ...

  ReplyDelete
 3. சீனுவோட நான் இருக்கற போட்டோ இதுநாள் வரையில எனக்கு பார்த்த நினைவில்ல. எங்கய்யா புடிச்ச இத்தனை அழகான புகைப்படங்களை...? தென்காசி சிங்கத்திற்கு இனிப்பான, இதயம் நிறைந்த பிறந்ததின நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனு ஐயா!

  ReplyDelete
 5. படங்கள் மிக அழகு.பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 6. ஹாஹாஹா தென்காசி நாயகனின் பிறந்த தினத்தை ஒட்டி ஸ்பெஷலாக அவரைச் சுற்றி அடித்த கும்மி சூப்பர் ஹாரி!

  தென்காசி நாயகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க மக்கள் கூட்டம் அலைமோதும், மேடவாக்கம் திணறும், அதனால் பொது மக்களுக்கு இடைஞ்சல் வரும் என்று பொது நலன் கருதி, தனது ஆதர்ச நாயகிகளோடு தோழர் தம்பி மூணாறில் இரகசியமாக தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ....//

  நிதர்சனமான உண்மை. தென்காசி சிங்கத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  பி.கு: இங்க அமெரிக்காவுல கூட அவருக்கு சில தீவிர பெண் விசிறிகள் இருக்குறாங்கப்பா. அவங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க சொல்லி ரொம்ப கெஞ்சுறாங்க. கொஞ்சம் நண்பர அவங்களோட வேண்டுதல்களை எல்லாம் பரிசீலனை செய்யச் சொல்லுங்க :)

  ReplyDelete
 8. ஹா ஹா ...இண்டர்நெட்ல இப்படித்தான் சிரிக்க முடியுது.... இனிய வாழ்த்துக்கள் தல...

  ReplyDelete
 9. ஹேப்பி பர்த்டே. சீனு அண்ணா .. விழா நாயகன. ஆளையே. காணோமே !!!!!

  ReplyDelete
 10. ஆகஸ்ட் பதிவா. வாழ்த்துகள் நண்பருக்கு :)

  ReplyDelete