Searching...

Popular Posts

Wednesday, November 19, 2014

வாழ்த்துக்கள் வாசகர் ஹாரி ....


முன்னூறு பெரு நாவல்களும், ஐநூறு குறு நாவல்களும் எழுதிய களைப்பில் இனி எழுத்துக்கு தற்காலிக இடைவெளி விட்டு வாசகனாக பல வருடமாய் சுற்றித்திரியும் ஆண் மான், எங்கள் சிங்கம், காமெடி கும்மியின் நிரந்தர தலைவர்?, "மக்கள் பதிவர்", ஹாரியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழும் இவ்வேளையில் சில மகிழ்ச்சி கரமான செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சங்கம் பெருமை கொள்கிறது. 

எப்பவாது பதிவெழுதும் வரலாற்று சுவடுகள்  தோழருக்கு கடும் போட்டியை வழங்குவதில் பெரும் வல்லமை படைத்தவர் நம்ம ஹாரி, அட ஆமாங்க கடந்த சுமார் பத்து வருடங்களுக்கு இருவரும் மேற்படிப்பு என்கிற பெயரில் கொலையோ கொலை செய்து வருகிறார்கள். இணையத்திலும் முன்பு போல் உலாத்துவதில்லை. 

தேர்வுக்கு படிக்க போகிறோம் என்பதை, ஏதோ ஜெயிலுக்கு போகிறோம் என்கிற ரேஞ்சில் சொல்லிவிட்டு செல்லும் இரு மூத்தப் பதிவர்களும், தேர்வுக்குரிய ரிசல்ட்டை சொல்லாமல் மறைப்பதில் மகா புத்திசாலிகள். 

இன்றைய தினத்தில் பிறந்த தினத்தை கொண்டாடி மகிழும் தோழர் சாரி வாசகர் ஹாரி, இனி வாரம் ஐந்து பிளாக் தொடங்கி, ஒரு நாளைக்கு நானூறு பதிவு எழுதப் போவதாக, கண்ணாடி மச்சானிடம் சொல்ல ஒரு வாரமாக காய்ச்சலில் படுத்திருப்பதாக நம்பத்தகுந்த செய்திகள் வந்து மண்டையை உசுப்புகிறது.



மேலும் பால பாடத்தை படிக்கவே நேரமில்லாத நம்ம தல ஹாரிக்கு எப்படிய்யா சினிமா செய்திகளை மட்டும் அப்டேட்டில் அள்ளி வீசுகிறார் என்று நித்தம் தீவிரவாதி கேட்கும் கேள்விகளுக்கு வானா சூனா தான் பதில் சொல்லியாகனும் என்று தன்னடக்கத்துடன் அவரை கோர்த்து விடுகிறேன்.

இந்த வருடத்தில் எப்படியாவது தனது கனவுக்கன்னியை கரம் பிடித்து விடுவேன் என்று அடம்பிடித்து சொல்லியிருக்கும் மக்கள் பதிவர், கும்மியின் முதல்வர் வாசகர் ஹாரிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களோடு, கனிவான பிறந்த தின வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் கும்மி பேரானந்தம் அடைகிறது..

உள்ளம் பொங்கும் வாழ்த்துக்கள் தலைவரே ....  

  

7 comments:

  1. வாசகர் ஹாரிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் மச்சி... ஆமா எப்போ கலியுகம்... ச்சே.. ஆங்.. கல்யாணம் :P

    ReplyDelete
  3. சகோ ஹாரிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி மணி அண்ணா.. ஹிஸ்டரிணா.. நேசன்ணா.. டிடிணா..

    ReplyDelete
  5. அரசரே ஈரோ ஆனவுடன் உங்கள் குசும்பு ஒன்றரை டான் சாஸ்தி ஆகி இருக்குறது.. உங்கள் வாழ்த்துக்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்..

    ReplyDelete
  6. //தேர்வுக்குரிய ரிசல்ட்டை சொல்லாமல் மறைப்பதில் மகா புத்திசாலிகள். //

    ஏனோ தெர்ல குபீர்னு சிரிப்பாயிடிச்சு.. :)) :)) :))

    ReplyDelete